விவாகரத்து வதந்திக்கு மத்தியில் துபாயில் நடந்த சம்பவம்.. ஐஸ்வர்யா ராய் பெயர் மாறி இருக்கு!
சென்னை: நடிகை ஐஸ்வர்யா ராய் அவருடைய கணவர் அபிஷேக் பச்சனை விவாகரத்து செய்யப் போகிறார் என்ற வதந்திகள் பரவி வரும் நிலையில், துபாய் நிகழ்ச்சி ஒன்றில் ஐஸ்வர்யா ராய் கலந்து கொண்ட போது அவருடைய பெயரில் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. இந்த சம்பவம் இணையத்தில் அதிகமாக பேசப்படுகிறது.
சமீபத்தில் பல பிரபலங்கள் அடுத்தடுத்து விவாகரத்து செய்தியை அறிவித்து வருகிறார்கள். அதிலும் இந்த ஜோடி எல்லாம் பிரியவே மாட்டார்கள் என்று நினைத்தவர்கள் எல்லாம் தாங்கள் பிரிய போகிறோம் என்று அதிரடியாக அறிவித்து ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைக்கிறார்கள். அதிலும் ஒரு சிலர் மனம் ஒத்து பிரிய போகிறோம் என்று ஜோடியாகவே சோசியல் மீடியாவில் போஸ்ட் போட்டு விடுகிறார்கள்.

ஏற்கனவே தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா சில வருடங்களுக்கு முன்பு நாங்கள் இருவரும் பிரிய போகிறோம் என்று ஒரு போஸ்ட் போட்டிருந்தனர். அதற்குப் பிறகு இருவரும் நீதிமன்றத்தில் விவாகரத்துக்கு அப்ளை செய்திருந்தனர். இவர்களுடைய வழக்கு இரண்டு வருடங்களாக நடைபெற்று இருந்த நிலையில் தற்போது இருவரும் பரஸ்பரமாக பிரிவதற்கு நீதிமன்றம் அனுமதி கொடுத்திருக்கிறது. இவர்களுடைய திருமணமும் செல்லாது என்று அறிவித்திருக்கிறார்கள்.
தனுஷ் போலவே ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவி தம்பதியினரும் பிரிவதை அறிவித்திருந்தனர். அவர்களைத் தொடர்ந்து ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தியும் பிரிவதை அறிவித்திருந்தார்கள். இதில் ஜெயம் ரவி தான் ஆர்த்தி இடம் இருந்து விலகுகிறேன் என்று சொல்லி இருக்கிறார். ஆனால் அவருடைய மனைவி ஆர்த்தி விவாகரத்து தனக்கு விருப்பமில்லாமல் ஜெயம் ரவியாக எடுத்த முடிவு என்று கூறியிருக்கிறார்.

இந்த பஞ்சாயத்துக்கு மத்தியில் சில வருடங்களாகவே அபிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராய் தம்பதி பிரிந்து விட்டதாக செய்திகள் வலம் வருகிறது. 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் கதாநாயகியில் ஒருவரான ஐஸ்வர்யா ராய் காதலித்து அபிஷேக் பச்சனை திருமணம் செய்திருந்த நிலையில் இவர்கள் இருவரும் எதற்காக பிரிய போகிறார்கள் என்பது பலருடைய கேள்வியாக இருந்தது.
ஆனால் சில இடங்களில் இதை மறுப்பு தெரிவித்து ஐஸ்வர்யா மற்றும் அபிஷேக் பச்சன் தனித்தனியாக கருத்து தெரிவித்திருந்தார்கள். ஆனால் இவர்கள் இருவரும் நடந்து கொள்ளும் விதத்தை வைத்து இவர்கள் பிரிந்து இருப்பதாகவே பல செய்திகள் வலம் வருகிறது. இந்த நிலையில் இந்த வதந்திகளுக்கு மேலும் வலு கொடுக்கும் வகையில் சமீபத்தில் துபாயில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா ராய் பெயருக்கு பின்னால் இருக்கும் பச்சன் பெயர் இல்லாமல் ஐஸ்வர்யா ராய் என்ற பெயர் மட்டும் இடம் பெற்று இருக்கிறது.

இதனால் பரவி வரும் வதந்திகள் எல்லாம் உண்மைதானா? அதனால் தான் ஐஸ்வர்யா ராய் "பச்சன்" என்ற குடும்ப பெயர் இல்லாமல் வெறும் ஐஸ்வர்யா ராய் மட்டும் இருக்கிறதா? என்று பல கேள்வி எழுப்பி வருகிறார்கள். அதுபோல அந்த நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா ராய் தன்னுடைய மகளோடு கலந்து கொண்டு இருக்கிறார். அதற்கு பிறகு அபிஷேக் பச்சன் தன்னுடைய அம்மா மற்றும் அப்பாவோடு அந்த நிகழ்ச்சியில் தனியாக கலந்து கொண்டிருக்கிறார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications