அட்ஜெஸ்ட்மென்ட் ஹீரோயின்.. அமலா பால் கேரவனில் அழுகை? கிறங்கடித்த அம்மன் நடிகையின் "காலண்டர்" போட்டோ
சென்னை: கேரளா திரையுலகம் மார்க்கெட் இன்று விழுந்துவிட்டது.. அதனால் மலையாள படங்களில் நடிக்க வாய்ப்புகள் இல்லாதவர்கள், பாலியல் புகார்களை தந்து, விளம்பரம் தேடி கொண்டிருக்கிறார்கள்.. பாதிக்கப்பட்டபோதே புகார் தராமல் இப்போது ஏன் புகார்களை சொல்கிறார்கள்? என்றெல்லாம் மூத்த அரசியல் விமர்சகர் டாக்டர் காந்தராஜ் பேட்டி ஒன்றில் கேட்டுள்ளார்.
பாலியல் தொல்லைகள்: இதனிடையே, கேரளாவை போலவே, தமிழ், தெலுங்கு சினிமாக்களிலும் பாலியல் தொல்லைகள் இருப்பதாக ராதிகா, குஷ்பூ போன்ற சீனியர் நடிகைகளே குற்றஞ்சாட்டியிருந்தனர். இதையடுத்து, தமிழ் சினிமாவில் நடக்கும் அட்ஜெஸ்ட்மென்ட்கள் குறித்தும், நிறைய பேர் பேசிவருகிறார்கள்..
இந்நிலையில், மூத்த அரசியல் விமர்சகரான டாக்டர் காந்தராஜ் சமீபத்தில் ஒரு பேட்டி தந்திருந்தார்.. அதில், "நடிப்பதற்கு முன்பேயே நடிகைகள் "ஓகே" சொல்லிவிட்டு, பல வருடம் கழித்து இப்போது வந்து புகார் தருகிறார்கள்..

எம்ஜிஆர், சிவாஜி காலத்தில் இருந்தே அட்ஜஸ்மெண்ட் இருந்து வருகிறது. நடிகர்கள் மட்டுமல்ல, டைரக்டர், கேமராமேன் உள்பட டெக்னீஷியன்களையும் அட்ஜஸ்ட் செய்ய வேண்டிய நிலையில் நடிகைகள் இருக்கிறார்கள்" என்றெல்லாம் காந்தராஜ் பேசியிருந்தார்.
இந்நிலையில், BBT Cinema என்ற யூடியூப் சேனலுக்கு மீண்டும் பேட்டி தந்துள்ள டாக்டர் காந்தராஜ் கேரள திரையுலக பாலியல் புகார்கள் குறித்து பேசியிருக்கிறார்.. அதில், "ஆண், பெண் சேர்ந்து இருந்தாலே பாலியல் பிரச்சனை வரத்தான் செய்யும்.. இது சினிமா என்றில்லை, நிர்வாகத்துறை, காவல்துறை , தனியார்துறை, கல்லூரிகள், தொழிற்சாலைகள் என அனைத்து இடங்களிலும் இப்படி புகார்கள், சர்ச்சைகள் வரத்தான் செய்யும்.
அப்படியிருக்கும்போது, கவர்ச்சி உலகமான சினிமாவில் இருக்கவே செய்யும்,. ஹீரோவுடன் கட்டிப்பிடித்து, முத்தம் தந்து நெருக்கமாக நடித்துவிட்டு, பாலியல் தொல்லை தந்தார்கள் என்று புகார் சொல்வது ஏன்? என்றோ நடந்த விஷயத்தை இன்று புகாராக சொல்வது ஏன்?
பாலியல் பலாத்காரம் என்பது சட்டப்படி குற்றமாகும்.. இதற்கு நேரடியாகவே கோர்ட்டுக்கு செல்ல வேண்டியதுதானே? எத்தனையோ குடும்ப பெண்கள், இதுபோன்று பாதிக்கப்பட்டால், நீதிமன்றத்தைதானே நாடுகிறார்கள்? ஏன் நடிகைகள் மட்டும் கமிஷனை தேடி போக வேண்டும்?
சினிமாவில் தவறு இருப்பது தெரிந்தால், அதிலிருந்து விலகி செல்ல வேண்டியதுதானே? யாராவது கையை பிடிச்சு, இதில் நடிச்சுதான் ஆக வேண்டும் என்று யாராவது மிரட்டினார்களா?
புரமோஷனுக்காக, பெண் ஊழியர்களுக்கு பாலியல் தொல்லைகள் தருவது நடக்கதான் செய்கிறது, வங்கி கடனை பெற்றுத்ருவதற்காக இப்படியான நெருக்கடிகள் ஆங்காங்கே உண்டு.. அரசியலிலும் இது உண்டு.
எங்களுடைய காலத்தில் அம்மன் வேடம் போட்ட நடிகையின் புகைப்படங்கள், காலண்டர்களில்கூட வெளிவந்து பாப்புலரானது. முள்மீது வாழையிலை பட்டாலும், வாழையிலை மீது முள் பட்டாலும் கெடுதி வாழையிலைக்குதான். இதனை சம்பந்தப்பட்ட நடிகைகள் புரிந்து கொள்ள வேண்டும்.
ஆடை என்ற படத்தில் அமலாபால் ஆடையின்றி நடித்திருந்தார்... அந்த கேமராமேன் வெகு நேர்த்தியாக இந்த காட்சிகளை படம்பிடித்திருந்தார். மற்ற படங்களைவிட இதில் அமலாபால் ஆபாசமாகவே தெரியவில்லை.
ஆனால், அந்த காட்சிகள் நடித்து முடித்ததுமே கேரவனில் உட்கார்ந்து அழுதாராம் அமலாபால். படம் நடிக்கும்போதே காட்சியை விளக்கினார்கள்தானே? அது தெரிந்துதானே ஆடையின்றி நடிக்க சம்மதித்தார்? பிறகு ஏன் கேரவனில் உட்கார்ந்து அமலாபால் அழ வேண்டும்? பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்று சொல்கிறார்களே தவிர, பாதிக்கப்பட்ட நடிகர்களை பற்றி ஏன் யாருமே பேசுவதில்லை? அவர்களை ஏன் யாருமே பேட்டிகளை எடுப்பதில்லை?
ஒருமுறை பாரதிராஜாவை கார்னர் செய்ய வேண்டும், அவரை கேவலப்படுத்த வேண்டும் என்பதற்காக, சோவியத் சென்டரில் நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டது.. இந்த நிகழ்ச்சியின் பின்னணியில் மறைமுகமாக இருந்தது அப்போதைய முதல்வர் எம்ஜிஆர்.. இவரது அமைச்சரவையில் என்னுடைய அண்ணனும் மந்திரியாக இருந்தார்.
அந்த நிகழ்ச்சியில் பாரதிராஜாவின் படங்களில் மட்டுமே ஆபாசம் தலைதூக்குவதாக அவரை குறிவைத்து பேசப்பட்டது.எல்லாரும் பாரதிராஜாவை தாக்கி பேசினார்கள். ஆனால், ராஜேஷ், முக்தா சீனிவாசன் மட்டும் பாரதிராஜாவை தாக்கி பேசவில்லை..
அப்போது ரசிகர் கூட்டத்தில் உட்கார்ந்திருந்த நான் மேடையில் வாய்ப்பு கேட்டு பேசும்போது, "இதழே இதழே வேண்டும் தேன் வேண்டும்" என்ற பாடலில் நடித்திருப்பவர்கள் யார்? எப்படியெல்லாம் நடித்திருந்தார்கள்? என்று இங்குள்ளவர்கள் சொல்ல முடியுமா?" என்று கேட்டேன்.
அரங்கமே அதிர்ந்து போனது.. மறுநாளே அனைத்து செய்தி தாள்களிலும் சினிமாவில் ஆபாசத்தை புகுத்தியது யார்? காந்தராஜ் என்ற ரசிகர் கேள்வி என்று தலைப்பு செய்தியாக வெளியானது...எனவே ஒருவரை சிக்க வைக்க வேண்டுமானால் எப்படி வேண்டுமானாலும் சிக்க வைக்கலாம். கேரளா திரையுலகம் மார்கெட் விழுந்துவிட்டது.. அதனால் படவாய்ப்புகள் இல்லாதவர்கள் இப்படியெல்லாம் கிளப்பி விட்டு கொண்டிருக்கிறார்கள்.
-
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications