Ammu: சின்னத்திரை நடிகர் சங்கப் பதவி ஏற்பு விழாவில் அமளி! - நடிகை அம்முவை வைத்து வெடித்த விவகாரம்
சென்னை: தமிழ் சினிமாவை போலவே சின்னத்திரையும் பல குழுக்களாக பிரிந்து உள்ளது. அதில், சுமார் இரண்டாயிரம் உறுப்பினர்களைக் கொண்ட சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தல் கடந்த மாதம் நடைபெற்றது. இதில், பரத் தலைமையிலான அணி அமோக வெற்றி பெற்றது. ஆனால், இந்த வெற்றிக்குப் பின்னால் நடந்த சில விஷயங்களும், பதவி ஏற்பு விழாவில் அரங்கேறிய சம்பவங்களும் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.

அரசியல் கலந்த வெற்றி
வெற்றி பெற்ற மகிழ்ச்சியில், புதிய நிர்வாகிகள் உடனடியாகப் பொறுப்பேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஒரு மாதம் கழித்துத்தான் பதவி ஏற்பு விழா நடைபெற்றது. இந்தத் தாமதத்திற்கு முக்கிய காரணம், புதிய நிர்வாகிகள் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்களைச் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
இது குறித்துப் பெயரைக் குறிப்பிட விரும்பாத சிலர், "துணை முதல்வர் மற்றும் செய்தித் துறை அமைச்சரைச் சந்திப்பதில் தவறில்லை. ஆனால், தேவையில்லாமல் சங்கத்தில் அரசியலை நுழைக்கிறார்களோ?" என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளனர்.
விழா மேடையில் எழுந்த அதிருப்தி
பதவி ஏற்பு விழாவில், சங்க உறுப்பினர்கள் மத்தியில் பெரும் அதிருப்தி நிலவியதாகக் கூறப்படுகிறது. இந்த வெற்றிக்காக உழைத்த பலருக்கு விழா குறித்த தகவல் சரியாகச் சொல்லப்படவில்லை. ஆனால், எதிரணியில் போட்டியிட்ட பலர் விழாவிற்கு அழைக்கப்பட்டு, மேடையில் அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதாகச் சொல்கிறார்கள். இது உழைத்தவர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.
இதேபோல், சங்கத்தின் முன்னாள் செயலாளர் ராஜேந்திரனின் பெயர் அழைப்பிதழில் முதலில் இடம்பெறவில்லை. இதனால், அவர் நிகழ்ச்சிக்கு வர மாட்டேன் என்று சொல்ல, பின்னர் அவசரமாக மீண்டும் ஒரு அழைப்பிதழ் அச்சிட்டு அவருக்கு அனுப்பியிருக்கிறார்கள்.
அம்மு பற்றிய சர்ச்சை
விழாவில் ஏற்பட்ட உச்சக்கட்ட சர்ச்சை, நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க நடிகை அம்முவை அழைத்ததுதான். சில மாதங்களுக்கு முன்பு, ஒரு டி.வி நிகழ்ச்சியில் நாய் வளர்ப்பு குறித்து அம்மு பேசிய கருத்து, பெரிய அளவில் விமர்சனங்களை ஏற்படுத்தியது. சமூக வலைதளங்களில் பலரும் அவரைத் தாக்கிப் பதிவிட்டனர்.
அப்படி ஒரு சர்ச்சையில் சிக்கியவரை, வேண்டுமென்றே ஏன் அழைத்தார்கள்? சங்கத்திற்குத் தேவை நல்ல பெயர் தானே? என்று பலரும் கேள்வி எழுப்பினர். இது பற்றி ஒரு நிர்வாகி பேசும்போது, "அம்முவை அழைத்தது பரபரப்புக்காக அல்ல, முதலில் விஜே நித்யாவை அழைக்க முடிவு செய்திருந்தோம். அவர்களுக்குத் தேதி இல்லை" என்று மட்டும் கூறி இருக்கிறார்.
ஆனால், அம்மு மேடையில் நாகரிகம் இல்லாமல், அதட்டியும் மிரட்டியும் பேசியது, வந்திருந்தவர்களை மேலும் கடுப்பேற்றியதாகக் கூறப்படுகிறது. இதனால், சிலர் நிகழ்ச்சி முடியும் முன்பே வெளியேறிவிட்டனர். ராதாரவி கூட தனது பேச்சில், சங்க விஷயங்களைத் தாண்டி நாய் விவகாரம் குறித்துப் பேசியது, மேலும் குழப்பத்தை ஏற்படுத்தியது.
அனுபவமின்மையால் வந்த தவறுகளா
தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் அனைவரும் இளம் வயதினர் என்பதால், அனுபவமின்மையால் பல தவறுகள் நடந்துள்ளதாக விமர்சனம் எழுந்துள்ளது. சங்கத்தின் முன்னாள் நிர்வாகிகளிடம் ஆலோசனை கேட்டுச் செயல்பட்டால் மட்டுமே இதுபோன்ற குழப்பங்களைத் தவிர்க்க முடியும் என்று கூறப்படுகிறது. இது வெறும் தேர்தல் குழப்பம் மட்டுமல்ல, ஒரு பொது அமைப்பில் சரியான தலைமை இல்லாதபோது, எப்படிப்பட்ட பிரச்சனைகள் உருவாகும் என்பதற்கான ஒரு பாடமாகவும் மாறியுள்ளது என சிலர் அதிருப்தி தெரிவித்து இருக்கிறார்கள்.
-
சிறகடிக்க ஆசை: முத்துக்கு மட்டும் சோதனை மேல் சோதனையா? ரோகிணியால் அழியும் விஜயா.. செம சம்பவம் -
பிக் பாஸ் வீட்டுக்குள் இப்போது சாதாரண மக்கள்.. வெற்றியா? விபரீதமா? உண்மையான சவால் இதுதான்! -
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications