அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியலில் உடைபடப்போகும் ரகசியங்கள்.. அடுத்து நடக்கப்போவது இதுதானா?
அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியலில் அமுதா மாமனார் இறப்புக்கான உண்மையான காரணத்தை அமுதா கண்டுபிடிக்க இருக்கிறார்.
சென்னை: ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியலில் மார்ச் 15 ஆம் தேதிக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
அமுதாவின் மாமனார் தற்கொலை செய்வதற்கு காரணமாக இருந்த பெண்ணை அமுதா நேருக்கு நேர் பார்த்திருக்கிறார்.
அமுதாவின் மாமனார் மீது தவறான குற்றம் சாட்டுவதற்கு காரணம் யார் என்று ரகசியத்தை அமுதா தெரிந்து கொண்டிருக்கிறார்.

மாமியார் மெச்சும் மருமகள்
ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல் ரசிகரின் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்த சீரியலில் அமுதா தன்னுடைய மாமியார் வீட்டில் அடுத்தடுத்து வரும் பிரச்சனைகளுக்கு தீர்த்து வைக்கும் குலசாமியாக இருந்து வருகிறார். தன்னுடைய மாமியாரின் மொத்த அன்பையும் பெற்று இருக்கும் அமுதா இனி செந்தில் உடன் சேர்ந்து வாழ்வாரா இல்லையா என்று எதிர்பார்ப்பு ரசிகர்களோடு இருந்து வரும் நிலையில் தற்போது அடுத்தடுத்த பல உண்மை சம்பவங்கள் இந்த சீரியலில் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.

தொடங்கும் புது பிரச்சனை
அமுதாவின் மாமனார் ஒரு வாத்தியாராக இருக்கும் இடையில் தன் மீது தவறான குற்றச்சாட்டு ஒரு பெண் சுமத்திய காரணத்தினால் அவர் தற்கொலை செய்து கொண்டிருந்தார். இந்த நிலையில் அமுதாவின் மாமனாரின் நினைவு நாளில் குளக்கரையில் ஒரு பெண் அமுதாவின் மாமனாருக்கு திதி கொடுத்துக் கொண்டிருக்கிறார். அதை பார்த்து அமுதாவின் மொத்த குடும்பமும் அதிர்ச்சி அடைகின்றனர்.

வெளிச்சத்துக்கு வரும் உண்மைகள்
யார் திதி கொடுப்பது என்று பார்க்கும்போது அது அமுதாவின் மாமனாரின் மீது குற்றம் சாட்டிய அதே பெண் என்பதால் மொத்த குடும்பமும் அவரை அடித்து துரத்தும் போது அவர் பல உண்மைகளை சொல்கிறார். ஏற்கனவே அமுதாவின் தங்கையின் மாமனாராக இருக்கும் அதாவது அமுதாவின் மாமனாரின் தம்பி குமரேசன் தான் என்னை அந்த மாதிரி சொல்ல சொன்னார் என அந்தப் பெண் கூறுகிறார்.

கண்டுபிடிப்பாரா அமுதா
பல வருடங்கள் கழித்து வெளியே வரும் உண்மையை கேட்டு அன்னலட்சுமியின் குடும்பம் அதிர்ந்து போய் இருக்கும் நிலையில், அமுதா குமரேசன் வீட்டில் சென்று சண்டை இடுகிறார். அதற்கு நான் தான் செய்தேன் என்று சொல்வதற்கு என்ன ஆதாரம் இருக்கு என்று குமரேசன் கேட்க, பிறகு அமுதாவும் சித்தப்பாவும் ஒழிந்து இருந்து அவர்களின் நடவடிக்கையை கண்காணிக்கின்றனர். அப்போது குமரேசனும், கரஸ்பாண்டனும் ஒன்றாக சந்தித்து பேசுகின்றனர். பலரின் சுய ரூபத்தின் பின்னணியில் என்ன இருக்கிறது என்பது தெரியவரும் ப்ரோமோ தற்போது வலம் வருகிறது.
-
உருவத்தை பார்த்து சிரித்தவர்கள் இன்று மகளை பார்த்து வியக்கிறார்கள்... டிஷ்யூம் பட நடிகர் கின்னஸ் பக்ரு நெகிழ்ச்சி -
இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல.. விரக்தியில் விக்னேஷ் சிவன் போட்ட பதிவு.. குவியும் ஆறுதல் -
பிரச்சனை இருந்தது.. விட்டு கொடுக்க மனசு இல்ல.. ஆனாலும், கருப்பு படம் குறித்து நடிகர் இந்திரன்ஸ் உருக்கம் -
உருவ கேலியால் உடைந்த மனம்... அந்த நடிகர் கேட்ட கேள்வியால் கதறி அழுதேன்.. நடிகை ஊர்வசி உருக்கம் -
Blast Movie Review: ப்ளாஸ்ட் படம் எப்படி இருக்கு? கதை இதுதான்! அர்ஜுனுக்கு கம்பேக்? முழு விமர்சனம் இதோ! -
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
"40 வயசுல 25 வயசு மாதிரி இல்லை..." சர்ச்சைகளுக்கு மத்தியில் திரிஷா போட்ட பதிவு! யாருக்கு கொடுத்த பதில்? -
சரிகமபா திவினேஷுக்கு நெப்போலியன் கொடுத்த சர்ப்ரைஸ்.. அமெரிக்காவில் நெகிழ்ந்த குடும்பம் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications