டிஆர்பிக்காக..! சூப்பர் சிங்கரில் நடப்பது இதுதான்.. ரகசியங்களை உடைத்த அனந்த் வைத்தியநாதன்
சென்னை: பாடகர் அனந்த் வைத்தியநாதன் தான் எதற்காக சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினேன் என்று மனம் திறந்து பேசி இருக்கிறார்.
பல பேர் என்னிடம் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காகவே பழகுகிறார்கள் என்று வருத்தத்தையும் தெரிவித்து இருக்கிறார்.
திறமை இல்லாமல் இருந்தாலும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள என்னவெல்லாம் செய்யலாம் என்று சிலர் என்னிடம் கேட்கிறார்கள் என்று கோபத்தையும் கொட்டி இருக்கிறார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பலர் பிரபலமடைந்து இருக்கின்றனர். அதற்கு காரணம் போட்டியாளர்களின் திறமையாக இருந்தாலும் அவர்களுக்கு கொடுக்கும் மோட்டிவேஷன் மற்றும் சின்ன சின்ன குறைகளையும் சுட்டிக்காட்டும் நடுவர்களும் தான்.
அந்த வகையில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பாடகர் அனந்த் வைத்தியநாதன் பலருக்கும் பிரபலமானவர்தான். இவருக்கு பாட்டு பாடுவது என்றால் உயிராம். அதற்காகவே பல பாடகர்களிடம் இவர் பாடல் கற்று இருந்திருக்கிறார். அப்போதுதான் இவருடைய தொண்டையில் ஏற்பட்ட பிரச்சனையால் இவருடைய குரல் வளம் போய்விட்டதாம்.
பிறகு வேகமாக பாடக் கூடாது என்று இவரிடம் மருத்துவர்கள் கூறியிருக்கிறார்கள். எத்தனையோ மருத்துவமனையில் பார்த்த பிறகும் இவருக்கு கடைசியில் இதுதான் நிலைமை என்று ஆகி இருக்கிறது. அதற்குப் பிறகு தன்னுடைய பாடல்கலை அழிந்து விடக்கூடாது என்று சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டியாளர்களுக்கு பாடல் சொல்லிக் கொடுத்து அவர்களுடைய திறமையை வளர்த்துக் கொண்டிருந்திருக்கிறார்.
அதற்குப் பிறகு சில திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்த அனந்த் வைத்தியநாதனுக்கு சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பலருடைய திறமையை வளர்க்கும் வாய்ப்பு கிடைத்தது. இவருடைய முயற்சியால் பலர் இந்த நிகழ்ச்சியில் தங்களுடைய திறமையை மேலும் மெருகேற்றி இருக்கிறார்கள். அந்த வகையில் மூக்குத்தி முருகன், செந்தில் பாலாஜி போன்றோர் அடங்குவார்கள்.
அந்த அளவிற்கு பலருடைய வாழ்க்கையில் விளக்கேற்றிக் கொண்டிருந்த அனந்த் வைத்தியநாதன் இப்போது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை. அதற்கு காரணம் என்பது என்ன என்பது பற்றி சமீபத்தில் பேட்டி ஒன்றில் மனம் திறந்து பேசி இருக்கிறார்.

அதில் அவர் பேசுகையில் நான் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியையும், விஜய் டிவியையும் எப்போதுமே மறக்க முடியாது. எனக்கு ஒரு பெரிய அளவில் மகிழ்ச்சியை தந்தது என்றால் அது அந்த நிகழ்ச்சி தான். ஒரு காலத்தில் நான் அந்த நிகழ்ச்சியில் இருக்கும் போது பலர் என்னிடம்
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காகவே பழகி இருக்கிறார்கள்.
சிலருக்கு திறமை இல்லாமல் இருக்கும் போது கூட இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக இவரோடு பழகினால் போதும் என்றும் நினைத்திருக்கிறார்கள். அதுதான் எனக்கு வேதனையை கொடுத்தது. பிறகு அந்த நேரத்தில் கொரோனா பீரியட் வந்ததால் அப்போது என்னால் சூட்டிங்கில் கலந்து கொள்ள முடியாமல் போயிட்டு அதனால்தான் நான் அந்த நிகழ்ச்சியில் தொடரவில்லை.
அதுபோல சிலர் என்கிட்ட கேக்குறாங்க, சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பாடப்படுவது இரண்டு மூன்று பாடல்கள் தான். ஆனால் எதற்காக வெட்டி கதைகளை பேசிக்கிட்டு இருக்காங்கன்னு கேக்குறாங்க. அது வேற ஒன்னும் இல்ல டிஆர்பிக்காக தான். ஒவ்வொரு வாரமும் டிஆர்பி குறைந்தால் அவங்களுக்கு எவ்வளவோ கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டியது இருக்கும்.
பொதுவா எல்லா நிகழ்ச்சியும் டிஆர்பி அடிப்படையில் தான் நடக்குது. அதுல சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி ஒன்னும் விதிவிலக்கு கிடையாது. ஒருமுறை டிஆர்பி குறைந்தாலும் பல பேருக்கு பதில் சொல்ல வேண்டியது இருக்கும். மக்களுக்கு தகுந்த மாதிரி, மக்கள் என்ன மாதிரி விரும்புறாங்களோ அந்த மாதிரி தான் நிகழ்ச்சி சுவாரசியமா கொண்டு போக வேண்டும் என்பதற்காகத்தான் இந்த நிகழ்ச்சியில் பல மாற்றங்கள் அடிக்கடி செய்து கொண்டு இருக்கிறார்கள்.
நான் பலருக்கு அவங்களுடைய திறமையை மேலும் மெருகேற்றி இருக்கிறேன். ஆனால் அவர்கள் எனக்கு தொடர்ந்து மரியாதை தரவேண்டும் என்று நான் ஆசைப்படல. அந்த கலையை அவங்க மறந்துவிடக்கூடாது. அதை அழிய விடாமல் அதை சரியா பயன்படுத்தணுங்குறது தான் என்னுடைய விருப்பம். அதை சிலர் சரியா பயன்படுத்துறாங்க. சிலர் பேரும் புகழும் கிடைச்சதும் விட்டுருதாங்க. அதுவும் நமக்கு கொஞ்சம் வேதனையா இருக்கு என்று பகிர்ந்து இருக்கிறார்.
-
ஒருபுறம் அஜித் அம்மா மறைவு... மறுபுறம் அனாதையாக விடைபெற்ற சத்யேந்திரா! சமூகத்தின் இரட்டை முகமா? -
இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல.. விரக்தியில் விக்னேஷ் சிவன் போட்ட பதிவு.. குவியும் ஆறுதல் -
உருவத்தை பார்த்து சிரித்தவர்கள் இன்று மகளை பார்த்து வியக்கிறார்கள்... டிஷ்யூம் பட நடிகர் கின்னஸ் பக்ரு நெகிழ்ச்சி -
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
“வைகை அணையில் கூலி வேலை பார்த்த இளையராஜா, இசைஞானி ஆனது எப்படி? முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா?” -
அமைதியா இருங்க... இல்லன்னா.. 83வது பிறந்தநாளில் ரசிகர்களிடம் கடுப்பான இளையராஜா! -
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
உருவ கேலியால் உடைந்த மனம்... அந்த நடிகர் கேட்ட கேள்வியால் கதறி அழுதேன்.. நடிகை ஊர்வசி உருக்கம் -
பிரச்சனை இருந்தது.. விட்டு கொடுக்க மனசு இல்ல.. ஆனாலும், கருப்பு படம் குறித்து நடிகர் இந்திரன்ஸ் உருக்கம் -
Blast Movie Review: ப்ளாஸ்ட் படம் எப்படி இருக்கு? கதை இதுதான்! அர்ஜுனுக்கு கம்பேக்? முழு விமர்சனம் இதோ! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications