Nayagi Serial: முடியும் நேரத்தில் திரும்பவும் ஆரம்பிச்ச இடதுக்கேவா... முடியலை!
சென்னை: சன் டிவியின் நாயகி சீரியலில் வன்மம் குரோதம் நிறைந்த அனன்யா...வெட்ட வெட்ட துளிர்க்கும் வாழை மரம் போல எத்தனை முறை சிக்கிக் கொண்டாலும், மீண்டும் அதே வன்மத்துடன் துளிர்த்து வருகிறாள். திரும்பவும் ஆரம்பிச்ச இடத்துக்கேவான்னு அலறும் நிலைக்கு கொண்டு வந்து விட்டுட்டாங்க.
நாயகி கதை திரும்ப திரும்ப ஒரே வட்டத்துக்குள் வந்து வந்து சுழன்று கொண்டு இருக்கிறது. சொல்வதற்கு ஒன்றும் இல்லை என்றானதும், சட்டு புட்டுன்னு கதையை முடிச்சுக்கிட்டு போக வேண்டியதுதானே...
சீரியல் எடுப்பவர்களுக்கு சலிப்புத் தட்டாமல் இருக்கலாம்.. பார்க்கும் மக்களுக்கு சலிப்புத் தட்டாதுன்னு சொல்றதுக்கு எதாவது கதையில் கேரண்டி லிஸ்ட் வச்சு இருக்கீங்களா?

நாயகி நம்பர் ஒன்
சன் டிவியின் நாயகி சீரியல் ஸ்லாட்டில் நம்பர் ஒன்னில் உள்ளதுன்னு சொல்லி சொல்லியே அதை ஜவ்வு மாதிரி இழுத்து வருகிறார்கள். அனன்யாவுக்கு அருணை கல்யாணம் செய்து வைக்கணும்ன்றது கடந்த இரண்டு மாசத்துக்கு முன்னால் ஆனந்தியும், திருவும் எடுத்த முடிவு. இந்த முடிவுக்கு அனன்யாவின் அம்மா, அப்பாகிட்டே சம்மதம் வாங்கும் காட்சிகளை முதலில் ஒளிபரப்பினார்கள்.

அனன்யா அம்மா
அனன்யா கல்யாணம் செய்துக்க மாட்டேன்னு பிடிவாதம் பிடிக்க, அனன்யாவின் அம்மா தான் தற்கொலை செய்துக்கொண்டு இறந்துவிடுவேன் என்று மிரட்டியது.. அனன்யா கல்யாணத்துக்கு ஒப்புக் கொண்டது என்று சில வாரங்கள் கதை நகர்ந்தது. அப்போதும் அனன்யா இந்த கல்யாணத்தில் இருந்து தான் தப்பிக்க என்ன செய்யலாம் என்கிற தில்லாலங்கடி வேலைகளில் ஈடுபட்டு இருந்தாள்.

திருமணம் கடைசி நிமிடம்
திருமணம் நடைப்பெறும் கடைசி நிமிடம் வரை கூட இந்த கல்யாணத்தில் இருந்து தப்பிக்க செய்யக் கூடாத பல தவறுகள்.. அடுக்கடுக்காய் ரத்தமும் சதையும் கொண்ட மனுஷங்களை துன்புறுத்தும் செயலில் ஈடுபட்டு கல்யாணத்தை நிறுத்த படாத பாடு படுகிறாள். கல்யாண மேடை வரை வந்து தற்கொலைக்கு முயற்சி செய்ய கல்யாணம் நின்று போகுது.

சப்புன்னு ஆகிப்போச்சு
நடிகை அம்பிகாவுக்கு நடிப்பதற்கான ஸ்கோப் என்று கொடுத்து, அனன்யா கல்யாணம் எப்படியும் நடந்துவிடும்.. இதோடு இந்த சீரியலுக்கும் எண்டு கார்டு போட்டுவிடுவார்கள் என்று ஆவலாய் ரசிகர்கள் பார்த்துக்கொண்டு இருந்தபோது அனன்யா தற்கொலைக்கு முயன்று. கல்யாணம் நின்னு போச்சு.
இதன் மூலம் நாயகி சீரியல் திரும்பவும் ஆரம்பிச்ச இடத்துக்கே வந்துருச்சு.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications