காபி வித் டிடி நிகழ்ச்சி காணாமல் போக காரணமே இதுதானா? கண்ணீரோடு டிடி.. ஆனால் எடுத்த சூப்பர் முடிவு
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த காபி வித் டிடி என்ற நிகழ்ச்சியின் மூலமாக பெரிய அளவில் பிரபலமான டிடி சமீபத்தில் youtube சேனல் ஒன்றில் காபி வித் டிடி நிகழ்ச்சி எதற்காக தொடர்ந்து நடத்த முடியாமல் போனது என்பது பற்றி பேசி இருக்கிறார்.
பல பிரபலங்களோடு டிடி அமர்ந்து அவர்களுடைய தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் சினிமா வாழ்க்கை அவர்கள் சந்தித்த சந்தோஷங்கள் மற்றும் துக்கங்கள் குறித்து ரசிகர்களுக்கு தெரிவிக்கும் விதமாக காபி வித் டிடி நிகழ்ச்சி இருந்து வந்த நிலையில் அந்த நிகழ்ச்சி சில வருடங்களுக்கு முன்பு பெரிய அளவில் பிரபலமாக இருந்தது.

ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்கு பெயர் போன விஜய் டிவியில் புதிது புதிதாக நிகழ்ச்சிகள் ஆரம்பத்தில் இருந்தே ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் ஒரு நிகழ்ச்சி தான் காபி வித் டிடி. இந்த நிகழ்ச்சியின் மூலமாக விஜய் டிவி பெயர் வாங்கியதோ இல்லையோ இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய டிடி மக்கள் மத்தியில் அதிகமாக பிரபலம் அடைந்திருந்தார். எப்போதும் கலகலப்பாகவும், சிரித்த முகமாகவும் இருக்கும் டிடி எதிரே இருக்கும் பிரபலங்களை டக்கு டக்கென்று கேள்வி கேட்டு மடக்கி அவர்களின் மனதில் இருக்கும் ரகசியங்களை கொட்ட வைத்து விடுவது டிடி யின் சிறப்பாக இருந்தது.
அதனாலேயே டிடியில் நிகழ்ச்சியை பார்ப்பதற்காக பல பேர் டிவி முன்பு காத்திருந்த காலமெல்லாம் உண்டு. ஆனால் டிடிக்கு இந்த காபி வித் டிடி என்ற நிகழ்ச்சி அவ்வளவு எளிமையாக கிடைத்துவிடவில்லை என்று ஏற்கனவே டிடி ஒரு பேட்டியில் பேசியிருந்தார். தன்னுடைய சேனல் தரப்பில் இருந்து ஒரே ஒரு நாள் மட்டும் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குங்கள் என்று வேறொரு நிகழ்ச்சியில் தொகுத்து வழங்க சொல்லியிருக்கிறார்கள்.
அப்போது டிடி எனக்கு ஒரு புது நிகழ்ச்சி தாருங்கள் அதற்கு ஒரு வாரம் மட்டும் டைம் தாருங்கள் அதில் என்னுடைய பெஸ்டை நான் கொடுக்கிறேன். ஆனால் அது மக்களுக்கோ உங்களுக்கோ பிடிக்கவில்லை என்றால் அந்த நிகழ்ச்சியை நிறுத்தி விடலாம் என்று டிடி சொல்ல அப்படித்தான் அவருக்கு காபி வித் டிடி என்ற நிகழ்ச்சி கிடைத்திருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் மூலமாக பட்டி தொட்டி எல்லாம் பிரபலமடைந்த டிடி விஜய் டிவியின் முக்கிய பிரபலமாக மாறி இருந்தார்.
அந்த நேரத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அதிகமான நிகழ்ச்சிகளில் டிடியை காண முடியும். ஆனால் சமீபத்தில் அவர் எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளாமல் இருக்கிறார். இது பற்றி அவர் ஒரு நிகழ்ச்சியில் பேசி இருந்தார். அதில் நம்முடைய உடல்நிலை நன்றாக இருந்தால்தான் நம்மால் அடுத்தடுத்து வேலைகளை பார்க்க முடியும். நாம் ஆரோக்கியமாகவும், நம்மால் ஒரு காரியம் ஆகிறது என்றால் தான் நம்மை ஒரு இடத்தில் வைத்திருப்பார்கள்.
நம்மால் முடியவில்லை என்றால் அங்கிருந்து தூக்கி வீசப்படுவோம் என்பது என்னுடைய வாழ்க்கையில் நான் லேட்டாக கற்றுக் கொண்டது. எனக்கு பத்து வருடங்களாக கால் முட்டியில் பிரச்சனை இருக்கிறது. அதிகமான நேரம் நின்று கொண்டே நான் ஆங்கரிங் செய்து கொண்டிருப்பதால் காலில் வலி அதிகமாகி இருந்தது. அதற்கு முதலில் ஒரு ஆபரேஷன் செய்யப்பட்டது. ஆனால் அது தவறாக செய்யப்பட்டதால் மீண்டும் எனக்கு வலி வந்து விட மீண்டும் அந்த இடத்தில் ஆபரேஷன் செய்ய வேண்டிய சூழ்நிலை வந்துவிட்டது.
ஆனால் அது பயனளிக்கவில்லை இப்போது வரைக்கும் நான் அந்த வலியோடு தான் நிற்கிறேன். அதனாலேயே நான் அதிகமான நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில்லை. சமீபத்தில் கூட திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் எனக்கு உட்கார்ந்து கொண்டே நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அது போன்று எல்லா தொகுப்பாளர்களுக்கும் கிடைத்தால் அவர்களுடைய உடல் நிலை பாதுகாக்கப்படும்.
ஆனால் பல பேர் அதை செய்வதற்கு தயாராக இல்லை தொகுப்பாளருக்கு ஒரு சேர் போடுவதற்கு பலர் யோசிக்கிறார்கள். அதனால் தான் நான் சில நிகழ்ச்சிகளை விட்டு வெளியே வர வேண்டிய சூழ்நிலை வந்துவிட்டது என்று அந்த பேட்டியில் கண்ணீரோடு டிடி பேசி இருக்கிறார். இந்த வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
-
உருவ கேலியால் உடைந்த மனம்... அந்த நடிகர் கேட்ட கேள்வியால் கதறி அழுதேன்.. நடிகை ஊர்வசி உருக்கம் -
பிரச்சனை இருந்தது.. விட்டு கொடுக்க மனசு இல்ல.. ஆனாலும், கருப்பு படம் குறித்து நடிகர் இந்திரன்ஸ் உருக்கம் -
Blast Movie Review: ப்ளாஸ்ட் படம் எப்படி இருக்கு? கதை இதுதான்! அர்ஜுனுக்கு கம்பேக்? முழு விமர்சனம் இதோ! -
அஜித்துக்கு அடுத்த பேரிழப்பு.. தந்தையை தொடர்ந்து தாயாரும் மறைவு.. சோகத்தில் பிரபலங்கள் வருத்தம் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications