ஆளே அட்ரஸ் இல்லாமல் போன நடிகர்.. தொடக்கூடாத விஷயத்தை தொட்டு.. அதிர்ஷ்டக்கார பாண்டியன், சூரி: பிரபலம்
சென்னை:"சினிமாவில் எதிர்பாராமல் வாய்ப்பு கிடைத்து நடிகர்களாக வந்தாலும், அதில் பலரும் தங்களுக்கு கிடைத்த வெற்றியை தக்க வைத்து கொள்ள தெரிவதில்லை.. சினிமாவின் நுணுக்கங்களும் இவர்களுக்கு தெரிவதில்லை. இந்த ஏமாற்றத்தில்தான், தவறான பழக்கவழக்கங்களுக்கும் ஆளாகி தங்களையே மாய்த்து கொள்கிறார்கள் அல்லது சினிமாவிலிருந்தே காணாமல் போய்விடுகிறார்கள்" என்று பத்திரிகையாளர் சுபைர் தெரிவித்துள்ளார்.
public Wing யூடியூப் சேனலுக்கு மூத்த பத்திரிகையாளர் சுபைர் பேட்டி ஒன்றை சமீபத்தில் தந்திருந்தார்.. அதில், "அங்காடித் தெரு படத்திற்கு திண்டுக்கல்லில் நடத்தப்பட்ட ஆடிஷன் மூலம் தேர்வாகி வந்தவர் மகேஷ்.. முதல் படமே அவருக்கு மிகப்பெரிய ஹிட் ஆனது.. இதையடுத்து, பெரிய பெரிய நிறுவனங்களிலிருந்து நிறைய வாய்ப்புகள் மகேஷூக்கு தேடி வந்தது. ஆனால், சினிமாவில் முன்பின் அனுபவம் அவருக்கு இல்லை.

அங்காடித் தெரு வெற்றி
வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திகொள்ள தெரியவில்லை.. இரவு பகல் என்பது உட்பட சில படங்கள் நடித்தும், அவைகள் சரியாக போகவில்லை.. சினிமாவில் அடுத்து எப்படி வாய்ப்புகளை பெறுவது என்று தெரியவில்லை.. அவரை கை தூக்கிவிடவும் யாரும் இல்லை.. கதைகளை தேர்ந்தெடுக்கவும் தெரியவில்லை.. டைரக்டர்களிடம் எப்படி அணுகுவது, தயாரிப்பாளர்களிடம் எப்படி பேசுவது, போன்ற விஷயங்களில் அனுபவமும் இல்லை.. அதனால்தான் அவர் காணாமல் போய்விட்டார்.
சில பழக்கங்களுக்கு அடிமையாகிவிட்டதாக அவரே ஒருமுறை சொல்லியிருந்தார்.. தனிமையில் வழித்துணைக்கு வந்த பழக்க வழக்கம், இப்படியே பலருக்கும் வாழ்க்கைத்துணையாகிவிடுகிறது.
ரேணுகுண்டா படத்தில் நடித்த தீப்பெட்டி கணேசன் நல்ல நடிகர்.. திடீரென வாய்ப்பு வந்தது, கை நிறைய பணம் வந்தது.. ஆனால், அடுத்து என்ன செய்வதென்றே தெரியாமல், அவரும் மதுவில் விழுந்தார்.. இறந்தே விட்டார்.
மண்வாசனை பாண்டியன்
மண்வாசனை பாண்டியனையும் இங்கு சொல்லியாக வேண்டும்.. மீனாட்சி அம்மன் கோயில் வாசலில் வளையல் கடை வைத்திருந்தவரை பார்த்து, அழகா இருக்காரே என்று முடிவு செய்து நடிகராக்கினார் பாரதிராஜா.. முதல் நாள் பார்த்து, மறுநாளே ஹீரோவானவர் பாண்டியன். அதுவரை சென்னைக்கு வந்ததில்லை, ஷூட்டிங் பார்த்ததில்லை, நடிப்பு பற்றி தெரியாது. வரிசையாக வாய்ப்புகளும் வந்தன.. ஆனால் தக்கவைத்து கொள்ளவில்லை.. இவரும் இறந்துவிட்டார்.
பிளாக்பாண்டியன் என்ற நடிகரும் நல்ல டைமிங் சென்ஸ், பாடிலேங்குவேஜ் உள்ளவர்.. அவரும் பெரிதாக வரவில்லை.. இத்தனைக்கும் சிவகார்த்திகேயனும் இவரும் ஒன்றாகவே சினிமாவுக்கு வந்தவர்கள். எப்போதுமே ஒருவர் சினிமாவில் வெற்று பெற்றுவிட்டால், தங்களுக்கு ஆரம்பத்தில் நெருக்கமாக இருந்தவர்களை முதலில் கட் பண்ணி விடுவார்கள். இதில் ரஜினிகாந்த் போன்றோர் விதிவிலக்கு.
சூரியன் வெற்றிக்கு காரணம்
இன்று நடிகர் சூரி திரையுலகில் நிலைத்து நிற்க காரணமே, அவர் ஆரம்பத்தில், ஒவ்வொரு சினிமா கம்பெனியாக ஏறி இறங்கியவர், நிறைய போராட்டங்களை சந்தித்தார்.. அந்த வலிதான் இன்று அவரை தக்க வைத்து கொள்ள உதவுகிறது.
சினிமாவில் எதிர்பாராமல் வாய்ப்பு கிடைத்து நடிகர்களாக வந்தாலும், அதில் பலரும் தங்களுக்கு கிடைத்த வெற்றியை தக்க வைத்து கொள்ள தெரிவதில்லை.. சினிமாவின் நுணுக்கங்களும் இவர்களுக்கு தெரிவதில்லை. இந்த ஏமாற்றத்தில்தான், தவறான பழக்கவழக்கங்களுக்கும் ஆளாகி தங்களையே மாய்த்து கொள்கிறார்கள் அல்லது சினிமாவிலிருந்தே காணாமல் போய்விடுகிறார்கள்" என்று தெரிவித்துள்ளார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications