ஒரு பக்கம்தானே கேன்சர்! இன்னொரு மார்பகத்தை வீடியோ காலில் காட்டுனு கேட்ட நபர்.. நடிகை சிந்து கண்ணீர்
சென்னை: கேன்சருக்கு போராடி வரும் என்னை நலம் விசாரிப்பதாக கூறி அப்படியே படுக்கைக்கு அழைக்கும் அவலம் நடக்கிறது என அங்காடி தெரு நடிகை சிந்து கண்ணீருடன் பேட்டி அளித்துள்ளார்.
அங்காடித் தெரு படம் மூலம் பிரபலமானவர் சிந்து. இவர் படித்துரை பாண்டிக்கு மனைவியாக நடித்திருந்தார். மேலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். நாடோடிகள், தெனாவட்டு, நான் மகான் அல்ல, கருப்பசாமி குத்தகைதாரர் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
அது போல் சீரியல்களிலும் நடித்துள்ளார். குணச்சித்திர வேடங்கள், வில்லி ரோல்களிலும் நடித்துள்ளார். இவர் தற்போது கேன்சர் நோய் தாக்கி அடையாளமே தெரியாத அளவுக்கு மாறியுள்ளார். இவர் தான் வைத்தியம் செய்து கொள்ள உதவி செய்யுமாறு பல வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

சீரியல்
இந்த நிலையில் இவரது நிலையை அறிந்து சீரியல் நடிகர்கள், நண்பர்கள், ரசிகர்கள் உள்ளிட்டோர் உதவி வருகிறார்கள். ஆனால் நடிகர் சங்கத்திலிருந்து எந்த உதவியும் கிடைக்கவில்லை என கூறியிருந்தார். அது போல் டப்பிங் சங்கத்திலிருந்து சில உதவிகள் கிடைத்ததாக அவர் கூறியிருந்தார். இந்த நிலையில் தனது மகள் கணவரை இழந்துவிட்டு தன்னோடு இருக்கிறார்.

வேலைவாய்ப்புகள்
அவருக்கு தமிழக அரசு ஏதாவது வேலை வாய்ப்புகளை அளித்தால் உதவியாக இருக்கும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார். இதுகுறித்து ஒரு யூடியூப் சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது: கடந்த 202 ஆம் ஆண்டு கொரோனாவின் பாதிப்பு தீவிரமாக இருந்தது. அப்போதுதான் எனக்கு மார்பகத்தில் புற்றுநோய் இருப்பது தெரிய வந்தது.

மருத்துவமனை
அந்த நேரத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற முடியாத நிலையில் கட்டி பெரிதாகி நீர் வடிய ஆரம்பித்துவிட்டது. இதனால் தனியார் மருத்துவமனையில் ஆலோசனை பெற்றேன். அங்கு எனக்கு அடுத்த நாளே அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அவர் பொது நல மருத்துவர், ஆனால் அவர் ஏன் எனக்கு அறுவை சிகிச்சை செய்தார் என தெரியவில்லை.

நண்பர்கள்
என் நண்பர் சொன்னதால் நான் அங்கு சிகிச்சைக்கு போய் சிக்கலில் மாட்டிக் கொண்டேன். சர்ஜரி நடந்து 3 ஆண்டுகளாகியும் அந்த காயம் இன்னும் ஆறவில்லை. கேன்சருக்கு யார் யாரோ ஏதேதோ மருத்துவம் சொன்னதை அடுத்து நாட்டு மருத்துவமும் செய்து கொண்டேன். அதில் நான் ஒரு ஊரில் சிகிச்சைக்கு போய் அங்கு எனக்கு மார்பகத்தில் இருந்து கொட்டாங்குச்சி நிறைய புழுக்களை எடுத்தனர்.

உடல்நிலை பாதிப்பு
எனக்கு உடல்நிலை நன்றாக இருந்தது. ஆனால் இடையில் என் மருமகன் மாரடைப்பால் இறந்துவிட்டார். இதற்காக நான் அந்த சிகிச்சையை தொடர முடியாமல் சென்னை வரும் நிலை ஏற்பட்டது. தற்போது எனக்கு நோய் முற்றி நான் படுத்த படுக்கையாகிவிட்டேன். எனக்கு இடது கை செயல்படவே இல்லை. கையில் உணர்ச்சியே இல்லை. மலம் கழித்துவிட்டு கூட என்னால் இடது கையால் கழுவ முடியாத நிலையில் தவித்து வருகிறேன்.

வீடியோ
எனது வீடியோவை பார்த்துவிட்டு கோவை சரளா, மயில்சாமி, விவேக், ராகவா லாரன்ஸ் உள்ளிட்டோர் உதவி செய்தனர். அது போல் ஷகிலா அக்காவும் எனக்கு உதவினார். தற்போதும் உதவிகேட்டு நிறைய வீடியோக்களை போட்டு வருகிறேன். நிறைய சேனல்களில் இருந்து வந்து என்னை பேட்டி எடுக்கிறார்கள். ஆனால் என் வீடியோவை பார்த்துவிட்டு எனக்கு ஒருவர் போன் செய்தார்.

வீடியோ காலில் அழைத்த நபர்
அப்போது இரவு 12 மணி இருக்கும். என்னிடம் எனது உடல்நிலை குறித்து நலம் விசாரித்தார். நானும் இந்த நேரத்தில் கூட நம் மீது அக்கறையோடு உடல்நலம் விசாரிக்கிறார்களே என நினைத்தேன். ஆனால் சிறிது நேரத்தில் அவர் சுயரூபத்தை காட்டினார். வீடியோ காலில் வருகிறீர்களா நான் உதவுகிறேன் என்றார். அதற்கு நான் ஏன் என்றேன். அப்போது அவர் ஒரு பக்கம் மார்பகத்தில்தானே கேன்சர் கட்டி இருக்கிறது. இன்னொரு பக்கம் இருக்கும் மார்பகத்தை காட்டு, நான் 5 லட்சம் தருகிறேன் என ஆபாசமாக பேசினார் என கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார் சிந்து.












Click it and Unblock the Notifications