10 நாள்ள செத்துடுவேன்னு சாபமிட்ட "மகள்".. கண்ணீருடன் பேசிய அங்காடி தெரு சிந்துவின் கடைசி பேட்டி
சென்னை: 10 நாட்களில் செத்துவிடுவேன் என உறவினர் சாபமிட்டதாக அங்காடி தெரு சிந்து தனது மறைவுக்கு முன்பு உருக்கமாக பேட்டி அளித்திருந்தார்.
அங்காடி தெரு படத்தில் நடித்த நடிகை சிந்து இன்று அதிகாலை மரணமடைந்தார். அவர் கடந்த 3 ஆண்டுகளாக மார்பக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தார். இந்த நிலையில் கடந்த சில தினங்களாக உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து அவர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சேர்க்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் இன்று அதிகாலை உயிரிழந்தார்.

அவரது உடல் வளசரவாக்கத்தில் உள்ள வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது இறப்பு திரைத்துரையினரை சோகத்தில் ஆழ்த்தியது. இந்த நிலையில் இறப்பதற்கு முன்பு பேட்டி அளித்திருந்த சிந்து மிகவும் உருக்கமாக பேசியிருந்தார். அதில் நான் தினந்தோறும் கடவுளிடம் கேட்பது இதுதான். ஒன்று என்னை எடுத்துக்கோ இல்லாவிட்டால் நிம்மதியாக வாழ விடு என்பதுதான்.
தினம் நான் சித்ரவதையை அனுபவித்து வருகிறேன். நான் கஷ்டப்படுவது மட்டுமல்லாமல் என் உடன் இருப்பவர்களையும் கஷ்டப்படுத்திக் கொண்டிருக்கிறேன். கேன்சருக்கு மருந்தே கிடையாது. கேன்சர் சிலருக்கு சரியாகி இருக்கிறது என சொல்வதெல்லாம் ஒரு கண் துடைப்புதான்.
கொரோனா காலத்தில் நான் மக்களுக்கு உதவும் பணியில் இருந்தேன். அப்போதுதான் எனக்கு மார்பகத்தில் கட்டி வந்தது. அதை மருத்துவரிடம் காண்பித்த போது அவர் நீர்க்கட்டி என்றுதான் கூறியிருந்தார். அதனால் நானும் பெரிதாக கண்டு கொள்ளவில்லை. பின்னர் போக போக அந்த கட்டி பரவ ஆரம்பித்துவிட்டது. அதில் இருந்து தண்ணீர் வடிய ஆரம்பித்தது.
நான் பயாப்சி செய்யாமல் இருந்திருக்க வேண்டும். பின்னர் அந்த கட்டி மற்ற மார்பகத்திற்கு பரவாமல் இருக்க வேண்டுமானால் ஒரு பக்க மார்பை எடுத்துவிட வேண்டும் என மருத்துவர் அறிவுறுத்தியதால் அதை எடுத்துவிட்டேன். சினிமாவில் நான் நடித்த காசையெல்லாம் பிறருக்கு உதவி செய்துவிட்டேன். இன்று எனக்கென வரும் போது காசு இல்லாமல் தவித்து வருகிறேன்.
என் சொந்தகாரர்கள் கூட எனக்கு உதவி செய்யவில்லை. ஒரு மாதத்திற்கு முன்பு நான் பார்த்து வளர்ந்த என் அக்கா மகள் வந்து சாபமிட்டால், இப்போ கேன்சர் வந்திருக்கு. இன்னும் அடுத்தடுத்து நிறைய நோய் வரும். 10 நாள்தான் 10 நாளில் நீ செத்து போய்விடுவேனு சாபம் விட்டாள். ஒரு கையில் சுத்தமாக உணர்ச்சியே இல்லாமல் செயல்படாமல் போய்விட்டது.
ஆனால் சிலர் எனக்கு இரவு போன் செய்து ஒரு பக்கம் மார்பு தானே எடுத்துட்டாங்க. நான் வீடியோ காலில் வரேன் மறுபக்கம் மார்பை காட்டு பணம் அனுப்புறேன்னு மனசாட்சியே இல்லாமல் என்னை கேவலப்படுத்துறாங்க. கஞ்சிதான் குடிக்க வேண்டும். வேறு எதையும் சாப்பிடக் கூடாதுனு சொல்லிட்டாங்க. 10 நாட்களுக்கு மாத்திரை வாங்க ரூ 6500 தேவைப்படுது. அதை வாங்கவே நான் கடுமையாக போராட வேண்டியிருக்கு.
தற்போது இன்னொரு மார்பகத்திலும் கேன்சர் பரவிவிட்டது. இதையும் தற்போது அகற்றிவிட்டேன். இரு மார்பகங்களையும் கசாப்பு கடையில் அறுப்பது போல் அறுத்துவிட்டார்கள். நான் வாழ்வதற்கு பதில் சாவதே மேல், எனக்கு விஷ ஊசி போட்டு கொன்றுவிடுங்கள் என சிந்து கண்ணீர் மல்க கதறினார். தனது சிகிச்சைக்கு நடிகர் சங்கம் உதவ வேண்டும் என கேட்டுக் கொண்டார். அவரது சிகிச்சைக்கு டப்பிங் சங்கம் சார்பில் ராதாரவி உதவியதாக தெரிவித்திருந்தார். மேலும் நடிகை ஷகிலாவும் அவருடைய நண்பரும் பண உதவி செய்து வந்ததாகவும் தெரிவித்திருந்தார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications