அனிருத்திற்கு திருமணம் எப்போது? லேட்டாக காரணம் இதுதான்! வெளிப்படையாக பதில் சொன்ன அம்மா
சென்னை: இசையமைப்பாளர் அனிருத்திற்கு 34 வயது கடந்துவிட்ட நிலையில் அவருக்கு எப்போது திருமணம் என்று எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருக்கும் நிலையில் அவர் திருமணம் பற்றி எந்த அறிவிப்பும் வெளியிடாமல் இருக்கும் நிலையில் அவருடைய அம்மா அனிருத்துக்கு எப்போ திருமணம்? மணப்பெண் எப்படி இருக்க வேண்டும் என்று நிகழ்ச்சி ஒன்றில் பேசி இருக்கிறார்.
இசை அமைப்பாளர் ஏ ஆர் ரகுமானை தொடர்ந்து துள்ளலான இசையில் ரசிகர்களின் மனதை துள்ள வைத்துக் கொண்டிருக்கும் அனிருத் தொட்டதெல்லாம் தங்கம் என்ற பழமொழிக்கு பொருத்தமாக இருக்கிறார். அவர் எந்த பாடல்களுக்கு இசை அமைத்தாலும் அந்த பாடல் ஹிட் என்று சொல்வது போன்று பல பாடல்கள் ஹிட் கொடுத்து இருக்கிறது.

இளமையான இசை
தற்போது இந்திய சினிமா திரை உலகில் முக்கிய இசை அமைப்பாளராக வளர்ந்து நிற்கிறார் அனிருத். அதற்கு முக்கிய காரணம் இசையின் தாக்கம் தான். இளைஞர்கள் மத்தியில் அவருக்கு அதிக வரவேற்பு இருக்கிறது. அதுபோல ஆரம்பத்தில் அனிருத் காதல் பற்றிய சில சர்ச்சைகளில் சிக்கினாலும் இப்போது தன்னுடைய வேலைகளில் மட்டுமே முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார்.
அனிருத் வயது
சமீபத்தில் ஒரு சில நிகழ்ச்சிகளில் மட்டும் தான் அனிருத் கலந்து கொள்கிறார். பெரிதாக பேட்டிகளில் கலந்து கொள்வது இல்லை என்றாலும் அனிருத் இன்னும் திருமணம் செய்யவில்லையே? என்ன காரணம்? யாரையும் காதலிக்கிறாரா? என்ற கேள்விகள் ரசிகர்கள் மத்தியில் இருக்கிறது. அவருக்கு இப்போது 34 வயதை கடந்து விட்டது.

அனிருத் அம்மா பேட்டி
இந்த நிலையில் அவருடைய திருமணம் குறித்து சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அனிருத் அம்மா லக்ஷ்மி ரவிச்சந்திரனிடம் கேட்கும்போது அவர், என்னுடைய மகனின் திருமணம் கடவுள் கிருபையால் எவ்வளவு சீக்கிரம் நல்லபடியா நடக்குதோ அவ்வளவு நல்லது. அவருடைய மனசை புரிஞ்சுக்குற மாதிரியும் அவருடைய டைமிங் எல்லாவற்றையும் புரிஞ்சுக்கிற மாதிரியும் பொண்ணு கிடைக்கணும்.
அனிருத் ஸ்பெஷல்
ஏன்னா பலருக்கும் தெரிந்திருக்கும் கிரியேட்டிவ் ஃபீல்டில் இருக்கிறவங்களுக்கு அவங்களுடைய மனது ரொம்ப ரொம்ப முக்கியம். இன்னும் சொல்ல வேண்டுமென்றால் நான் இன்னைக்கும் அவனை ஒரு குழந்தை மாதிரி தான் பொத்தி பொத்தி வளர்க்கிறேன். அவன்கிட்ட மனசை கஷ்டப்படுத்துற மாதிரி எந்த ஒரு விஷயத்தையும் சொல்ல மாட்டேன். அனிருத் இந்த விஷயத்தில் ஆசிர்வதிக்கப்பட்ட பையன் என்று கூட சொல்லலாம்.

அம்மா செய்யும் உதவிகள்
நான் தான் அவனுடைய ஸ்டுடியோவை கவனிக்கிறேன். அவனுடைய ஷெட்யூலை பாத்துக்குறேன். ஏன்னா அவருடைய ஒரு லைனை நாம கிராஸ் பண்ண கூடாது என்று நினைக்கிறேன். நான் என்னதான் அம்மாவா இருந்தாலும் கூட ஒரு வேலையை பண்ணுறோம் என்ற போது அந்த லைன்ல கிராஸ் பண்ணாமல் பண்ணனும். அது ரொம்ப முக்கியமானது. அதை நான் இப்போ கத்துக்கிட்டேன். அதே மாதிரி அவருக்கு ஒரு பொண்ணு கிடைக்கணும் என்று அந்த பேட்டியில் அனிருத் அம்மா பேசியிருக்கிறார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications