அனிதாவுக்கா இப்படி நடக்கணும்.. ரசிகர்கள், பிக் பாஸ் பிரபலங்கள் வேதனை
சென்னை: அனிதா சம்பத் வீட்டில் நடந்துள்ள துயரம் அனைவரையும் சோகத்தில் மூழ்கடித்துள்ளது .அனிதா சம்பத்தை கடுமையாக விமர்சித்து வந்தவர்கள் கூட இந்த சோகச் செய்தியால் கலங்கிப் போயுள்ளனர்.
Recommended Video

அனிதா சம்பத் தனது தந்தை மீதும், குடும்பத்தினர் மீதும் ரொம்ப பாசம் வைத்திருப்பவர் .பிக் பாஸ் வீட்டிலேயே அதை பலமுறை எடுத்துக் காட்டியுமிருந்தார்.
அடிக்கடி அழுதது அவர்தான் .அதுவும் குடும்பத்தினரை நினைத்து, தன்னை வளர்த்து ஆளாக்க அப்பா பட்ட கஷ்டம் ஆகியவற்றை சொல்லிச் சொல்லி அழுதவர் அவர்தான் .அப்படிப்பட்டவர் அப்பாவை இழந்திருப்பது மிகப் பெரிய வேதனைதான்.

தந்தை சம்பத்
அனிதாவின் கணவர் பிரபாதான் இந்த சோகச் செய்தியை உலகுக்கு சொன்னவர் .அவர் சொன்ன அடுத்த நிமிடமே அனைவரும் அதிர்ந்து போய் விட்டனர் .அனிதாவுக்கா இப்படி ஒரு சோகம் .அதுவும் இப்போதுதான் சந்தோஷமாக பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்தார். வந்த நேரம் பார்த்து இப்படியாக நடக்க வேண்டும் என்று அனைவருமே சோகமாகியுள்ளனர்.

உயிரையே வைத்திருப்பார்
அனிதா சம்பத் உண்மையிலேயே அழகான தமிழ் உச்சரிப்பாளர், செய்தி வாசிப்பாளர், கொடுத்த வேலையை திறம்பட செய்க் கூடியவர். எந்த அளவுக்கு அழுகிறாரோ அதே அளவுக்கு உற்சாகமாகவும் இருக்கக் கூடியவர் . கணவர் மீதும் நிறைய பாசம் வைத்திருப்பவர் .குடும்பத்தினர் மீது உயிரையே வைத்திருப்பவர். அவருக்கு இவ்வளவு பெரிய சோகம் சரியல்ல என்பதுதான் அனைவரின் கவலையாக இருக்கிறது.

லாஸ்லியாவைப் போலவே
இப்படித்தான் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்த லாஸ்லியாவின் தந்தையும் சமீபத்தில் மரணமடைந்தார். அந்த சோகமே இன்னும் தீராத நிலையில் அனிதாவுக்கு இப்படி நடந்திருப்பது அனைவரையும் அதிர்ச்சியும் சோகமும் அடைய வைத்துள்ளது. லாஸ்லியா போலவே அனிதாவும் ஒரு நியூஸ் ரீடர்தான். இப்படி அடுத்தடுத்து இரு பிரபல பிக் பாஸ் பிரபலங்களின் தந்தையர் மரணமடைந்திருப்பது இந்த வருடத்தின் இன்னொரு மிகப் பெரிய சோகம்தான்.

மோசமான வருஷம்
அது என்னவோ தெரியலே. இந்த வருடமே ரொம்ப மோசமாகத்தான் இருக்கிறது. பலரை கண்ணீரில் தவிக்க விட்டு விட்டது. இப்படி ஒறு வருஷத்தப் பார்க்கவா இத்தனை காலம் உயிரோடு இருந்தோம் என்று பலரையும் கண்ணீர் விட வைத்து விட்டது. அன்று லாஸ்லியா அழுதார்.. இன்று அனிதா சோகக் கடலில் மூழ்கியுள்ளார் .நிச்சயம் யாருமே இப்படி ஒரு சோகத்தை எதிர்பார்க்கவில்லை.

கடவுள் இப்படியா செய்வார்
அனிதாவின் தந்தை மரணச் செய்தியால் ரசிகர்களும் சோகமாகியுள்ளனர். பலரும் அவருத இன்ஸ்டா பக்கத்தில் இரங்கல் தெரிவித்து போஸ்ட் போட்டு வருகின்றனர். என்னதான் அனிதாவை பலர் விமர்சித்தாலும் இந்த துயரமான நேரத்தில் அனைவருமே ஒன்றிணைந்து அவருக்கு ஆறுதல் சொல்லி வருகின்றனர் . மிகவும் இளகிய மனம் படைத்தவரான அனிதா விரைவில் அதிலிரு்ந்து மீண்டு பலம் பெற வேண்டும் என்று பலரும் சொல்லி வருகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications