Barathi Kannamma Serial: பாரதி மாமாகிட்ட மச்சினிச்சி ரைட்ஸ் கேட்கறா அஞ்சலி!
சென்னை: விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியல், இப்போது கிராமத்து வாசனையுடன் மணக்கிறது. கிராமத்தில் கொடை விழாவாம். அதற்கு புது மாப்பிள்ளை,பெண்ணை அழைத்து இருக்கிறார் கண்ணம்மாவின் அப்பா.
பாரதியும் மனைவி கண்ணம்மாவுடன் கிராமத்துக்கு புறப்பட்டு போகிறான். கிராமத்தில் நுழைந்தவுடன் பெண்ணையும், மாப்பிள்ளையையும் டிராக்டர்ல் உட்கார வைத்து புது அனுபவமாக இருக்கட்டும் என்று அழைத்துப் போகிறார்.
பாரதியும், கண்ணம்மாவும் ரொம்ப ஜாலியா டிராக்டரில் உட்கார்ந்து என்ஜாய் பண்ணிக்கிட்டு வருவதைப் பார்த்த அஞ்சலி கடுப்பாகிடறா. இருந்தாலும் சகிச்சுக்கிட்டு,பாரதியை சைட் அடிக்கறா.

பாதம் துடைத்து
மச்சினிச்சி ரைட்ஸ் என்று சில விஷயங்களை பாரதி மாமா பாரதி மாமான்னு சொல்லிட்டு அஞ்சலி செய்வதன் அர்த்தம் பாரதிக்கு மட்டுமே தெரியும். இருந்தாலும் ,திருப்பி அவளுக்கு மொக்கை குடுத்துடறான் பாரதி. பாதங்களை கழுவிவிட்டு வீட்டுக்கு உள்ளே அழைத்துப்போக செய்கையில், அவனது பாதத்தை தனது தாவணியால் துடைத்து விடுகிறாள் அஞ்சலி. வேணாம், வேணாம் என்று சொல்லியும் அஞ்சலி நிறுத்தவில்லை..பிறகு கண்ணம்மா குனிந்து,நான் துடைச்சு விடறேன்ன்னு அவள் புடவை முந்தானையால் துடைக்க, அவளைத் தொட்டுத் தூக்கி அஞ்சலியை வெறுப்பேத்தறான் பாரதி.

காசு இல்லை
இருங்க பாரதி மாமா இன்னொரு வரவேற்பு இருக்குன்னு சொல்லிட்டு உள்ளே போன அஞ்சலி, ஹாரத்தி தட்டுடன் வருகிறாள் ஆரத்தி எடுத்துட்டு, தட்டில் காசு போடுங்கன்னு கேட்கறா. அவன் பர்ஸை காரில் வச்சுட்டு வந்துட்டேன்னு சொல்றான். இது மச்சினிச்சி ரைட்ஸ்...காசு போடாம உள்ளே போகக் கூடாதுன்னு சொல்றா. எல்லாரும் உள்ளே போகட்டும், நீங்க மட்டும் இங்கே இருங்க பாரதி மாமான்னு அவள் வெறுப்பேத்த, சட்டென்று மாமனார் பாக்கெட்டில் கைவிட்டு பணத்தை எடுத்து போட்டுடறான்.

சிவப்பு ரோஜா
இங்க பாரதி மாமா, இன்னொரு சர்பிரைஸ் காத்து இருக்குன்னு சொல்லிட்டு, காதல் அர்த்தத்தில், ஒற்றை சிவப்பு ரோஜாவை நீட்டுகிறாள். அவன் வாங்க முடியாமல் தவிக்க ,எல்லாரும் வாங்கிக்கோங்கன்னு சொல்லி உசுப்பேத்தறாங்க. அவனும் வாங்கி கையில் வச்சுக்கறான்.பாரதி மாமா இதை உங்க காதில் வச்சுக்கோங்கன்னு சொல்ல, அவன் உடனே காம்பை பாதி கிள்ளி கண்ணம்மாவின் தலையில் வச்சுட்டு, இப்போ எப்படின்னு பார்வையால் கேட்கிறான். கண்ணம்மா பூவை தலையில் வைத்து எழுந்து போக, அதை எடுத்து பிச்சு போடறா அஞ்சலி.

உப்பு காபி
கண்ணம்மாவும் காபி கொண்டு வர, அஞ்சிலியும் காபி கொண்டு வர இத்தனை நாள் நீதானே மாமாவுக்கு காபி குடுத்தே, இன்னிக்கு நான் குடுக்கறேன்னு சொல்ல, கண்ணம்மாவும் சரி நீயே குடுன்னு விட்டுடறா. இப்படித்தான் அக்காங்க தங்கைகளுக்கு வழிவிட்டு ஒதுங்கிக்கணும்னு பாரதியைப் பார்த்து சொல்றா. பாரதி காபியை வாயில் வச்சவுடன் துப்பிடறான். என்னங்கன்னு கேட்க உப்பு போட்டு இருக்கா கண்ணம்மான்னு சொல்றான்.
சட்டையில் காபி பட்டுவிட துடைத்து விடுகிறாள் அஞ்சலி. கடுப்பான பாரதி நெளிகிறான். மச்சினிச்சி குறும்பு எல்லாம் நல்லாத்தான் இருக்கு. ஆனால்,அது வேற அர்த்தத்தில் அஞ்சலி செய்கிறாள் எனும்போது பத்திகிட்டு வருது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications