பிராங்க் செய்த அண்ணாச்சி, பிரியங்கா...மீண்டும் களைகட்டிய பிக் பாஸ்
சென்னை: இந்த மாதிரி பிரியங்காவை பார்த்து எத்தனை நாளாச்சு என அவருடைய ரசிகர்கள் ஆர்ப்பரித்து வருகின்றனர்.
மீண்டும் பழைய ஃபார்முக்கு வந்த பிரியங்காவை அவருடைய ரசிகர்கள் வரவேற்று வருகின்றனர்.
என்னதான் பிரச்சனைகள் இருந்தாலும் அண்ணாச்சியும், பிரியங்காவும் சேர்ந்தாலே அல்டிமேட் தான் என்று ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

பிரியங்காவின் உண்மையான குணம்
அபிஷேக் வெளியே சென்ற பிறகு பிரியங்கா அதிக அளவில் எந்த பிரச்சனையிலும் தலையிடாமல் அமைதியாக மாறிவிட்டார் என அவருடைய ரசிகர்கள் ரொம்பவே பீல் பண்ணி வந்தனர். ஆனால் தற்போது ப்ரியங்கா மீண்டும்
ஜாலியாக மாறி தன்னுடைய கேரக்டரில் ஜொலிக்க ஆரம்பித்துவிட்டார் என்று ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் இப்படியே இருந்தால் பிரியங்காவிற்கு அழகு என்றும் அவருடைய உண்மையான குணம் இதுதான் என அவருடைய தீவிரமான ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

கருத்து வேறுபாடு
பிக்பாஸ் ஐந்தாவது சீசன் ஆரம்பமான முதல் வாரத்தில் போட்டியாளர்கள் அனைவரும் ஜாலியாக ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுக்காமல் இருந்து வந்தனர். இதை பார்க்கும்போது ரசிகர்களுக்கு நன்றாகவே இருந்தது. ஆனால் நாட்கள் செல்ல செல்ல போட்டியாளர்களுக்குள் மோதல்களும் பிரச்சினைகளும் ஏற்பட தொடங்கியது. ரசிகர்களுக்கு வருத்தத்தை கொடுத்தது. அதுமட்டுமல்லாமல் பிரியங்காவிருக்கும் அண்ணாச்சிக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இவர்கள் இருவரும் அடிக்கடி முட்டிக் கொண்டிருந்தனர். இது இவர்களுடைய ரசிகர்களுக்கு வருத்தத்தை கொடுத்து நிகழ்ச்சி சுவாரசியமாக இல்லை எனக் கூறி வந்தனர்.

ரசிகர்களின் கருத்து
ஆனால் பிரியங்காவின் ரசிகர்கள் அவர் அபிஷேக் உடன் சேர்ந்துதான் எப்படி மாறிவிட்டார் என்று கூறி வந்தனர். அதனால் அபிஷேக் வெளியே சென்றுவிட்டால் பிரியங்கா தன்னுடைய விளையாட்டை அழகாக விளையாடுவார் என கூறி வந்த நிலையில் இன்று ரசிகர்களின் வாக்கு பலித்திருக்கிறது. இன்றைய அன்சீனில் பிரியங்காவும் அண்ணாச்சியும் சேர்ந்து செய்த பிராங்க் தான் ரசிகர்களால் ரசிக்கப்பட்டு வருகிறது.

ஜாலியான பிராங்க்
இன்றைய எபிசோடு பிரமோக்களில் அழுகாச்சி சீன்களை பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்கள் அன்சீனுக்காக காத்திருந்தனர். ரசிகர்களின் விருப்பப்படியே தற்போது அண்ணாச்சியும், பிரியங்காவும் சேர்ந்து சக போட்டியாளர்களை பிராங்க் செய்து ஏமாற்றி இருக்கிறார்கள். நாங்கள் காயினை எடுத்து விட்டோம் என்று சொல்லிக்கொண்டு கேமரா முன்பு இவர்கள் பேசிக் கொண்டிருந்ததைப் பார்த்ததும் வருண், நீங்கள் கையில் வைத்திருப்பதை நான் பார்த்துவிட்டேன் என்று இவர்களிடம் மாட்டியிருக்கிறார். இதை பார்த்து கொண்டிருக்கும் ரசிகர்களின் மனம் கவர்ந்த பிரியங்கா, அண்ணாச்சியின் லேட்டஸ்ட் ப்ரமோதான் வைரலாக பரவி வருகிறது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications