Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அப்பத்தா உயிருக்கு ஆபத்து.. எச்சரித்த ஜீவானந்தம்.. குணசேகரன் ப்ளான் என்ன? எகிறும் எதிர் நீச்சல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தீபாவளி நாளில் மயங்கி விழுந்து விட்டார் அப்பத்தா. அதைப்பார்த்து பெண்கள் அனைவரும் துடித்துப்போக அப்பத்தாவின் உயிருக்கு ஆபத்து என்று எச்சரிக்கிறார் ஜீவானந்தம். என்ன நடக்கப்போகிறது எதிர் நீச்சல் சீரியலில் இன்றைய எபிசோடு பார்வையாளர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.

சீரியல் கொலைகள்: சொத்துக்காக அம்மாவை கொலை செய்கிறார்கள்.. அண்ணன் தம்பிகளை அடித்து கொல்கிறார்கள் என்று செய்திகளில் படித்திருந்தாலும் டிவி சீரியல்களிலும் அது போல சீன்கள்தான் அதிகம் வைக்கப்படுகிறது. கூடவே இருந்து குழி பறிக்கும் வில்லிகள் அதிகம் உலா வரும் காலம் இது. சின்னத்திரையில் வீட்டுக்கு வீடு வில்லிகளும் வில்லன்களும் சொந்தக்காரர்கள் உருவத்தில் உலா வருகின்றனர்.

Appathas life is in danger in Ethir Neechal Serial Today Promo 13th November 2023

எதிர் நீச்சல்: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல்களுக்கு தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. பல பிரபலங்களும் இந்த சீரியல்களை இரவு நேரத்தில் பார்த்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். ஆதி குணசேகரன் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. அப்பத்தாவின் சொத்து யாருக்கு என்ற கேள்வியோடு பல எபிசோடுகள் பயணத்திருக்கிறது எதிர் நீச்சல் சீரியல்.

சொத்து: அப்பத்தா தனது 40 சதவிகித சொத்துக்களை தனது கொள்ளுப்பேத்திகள், பேரன்கள் மேல் எழுதி வைத்து குணசேகரன் தலையில் இடியை போட்டு விட்டார். கொள்ளுப்பேரன்கள், பேத்திகள் மேஜராகும் வரை அந்த சொத்துக்களை மருமகள்கள் கவனித்துக்கொள்வார்கள் என்றும், அந்த சொத்துக்கு ஜீவானந்தம்தான் மேனேஜிங் டிரஸ்டி என்றும் அறிவித்து விட்டார் அப்பத்தா.

மயக்கமான அப்பத்தா: இனியும் அப்பத்தாவை விட்டு வைக்கக்கூடாது என்று குணசேகரன் எடுத்த வில்லத்தனமான முடிவு விபரீதத்தை ஏற்படுத்தியிருக்கிறது. எல்லோரும் பண்டிகை கொண்டாட்டத்தில் இருக்கும் நேரத்தில் அதனை பயன்படுத்தி அப்பத்தாவிற்கு பாலில் தூக்க மாத்திரையை கொடுத்து எதுவுமே நடக்காதது போல இருந்து விட்டார் குணசேகரன். அப்பத்தாவோ பாலை குடித்து விட்டு படுக்கை அறையில் மயங்கி கிடக்க சந்தேகமடைந்த ஜனனி பதற்றத்தோடு அப்பத்தாவை எழுப்புகிறார்.

குணசேகரன் வில்லத்தனம்: ஜான்சி ராணியோ, அப்பத்தா சோலி முடிஞ்சி போச்சு என்று சொல்ல, மருமகள்கள் மூன்று பேரும் பதற்றமடைந்து உடனே மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்று சொல்கிறார்கள். அதற்கு குணசேகரன் யாரும் என்னுடன் வர வேண்டாம் நான் பார்த்துக் கொள்கிறேன் என் சொல்லி விட்டு தனது தம்பிகளுடன் அப்பத்தாவை காரில் வைத்து கொண்டு போகிறார்.

அடுத்தது என்ன: குண சேகரனை நம்பாத மருமகள் பின்னாலேயே மற்றொரு காரில் போகிறார். அருகில் இருக்கும் மருத்துவமனைகளில் எல்லாம் தேடினால் அப்பத்தாவை எங்கேயும் அட்மிட் செய்யவில்லை என்பது தெரிய வருகிறது. அப்பத்தாவிற்கு என்ன ஆச்சோ, ஏது ஆச்சோ என்று மருமகள் பதறிப்போய் நின்று கொண்டிருக்க அப்போது ஒரு போன் வருகிறது.

எச்சரிக்கும் ஜீவனந்தம்: ஈஸ்வரிக்கு போன் செய்த ஜீவானந்தம், அப்பத்தா உயிருக்கு ஆபத்து என்று சொல்கிறார். உடனே எல்லோரும் பதறிப்போக சக்தியோ தனது அண்ணன்களுக்கு போன் செய்து அப்பத்தா எங்கே இருக்கிறார் என்று கேட்கிறார். அதற்கு இரண்டாவது அண்ணனோ, நீ பேசம வீட்டிற்கு வா என்று சொல்லி விட்டு போன வைக்க எல்லோருக்குமே குழப்பமாகிறது.

எகிறும் எதிர்பார்ப்பு: அப்பத்தாவிற்கு என்ன ஆச்சு? எங்கே வைத்திருக்கிறார்கள் என்று மூன்று மருமகள்களும் கண்டுபிடித்தால் தான் அவரை காப்பாற்ற முடியும். அப்பத்தாவின் உயிர் தப்புமா? பல எபிசோடுகளாவே அப்பத்தா செத்து செத்து விளையாடுகிறார். இன்றைய எபிசோடு பார்வையாளர்களின் பல்ஸ்ஸை எகிற வைத்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+