அரண்மனை கிளி... சின்னதம்பி ரெண்டு சீரியலும் ஒண்ணாயிருச்சுங்கோ!
சென்னை: விஜய் டிவியில் அரண்மனை கிளி, சின்னதம்பி ரெண்டு சீரியலும் மக்கள் மனதைக் கவர்ந்த சீரியல்கள். இந்த ரெண்டு சீரியலையும் வச்சு விஜய் டிவி ஃபார்முலா படி ஒண்ணா ஒளிபரப்பறாங்க.
அதாங்க சின்னதம்பி சீரியல் குடும்பத்தின் 60ம் கல்யாணத்துக்கு அரண்மனைக்கிளி சீரியல் குடும்பத்துக்கு பத்திரிகை வைக்கறாங்க. அரண்மனைகிளி ஜானு, அர்ஜுன், விஜயா மூணு பேரும் சின்னத்தம்பி சீரியல் குடும்ப கல்யாணத்துக்கு சின்னாளம் பட்டிக்கு போறாங்க.
ஏற்கனவே, அரண்மனை கிளி ஜானுவின் கணவர் அர்ஜுனின் கால் சரியாக வேண்டும் என்றால், சின்னாளம்பட்டியில் இருக்கும் அம்மன் கோயிலுக்கு போக சொல்லி குறி சொல்ற அம்மா சொல்றாங்க.அதுக்கு ஏத்த மாதிரி சின்னத்தம்பி சீரியல் குடும்பம் பத்திரிகை வைக்கறாங்க.

அரண்மனைகிளி
முதலில் ஜானு, அர்ஜுன், விஜயா கல்யாண வீட்டுக்கு போறாங்க.அங்க அர்ஜுனை எப்படி அம்மன் கோயிலுக்கு அழைச்சுக்கிட்டு போறதுன்னு ஜானு யோசிக்கறா.இப்படி வழக்கமா அரண்மனைக்கிளி சீரியல் ஆரம்பிக்கற நேரத்துல தொடங்குது.

சின்ன தம்பி
நந்தினிகிட்ட ஐடியா கேட்கலாம்... நந்தினி சொன்னா நிச்சயம் அர்ஜுன் கேட்பான்னு நினைச்சு கீழ வரும்போது சின்னத்தம்பி சீரியல் ஆரம்பிக்குது. நந்தினி நான் கூப்பிடறேன்னு கல்லூரி தோழனான அர்ஜுனை கூப்பிட, அர்ஜுன் ஒப்புக் கொள்கிறான்.

ஒண்ணாகுது
சின்னதம்பியம், நந்தினியும், அர்ஜுன், ஜானு, விஜயாவை அழைச்சுக்கிட்டு அம்மன் கோயிலுக்கு போயி பரிகாரம் செய்யறாங்க. இந்த காட்சியில் அரண்மனை கிளி, சின்னதம்பி ரெண்டு சீரியலையும் ஒண்ணாக்கிடறாங்க.

ரொமான்ஸ்
இன்னும் பேருக்கு மட்டுமே கணவன் மனைவியாக வாழ்ந்துகொண்டு இருக்கும் அர்ஜுனும், ஜானுவும் அங்கு இருக்க, 60ம் கல்யாணம் செய்துகொள்ளப் போகும் சின்னத்தம்பியின் அப்பா மனைவியை ஆசையாகப் பார்க்க யாருக்கும் தெரியாமல் தலையில் துண்டைப் போட்டுக்கொண்டு ரகசியமாக வருகிறார். ஜானுவும், அர்ஜுனும் வெட்கப்படுகிறார்கள்..

60ம் கல்யாண தம்பதி
சின்னத்தம்பியின் அம்மா யாதார்த்தமாக அங்கு வர, தலையில் துண்டோடு நிற்கும் கணவரை கண்டு வாஞ்சையுடன் பார்க்கிறாள் திருமண தம்பதி பிரிந்து இருக்க வேண்டும் என்பதற்காக இருவரும் கல்யாணம் வரை ஒரு நாள் மட்டும் பிரிந்து இருக்கிறார்கள்.

இவள் சாப்பிட
சாப்டீங்களாக மனைவி கேட்க, இல்லை.. இத்தனை வருஷத்துல உன் கையாளல ஒரு நாள் கூட சாப்பிடாம இருந்ததில்லை.. என்று கணவன் ஏக்கத்துடன் சொல்ல, இருங்க..சாப்பாடு எடுத்துட்டு வரேன்னு ஆசையா மனைவி எடுத்து வருகிறார்.இவர் பிசைந்து கொடுக்க, மனைவிக்கு தனது கையால் சின்ன தம்பியின் அப்பா ஒரு உருண்டை கொடுக்க என்று படு ரொமான்ஸ்..
வழக்கம்போல அரண்மனைகிளி ஆரம்பிக்கற நேரத்துல சீரியல் ஆரம்பிச்சு, அதோட சின்னத்தம்பியும் மிக்ஸ் ஆகி, சரியா சின்ன தம்பி சீரியல் முடியற நேரத்துல முடிஞ்சுருது. இதெல்லாம் ஒரு கிரியேட்டர்ஸ் சாமர்த்தியம்தான்...
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்!












Click it and Unblock the Notifications