Aranmanai Kili Serial: நினைச்சது ஒண்ணு நடந்தது ஒண்ணு அதனால முழிக்குது...!
சென்னை: பாம்பு கதைகள் தொலைக்காட்சி சானல்களில் சக்கை போடுப் போட்டு வருகின்றன. குழ்நதைகள் முதல் பெரியவர் வரை இவைகளை ரசித்து பார்த்து வருகின்றனர்.
இதில் விதம் விதமான பாம்பு கதைகள் நம்மையே மலைக்க வைக்கின்றன. அப்படி ஒன்றுதான் விஜய் டிவியின் அரண்மனை கிளி சீரியல்.
அரண்மனை கிளியில் ஜானுவின் மீது சர்ப்ப தோஷம் உள்ளது என்று துர்காதான் கொளுத்திப் போட்டு, சர்ப்பம் யார் மேல் இருக்கிறது என்று கண்டுபிடிக்க நிவர்த்தி பூஜை செய்ய வேண்டுமென்று கூறுகிறாள்.

பயந்த ஜானு
ஜானுவைத்தான் ஆலகால விஷம் கொண்ட பாம்பு தீண்டி இன்னும் ஒரு மாதத்துக்குள் உயிர் போகும் என்று சித்தர் சொல்லி இருக்கார்.அதே மாதிரி அந்த பாம்பு வந்து ஜானுவைத் தீண்டி அவளுள் விஷமும் கொஞ்சமா கொஞ்சமாக எறிவருகிறது. இந்த பூஜையில் நாம்தான் மாட்டிக் கொள்வோம் என்று ஜானு வெளியில் போக நினைக்க, துர்கா அவளின் அறையை வெளிப் பக்கமாக தாழ்ப்பாள் போட்டு விடுகிறாள்.

ஜானு உடல்
ஹாலில் பூஜை நடந்துகொண்டு இருக்க மகுடி சத்தத்தில் ஒரு மாதிரியான ஜானு, தலை வலிக்குதுன்னு அறைக்கு போயிட்டு வரேன்னு போகிறாள். அங்கும் போயி மகுடி சத்தம் இவளை என்னவோ செய்ய உடம்பெல்லாம் வலிக்குது. ஜானு உடல் வலியில் துடிப்பது பாவமாக இருக்கிறது.

துர்கா புருஷன்
மகுடி சத்தம் கேட்க கேட்க யார் உடம்பில் சர்ப்பம் இருக்கிறது என்று பூசாரியும் பார்த்துக்கொண்டே இருக்கிறார். கடைசியில் இதற்கு ஏற்பாடு செய்த துர்காவின் புருஷன் உடம்பிலேயே சர்ப்பம் இருந்து மகுடியின் சத்தத்துக்கு ஏற்ப அவன் ஆடுகிறான்.

உன் புருஷன்
மீனாட்சி அம்மா சொல்றாங்க..துர்கா கடைசியில் உன் புருஷன் உடம்பிலதான் சர்ப்பம் இருந்து இருக்கு. அவனை ரூமுக்குள்ளே போயி படுக்க வச்சு நல்லா பார்த்துக்கோன்னு சொல்லி பூஜையை நிறுத்த சொல்றாங்க. ஒரு மாதிரி ஆகிவிடுகிறாள் துர்கா.

நான் பார்த்துக்கறேன்
நேராக ஜானுவின் அறைக்குள் துர்கா போக, அங்கு வந்த அர்ஜுன், என்ன துர்கா...ஜானு ரூமுக்குள்ளே நீ எதுக்கு போறேன்னு கேட்கறான்.இல்லை ஜானு தலைவலின்னு சொன்னாளே அதான் பார்த்துட்டு போகலாம்னு வந்தேன்னு சொல்ல, என்ன துர்கா அவதான் தலை வலிக்குதுன்னு சொன்னால்ல ..அவளை ஏன் தொந்திரவு பண்றே.. என் ஜானுவை எனக்கு பார்த்துக்க தெரியும். உதவி வேணும்னா உன்னை கேட்கிறேன்னு சொல்றான் அர்ஜுன்.
கடுப்புடன் போகிறாள் துர்கா.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications