இருட்டு அறையில்... இரும்பு சங்கிலி... எப்போதும் கூச்சல்... ஜானு அங்க எதுக்கு போனா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியின் அரண்மனை கிளி சீரியலில் மன நிலை சரியில்லாமல் இருந்த துர்காவின் அம்மா எப்படி சரியானாங்க?

பெத்த அம்மாகிட்ட நாலு வார்த்தை பேச வேணாமா, எப்போதும் இருட்டு அறையில் நாற்காலியில் உட்கார வச்சு கட்டிப் போட்டு இருந்தா மன நிலை எப்படி சரியாகும்?

இவ்ளோ யோசிச்ச டைரக்டர் எமோஷனலா ஒரு சீன்ல கோட்டை விட்டுட்டாரே...ஆடியன்ஸுக்கே இந்த கேள்வி வருதுங்க.. இப்போ படிக்கறவங்களும் கேட்பாங்க பாருங்க.

சரியில்லையா?

சரியில்லையா?

துர்கா எப்போதும் மீனாட்சி அம்மாவோட சொத்தை கைப்பத்தணும்னு நினைச்சுகிட்டு இருக்க, அவங்கம்மாவுக்கு மன நிலை சரியில்லை. துர்காவுக்கு அம்மா மேல் பாசம் அதிகம்... ஆனா, பாருங்க சதி வேலையை திங்க் பண்ணிகிட்டே இருக்கறதுனால அம்மா கூட பேச நேரமில்லை.

ஜானு

ஜானு

அர்ஜுனுக்கு மனைவியா வாழ வந்த ஏழை வீட்டு பெண் ஜானு. இவளுக்கு துர்கா அம்மா மன நிலை சரியில்லாதவங்கன்னு தெரிய வருது. அவங்களை பார்க்க போய் அடி வாங்கிய சம்பவங்களும் உண்டு. அது மட்டுமா, இன்னொரு நாள் அவங்க நீண்ட நகத்துல முகத்தில் கீறல் கூட வாங்கிய அனுபவம்.

அம்மாவுக்கு பணிவிடை

அம்மாவுக்கு பணிவிடை

இருந்தும் அவங்களை எப்படியாவது பேசி மன நிலையை சீராக்க வேண்டும் என்று துடிக்கிறாள் ஜானு. ஒரு நாள் துர்கா அம்மாவின் அறைக்குள் சென்று, அப்படி இப்படி அன்பா பேசி, பால் குடிக்க வைக்கிறாள். மெதுவாக கை, கால் விரல் நகங்களை வெட்டி விடுகிறாள். குளித்து முழுகி அழகாக தலை வாரி பொட்டும் வைத்து விடுகிறாள் ஜானு.

பிடித்த டிஷ்

பிடித்த டிஷ்

உங்களுக்கு என்ன சாப்பிட வேணும்னு சொல்லுங்க செய்து தரேன்னு ஜானு கேட்க, துர்கா அம்மா குழிப் பணியாரம், தேங்காய் சட்னின்னு சொல்றாங்க. உடனே ஜானு செய்து கொடுக்க ஆசையாக சாப்பிடுகிறார் அம்மா. இந்த மெனுவை தட்டில் பார்த்த துர்கா, இது அம்மாவுக்கு பிடிச்ச டிஷ் ஆச்சேன்னு கண் கலங்குக்கிறாள்.

கண்களில் நீர்

கண்களில் நீர்

ஜானுவும், விஜயாவும் நடந்ததை துர்காவிடம் சொல்ல, அந்த வீட்டில் அதுவரை யாருக்கும் பிடிக்காமல் இருந்த ஜானு அப்போதுதான் துர்காவின் மனசை டச் செய்கிறாள். அம்மாவின் மேல் அதீத பாசம் கொண்ட துர்கா, எமோஷனலுடன் மாடி அறைக்கு ஓடிச்சென்று அம்மாவைப் பார்க்க வேண்டுமா, வேண்டாமா?

எல்லாருமே..

எல்லாருமே..

உண்மையில் எல்லாருமே இந்த சீனைப் பார்த்து கண்கலங்கியதுதான் நிஜம். இந்த மாதிரி காட்சியில் தனது அம்மா இதுவரை அலங்கோலமாக இருந்தவர் இப்போது அழகாக குளித்து, உடை அணிந்து பொட்டு வைத்துக்கொண்டு.. தானாக சாப்பிடவும் செய்தாரா.. ஐயோ அந்த அழகைப் பார்க்கணுமேன்னு ஓட மாட்டாங்க?

வெறும் கண்ணீர்

வெறும் கண்ணீர்

இங்கே துர்கா இத்தனை எமோஷனலான சீனுக்கு வாயில் குழிப் பணியாரத்துடன் விழுங்குவதா வேண்டாமா என்பது போல கண்ணீர் விட்டபடி, நாற்காலியில் இருந்து எழவில்லை.டைரக்டரே... கோட்டை விட்டுடீங்க!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+