நொடியில் உயிர் தப்பிய அறந்தாங்கி நிஷா மகளுக்கு பிரம்மாண்டமான விழா.. கண்கலங்கிய தாய் பாசம்
சென்னை: விஜய் டிவி நிகழ்ச்சிகளில் பிரபலமான அறந்தாங்கி நிஷா தன்னுடைய மகளின் காதுகுத்து விழாவை பிரம்மாண்டமாக நடத்தி இருக்கிறார். அந்த புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறந்தாங்கி நிஷா பகிர்ந்து இருக்கும் நிலையில் குழந்தையை பலரும் ஆசிர்வதித்து வருகிறார்கள்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் பங்கு பெற்ற ஆண் போட்டியாளர்களுக்கு டப் கொடுத்துவிட்டு தன்னுடைய திறமையை வெளிக்காட்டி அறந்தாங்கி நிஷா சாதித்திருந்தார். அந்த நிகழ்ச்சியில் கிடைத்த பிரபலம் காரணமாகவே சின்னத்திரை நடிகை, தொகுப்பாளர், வெள்ளித்திரை நடிகை என்று பிசியாக கலக்கிக் கொண்டிருக்கிறார்.

ஆனாலும் அறந்தாங்கி நிஷாவின் குடும்பம் அவ்வளவு வசதி வாய்ப்பு நிறைந்ததாக இல்லை. ஆனாலும் நடுத்தர குடும்பத்தை சார்ந்த அறந்தாங்கி நிஷா ஆரம்பத்திலேயே பட்டிமன்ற பேச்சாளராக இருந்து அதன் மூலம் கிடைத்த பிரபலத்தின் காரணமாகவே விஜய் டிவி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு இப்போது பல முன்னணி நடிகர்களோடு திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
தான் வாங்கும் சம்பளத்தில் தன்னால் முடிந்த அளவிற்கு பலருக்கும் உதவி செய்து வருகிறார். அதிலும் கடந்த புயல் பாதிப்பு ஏற்பட்ட நேரத்தில் அறந்தாங்கி நிஷா அவருடைய கணவரோடு சேர்ந்து பல குடும்பங்களுக்கு ஓடி ஓடி உதவிகளை செய்திருந்தார். அதுபோல மழை பாதிப்பால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மக்களுக்கும் அறந்தாங்கி நிஷா உதவி செய்திருந்தார்.
இந்த அளவிற்கு உதவி செய்யும் அறந்தாங்கி நிஷாவின் வாழ்க்கையிலும் பெரிய அதிர்ச்சிகரமான சம்பவங்கள் நடைபெற்று இருக்கிறது. சில வருடங்களுக்கு முன்பு அறந்தாங்கி நிஷா தன்னுடைய குழந்தை பிறந்த சில நாட்களிலேயே காரில் போய்க்கொண்டிருக்கும் போது பெரிய ஆக்சிடெண்டில் சிக்கி இருக்கிறார்.
அந்த நேரத்தில் தன்னுடைய மகள் உயிர் பிழைத்தது அபூர்வம் என்றும் அந்த ஆக்சிடென்ட்க்கு பிறகு தன்னுடைய மகள் சின்ன அதிர்ச்சியை கூட தாங்கிக்க முடியாத அளவிற்கு இருக்கிறார் என்றும் பேட்டி ஒன்றில் கண்கலங்க அறந்தாங்கி நிஷா பேசியிருந்தார். அதனாலேயே தன்னுடைய மகளுக்கு தான் இன்னும் காது குத்தவில்லை என்று சொல்லி இருந்தார்.
அதுபோல அறந்தாங்கி நிஷாக்கு ஆக்சிடென்ட் ஆகி இருக்கும்போது அந்தப் பக்கமாக புது காரில் நம்பர் பிளேட் வாங்குவதற்காக சென்று கொண்டு இருந்த இளைஞர்கள் தான் எங்களை தூக்கிக்கொண்டு ஹாஸ்பிடலில் சேர்த்தது, பிறகு எங்களுக்கு ஹாஸ்பிடலில் பல உதவிகளையும் செய்திருந்தார்கள். ஆனால் பிறகு அந்த இளைஞர்கள் எங்கே போனார்கள் அவர்கள் எந்த ஊர்க்காரர்கள் என்று எங்களுக்கு தெரியாது.
என்னுடைய குழந்தைக்கு அந்த தம்பிமார்களின் மடியில் வைத்து காதுகுத்துவேன் என்று அறந்தாங்கி நிஷா கூறியிருந்தார். இந்த நிலையில் நேற்று தன்னுடைய மகளுக்கு அறந்தாங்கி நிஷா காதுகுத்தி இருக்கிறார். அந்த புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருந்த நிலையில் குழந்தை இனி நலமுடன் இருக்க வேண்டும் என்று பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து குழந்தையை ஆசீர்வதித்து வருகிறார்கள்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications