ஆண்கள் குடும்பத்திற்காக செய்யும் ‘தியாகம்’ பெரியது.. குடும்ப விஷயத்தை பேசி நெகிழ்ந்த அறந்தாங்கி நிஷா
சென்னை: விஜய் டிவியில் போட்டியாளராக கலந்து கொண்டு தொகுப்பாளினியாக மாறிய அறந்தாங்கி நிஷா நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது ஆண்கள் குறித்து பெருமையாக பேசி இருக்கிறார். ஆண்கள் குடும்பத்திற்காக செய்யும் தியாகம் பெரியது என்று அவர் கூறியிருக்கும் நிலையில் ரசிகர்கள் பலரும் அறந்தாங்கி நிஷாவை பாராட்டி இருக்கிறார்கள்.
தற்போதைய சூழ்நிலையில் ஆண்கள், பெண்கள் எல்லோருமே வேலைக்கு போய்க்கொண்டிருக்கிறார்கள். அவசரமான உலகத்தில் அன்றாட வாழ்க்கையை நடத்துவது அவ்வளவு எளிமையான விஷயமாக இல்லை. அதே நேரத்தில் திருமண பந்தத்தில் கணவன் மனைவி இருவரும் ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து அந்த குடும்பத்தை நடத்தும் போது தான் வாழ்க்கை சுமுகமாக போய்க் கொண்டிருக்கிறது.

நிலைமை மாறியிருக்கு
ஆரம்ப காலகட்டத்தில் எல்லாம் ஆண்கள் தான் எல்லாமே என்று சில பெண்களே சொல்லிக் கொண்டு வீட்டில் இருக்கும் பெண்களை மட்டம் தட்டி கிச்சனிலே உட்கார வைத்திருந்தனர். ஆனால் இப்போது நிலைமையே மாறி இருக்கிறது. விண்வெளியில் ஒரு மாதமாக கூட ஆண்களுக்கு நிகராக பெண்ணால் சாதிக்க முடியும் என்று பெண்கள் நிரூபித்து கொண்டிருக்கிறார்கள்.
தியாகம்
ஆனால் அப்படி ஒரு பெண் தன்னுடைய திறமையை நிரூபிக்கும் போது அதற்கு பின்னால் அவருடைய கணவரின் சப்போர்ட்டும் இருக்கிறது. இப்போதைய சூழ்நிலையிலும் கூட ஆண் ஆதிக்கம் மனப்பான்மையோடு சிலர் நடந்து கொள்கிறார்கள். ஆனால் பலர் தன்னுடைய குடும்பத்திற்காகவும், தன்னுடைய குழந்தைகளுக்காகவும், மனைவியாகவும் பல்வேறு கஷ்டங்களை அனுபவிக்கிறார்கள்.
அவமானங்களும் கஷ்டங்களும்
காலையில் வீட்டை விட்டு வெளியே சென்றால் வேலைக்கு போகும் இடத்தில் எத்தனையோ அவமானங்கள் பட்டாலும் வீட்டில் இருக்கும் குழந்தைகளையும் தன்னுடைய மனைவியையும் நன்றாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறார்கள். தங்களுடைய குடும்பத்திற்காக பலர் வெளிநாடுகளில் கஷ்டப்படும் கதை எல்லாம் கேட்டு இருப்போம். அதுபோலத்தான் நடிகையும் விஜய் டிவி பிரபலமன அறந்தாங்கி நிஷா தன்னுடைய கணவர் பற்றி பேசி ஆண்களை பாராட்டி இருக்கிறார்.
வெளிநாட்டு வேலை
அதாவது அறந்தாங்கி நிஷாவின் நகையை அடமானம் வைத்துதான் அவருடைய கணவர் சவுதி அரேபியாவுக்கு போனாராம். இரண்டு வருஷம் அங்கே வேலை பார்த்து இருக்கிறார். அப்போது அறந்தாங்கி நிஷாவின் குடும்பத்தினருக்கு அவருடைய கணவர் என்ன வேலை செய்கிறார் என்றே தெரியாதாம். மாதத்திற்கு 10, 12, 15 ஆயிரம் என்று பணம் மட்டும் அனுப்பி கொண்டிருந்தாராம்.
கணவர் சொன்ன வார்த்தை
பிறகு இரண்டு வருடம் கழித்து அவர் ஊருக்கு திரும்ப வரும்போது ஊர்காரர்கள் எல்லாம் அவருக்கு ஏதோ வியாதி வந்துடுச்சு என்று பேச தொடங்கி இருக்கிறார்கள். ஏன்னா அவர் வெளிநாட்டிற்கு போகும்போது குண்டா போனாராம். ஆனால் அங்கிருந்து அவர் வெளியே வரும்போது ஒல்லியாக மாறி ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு இருந்திருக்கிறார். அது பற்றி அறந்தாங்கி நிஷா கேட்டதற்கு அவர் நான் ரெண்டு வருஷமா வெளிநாட்டில் பாத்ரூம் தான் கழுவினேன். என்னை நம்பி நீ இருக்க உனக்காக என்ன வேணாலும் செய்வேன் என்று சொல்லி இருக்கிறார்.

ஆண்களுக்கு நன்றி
அதுபோல நம்ம நாட்டுல எல்லா ஆண்களுமே வெளிநாட்டில் குடும்பத்திற்காக கஷ்டங்களை அனுபவிக்கிறாங்க. தலைகீழாக தொங்கி கொண்டு பெயிண்ட் அடிக்கிறாங்க. குடும்பத்துக்காக எவ்வளவு கஷ்டங்களை தாங்கிக்கிறாங்க. எல்லா ஆண்களுக்கும் பெரிய நன்றி சொல்கிறேன் என்று அறந்தாங்கி நிஷா பேசியிருக்கிறார். அறந்தாங்கி நிஷா சொன்னது சரிதானா? ஆண்கள் தன்னுடைய குடும்பத்திற்காக படும் கஷ்டங்களை வீட்டில் இருக்கும் மனைவிகள் புரிந்து கொள்கிறார்களா? இல்லையா? மக்களே.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications