நயன்தாராவுக்கு போட்டியாக மகளுடன் போட்டோ ஷூட்டை தொடங்கிய அறந்தாங்கி நிஷா..
சென்னை : சின்னத்திரையின் நயன்தாரா என்று செல்லமாக ரசிகர்களால் அழைக்கப்படும் அறந்தாங்கி நிஷா தற்போது அவருடைய மகளுடன் எடுத்த வீடியோ தான் வைரலாக இன்ஸ்டாகிராமில் வலம் வருகிறது.
அழகு என்பது பார்ப்பவர்களின் கண்களில் இல்லை மனதில்தான் இருக்கிறது என்று நிரூபித்த நிஷாவுக்கு வாழ்த்துக்கள் குவிகின்றது.
தன்னுடைய திறமைக்கு முன்னாடி அழகு எல்லாம் ஒன்றுமே இல்லை என்று நிஷா அவரை கலாய்த்து வந்த நெட்டிசன்களுக்கு பதிலடி கொடுத்து விட்டார்.

மாஸ் கெட்டப் சேஞ்ச் தான்
சின்னத்திரையின் கோவை சரளா என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் அறந்தாங்கி நிஷா, இதுவரைக்கும் இல்லாத வகையில் மாடர்ன் உடையில் மாஸாக ஒரு போட்டோ சூட்டை எடுத்திருக்கிறார். இதைப்பார்த்து பலபேர் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள். ஒரு சிலருக்கு இது யார் என்று தெரியவில்லையாம். அந்த அளவிற்கு கெட்டப் சேஞ்ச் செய்திருக்கிறார். இதுவரைக்கும் இவரை புடவையில் பார்த்துவந்த ரசிகர்களால் இவருடைய இந்த மாதிரி புது அவதாரத்தை பார்த்ததும் கண்டுபிடிக்க முடியவில்லை. அது மட்டுமல்லாமல் முகத்தில் கொஞ்சம் கூடுதல் கவனத்தை செலுத்தி அங்கு ஒரு பல அடுக்கு மேக்கப்களை அள்ளித் பூசியிருக்கிறார். திடீரென்று இவரை இந்த மாதிரி பார்த்ததும் பலர் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள். ஒரு சிலர் என்ன? இப்படி ஆகிவிட்டார் என்று உறைந்தே போய் விட்டனர்.

இந்த எக்ஸ்ட்ரா அழகும் நல்லா இருக்கு
விஜய் டிவியில் அறிமுகமான பல கன்டஸ்டன்ட்கள் தங்களது திறமையால் முன்னேறி சென்று கொண்டிருக்கின்றனர். அதில் அறந்தாங்கி நிஷாவும் ஒருவர். இவர் முதன்முதலில் விஜய் டிவியில் காலடி எடுத்து வைக்கும் போது தனது பட்டிமன்ற பேச்சு திறமையினாலும், சரளமாக வரும் காமெடியிலும் அனைவரையும் அசர வைத்துக் கொண்டிருந்தவர். தற்போது நடனத்திலும் நான் சளைத்தவரல்ல என்று கலக்கி வருகிறார். திறமையை நிரூபிக்க அழகும், வயதும் தடையே இல்லை என்பதை இப்போது இவர் நிரூபித்துக் கொண்டிருக்கிறார். திருமணம் முடிந்து இரண்டு குழந்தைகளுக்கு தாயான பிறகு இவர் பிக்பாஸ் டான்ஸ் நிகழ்ச்சியில் இளம் கண்டஸ்டன்களுக்கு டப் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

கலர் கூடிப்போச்சு
ஒவ்வொரு சுற்றிலும் இவர் தன்னுடைய திறமையை நிரூபித்து கொண்டிருந்தாலும் இவரைப்பற்றி பலர் நெகட்டிவ் கமெண்ட்களையும் போட்டு வருகின்றனர். ஆனால் அதையெல்லாம் இவர் எப்போதுமே கண்டுகொள்வதில்லை. தனக்கு ஆதரவு கொடுக்கும் ரசிகர்களுக்கு மட்டுமே பதில் அளித்துக் கொண்டு இருக்கும் இவருக்கு தற்போது சமூக வலைத்தளத்திலும் அதிகமான ரசிகர்கள் உருவாகி வருகின்றனர். ரசிகர்கள் மட்டுமல்லாமல் இங்கேயும் நெட்டிசன்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் அவர் தான் யாரையும் கண்டுகொள்வதே இல்லயே அதனால் நெட்டிசன்களின் கமெண்ட்டுகள் எல்லாம் தண்ணீரில் எழுதிய எழுத்துக்களை போலத்தான் இருந்துகொண்டிருக்கிறது.

பங்கம் செய்யும் நெட்டிசன்கள்
விஜய் டிவி இவருக்கு பெரும் வாழ்வு கொடுத்தது போல விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி இவருக்கு ஒரு பெரிய பின்னடைவையும் கொடுத்துவிட்டது. அதுவரைக்கும் இவருக்கு ரசிகர்களிடம் நல்ல பெயர் இருந்தாலும் இவர் இந்த நிகழ்ச்சியில் அர்ச்சனா கேங்க் உடன் சேர்ந்திருந்ததால் அர்ச்சனாவை பிடிக்காத ரசிகர்கள் கூட நிஷாவையும் திட்ட ஆரம்பித்துவிட்டார்கள். இந்த நிகழ்ச்சியில் இவர் இவருடைய கேரக்டரில் விளையாடவில்லை என்பது தான் பலருடைய பெரும் குறையாக பேசப்பட்டு வந்தது. ஆனால் நான் என்னுடைய சொந்தமான கேரக்டரில் தான் இருந்தேன் என்று ஆணித்தரமாக கூறிக்கொண்டிருக்கும் நிஷா வெளியே வந்த பிறகும் அதே போலத்தான் இருந்து கொண்டிருக்கிறார். அந்த வீட்டிற்குள் இவர் எவ்வளவு அன்பாக அனைவரிடமும் இருந்தாரோ, அதேபோல் அந்த நிகழ்ச்சி முடிந்த பிறகும் அந்த நிகழ்ச்சியில் இருந்த கன்டஸ்டன்ட் களுடன் அன்பாகத்தான் இருந்து வருகிறார்.

கண்களில் தெரியுது பாசம்
நடிகைகள் பலரும் தற்போது போட்டோசூட் மோகத்தில் இருப்பதுபோல நிஷாவும் கலக்கலாக போட்டோஷூட்டில் கலக்கி வருகிறார். ஃப்ரீயாக இருக்கும் நேரங்களில் எல்லாம் மாடலிங்கில் களமிறங்கியிருக்கும் இவர் விதவிதமான போட்டோக்களை எடுத்துத் தள்ளுகிறார். அந்த மாதிரி தான் தற்போது மாடர்ன் உடையில் செம மேக்கப்பில் இவர் கொடுத்த மாஸ் பெர்பாமன்ஸ் பார்த்ததும் ரசிகர்கள் வாயடைத்துப் போய்விட்டார்கள். அதுவும் அவருடைய மகளுடன் இவர் கொஞ்சி விளையாடிய வீடியோவை பார்த்து வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. ரசிகர்கள் மட்டுமல்லாமல் இவருடைய அன்பு டீமும் வாழ்த்துக்களை பொழிகிறது. அர்ச்சனா, சோமு, சமியுத்தா, கேப்ரில்லா என ஒவ்வொருவராக இவருடைய போஸ்டுக்கு கமெண்டுகளை போட்டு வருகின்றனர். இதைப் பார்த்தால் நெட்டிசன்கள் சும்மா இருப்பார்களா? அவர்களும் தங்கள் பங்குக்கு கமெண்ட்டுகளை பறக்க விடுகிறார்கள்.
-
சிறகடிக்க ஆசை: சிந்தாமணி சதி! உண்மைகளை உளறிய மனோஜ், ஜெயிலுக்கு போகும் விஜயா! மீனா செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: கொடூரத்தின் உச்சத்துக்கு சென்ற விஜயா.. மயங்கி விழுந்த ரோகிணி! முத்து வீட்டுக்கு வந்த நபர் -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா?












Click it and Unblock the Notifications