அதெப்படிப்பா! எனக்கே தெரியாம இப்படி நடக்கும்? பொய் சொன்னாலும் பொருந்த சொல்லுங்க.. அறந்தாங்கி நிஷா
சென்னை: சென்னையில் அறந்தாங்கி நிஷா புதிய பங்களா டைப்பில் ஒரு வீட்டை வாங்கிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு நிஷா அளித்த பதில் என்ன தெரியுமா?
சின்னத்திரை நயன்தாரா என தன்னைபாசிட்டிவ்வாகவே கூறிக் கொள்பவர் அறந்தாங்கி நிஷா. இவர் கலக்க போவது யாரு நிகழ்ச்சியில் ஸ்டான்ட் அப் காமெடி செய்து பிரபலமானார்.
இவர் பழனியுடன் சேர்ந்து செய்த காமெடி நிகழ்ச்சிகள் ஹிட் அடித்தன. இவர் கருப்பாக இருந்தாலும் தனது பாசிட்டிவ் ஆட்டிட்யூட்டால் ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்திருககிறார்.

விஜய் டிவி
இவர் விஜய் டிவியில் தற்போது நிறைய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். சில நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்கிறார். இதனால் அவ்வப்போது ஷூட்டிங் நடக்கிறது. இதனால் ஒவ்வொரு முறையும் அறந்தாங்கியிலிருந்து வந்து போக கடினமாக இருக்கும் என்பதால் இவர் சென்னையில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்தார்.

கருப்பு ரோஜா யூடியூப் சேனல்
இதை அவருடைய கருப்பு ரோஜா யூடியூப் சேனலில் தெரிவித்திருந்தார். மேலும் வீட்டையும் ரசிகர்களுக்கு சேனல் வழியாக சுற்றிக் காட்டினார். மேலும் இது வாடகை வீடு என்பதையும் தெரிவித்துவிட்டார். சென்னையில் ஷூட்டிங் இருக்கும் போது இங்கு வந்து தங்கி கொள்வேன் என்றும் மற்ற நாட்களில் அறந்தாங்கியில் தான் இருப்பேன் என்றும் தெரிவித்திருந்தார்.

புதிய வீடு
இந்த நிலையில் இந்த விஷயத்தை தவறாக புரிந்து கொண்ட சில செய்தி நிறுவனங்கள் சென்னையில் அறந்தாங்கி நிஷா புதிய வீட்டை வாங்கி விட்டார் என்றே செய்தி போட்டன. அதிலும் அவர் பங்களா டைப் வீட்டை வாங்கிவிட்டதாக ஒரு சூப்பர் பங்களா புகைப்படத்தை போட்டனர். இது வைரலான நிலையில் இதை கண்டு நிஷாவே ஷாக்கானார்.

எனக்கே தெரியாமல் பங்களாவா
இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாவில் கூறுகையில் அது எப்படிப்பா எனக்கே தெரியாம நான் பங்களா கட்டுவேன், பொய் சொன்னாலும் கொஞ்சம் பொருந்த சொல்லுங்கப்பா, இத பாத்துட்டு நிறைய பேரு எனக்கு வாழ்த்து சொன்னீங்க, நிறைய பேரு என்ன கிண்டல் பண்ணீங்க, இது வதந்தி தான், ஆனா முயற்சி செஞ்சா முடியாதது எதுவுமே இல்ல சீக்கிரமா இப்படி ஒரு பங்களா கட்டுவோம்.. சத்தியமா சொல்றேன் இது என் வீடு இல்லங்கோ.. என நிஷா தெரிவித்துள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications