நான் ரத்த வெள்ளத்தில்.. அந்த 4 பசங்க செய்தது.. தாய்ப்பால் கொடுக்கும் போது.. அறந்தாங்கி நிஷா எமோஷனல்
சென்னை: விஜய் டிவி நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலம் அடைந்த அறந்தாங்கி நிஷா சமீபத்தில் ஒரு பேட்டி ஒன்றில் தன்னுடைய வாழ்க்கையில் மறக்க முடியாத நிகழ்வுகள் குறித்து பேசி இருக்கிறார். அதில் தனக்கு விபத்து ஏற்பட்ட சமயத்தில் தனக்கு உதவி செய்த நான்கு ஆண்கள் பற்றி கண்கலங்க அறந்தாங்கி நிஷா பேசியிருக்கிறார்.
அந்த வகையில் அறந்தாங்கி நிஷா சென்னையில் சமீபத்தில் ஏற்பட்ட மிக்ஜாம் புயலால் மக்கள் கஷ்டத்தில் இருந்தபோது அறந்தாங்கி நிஷா தன்னால் முடிந்த அளவிற்கு பல உதவிகளை செய்திருந்தார். புயல் பாதிப்பு ஏற்பட்ட இடங்களுக்கு தானே நேரில் சென்று அங்கு உணவு பொருள்கள் மற்றும் அடிப்படை பொருள்களை வாங்கி கொடுத்த அறந்தாங்கி நிஷா, தூத்துக்குடி புயல் பாதிப்பின் போதும் அங்கேயும் பலருக்கும் உதவி இருந்தார்.

இப்படி பலருக்கு உதவி செய்து கொண்டிருக்கும் அறந்தாங்கி நிஷா சமீபத்தில் ஒரு பெரிய விபத்தில் குடும்பத்தோடு உயிர் பிழைத்ததே அதிசயம் தான். இந்த நிலையில் அந்த நேரத்தில் என்ன நடந்தது என்பதை பற்றி ஒரு பேட்டியில் எமோஷனலாக பேசியிருக்கிறார். அதில் அறந்தாங்கி நிஷா கூறுகையில் என்னுடைய வாழ்க்கையில் மறக்க முடியாத நிகழ்வு என்றால் எனக்கு நடந்த ஆக்சிடெண்ட் தான். அந்த ஆக்சிடெண்டில் என்னுடைய முதுகு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டிருந்தது.
ஆனால் என்னுடைய மகள் கைக்குழந்தையாக இருக்கும் போது அந்த விபத்து ஏற்பட்டது. குழந்தை இருக்கிறதா இல்லையா என்று எனக்கு தெரிவதற்கே எனக்கு 15 நிமிடங்களுக்கு மேலே ஆகிவிட்டது. அது ஒரு பைபாஸ் ரோடு அந்த இடத்தில் ஆக்சிடெண்ட் நடந்தது ஆனால் அங்கிருந்த யாருமே எங்களுக்கு வந்து உதவி செய்யவில்லை. அங்கு பஸ் கார் எல்லாமே டிராபிக் ஜாமாகி அப்படியே நின்று கொண்டிருக்கிறது.
எல்லாரும் எங்களை போட்டோ வீடியோ எடுத்துக் கொண்டு இருந்தார்களே தவிர யாரும் எங்களுக்கு உதவி செய்யவில்லை. அந்த நேரத்தில் நான்கு பசங்க ஒரு காரில் வந்திருந்தாங்க. அது புது கார் அவங்க நம்பர் பிளேட் வாங்குவதற்காக காரை கொண்டு போய்க் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் தான் எங்களின் உயிரை காப்பாற்றியவர்கள். என்னை தூக்கி விட்டார்கள்.
என்னுடைய பிள்ளையை காணவில்லை என்று நான் சொல்லிக் கொண்டிருந்தபோது காருக்குள் ஒரு பையன் தலைகீழாக போய் என் பாப்பாவை மேலே தூக்கினான். பாப்பாவின் முகமே தெரியவில்லை முகம் எல்லாம் ரத்தம் தான் வழிந்து கொண்டிருந்தது. அந்த நேரத்தில் எனக்கு என்ன செய்ய வேண்டும் என்று கூட தெரியவில்லை. பிள்ளை ரொம்ப அழுது கொண்டிருக்கிறதே என்று அவ்வளவு பேரும் முன்னாடி நான் டக்கென்று துணியை விலக்கி தாய்ப்பால் கொடுத்தேன்.
எனக்கு எல்லோரும் இருக்கிறார்கள் என்ற ஒரு சிந்தனை கூட வரவில்லை. அப்போது அங்கிருந்த ஒரு பையன் டக்கென்று ஒரு துண்டை எடுத்து என் மேலே போட்டான். ஒரு பெத்த அம்மா மாதிரி எனக்கு அவங்க தெரிஞ்சவங்க. கூடப்பிறந்த அண்ணன் தம்பிங்க எப்படி பாசமா இருப்பாங்களோ அந்த மாதிரி அந்த நாலு பேரும் எங்களை மருத்துவமனையில் கொண்டு சேர்க்கிற வரைக்கும் பதறி போய் இருந்தாங்க. ஆனா அதற்கு பிறகு அவங்க எங்க போனாங்கன்னு எங்களுக்கு தெரியல.
ஆனாலும் நான் என்னுடைய குழந்தைக்கு மொட்டை போடும்போது அந்த நாலு பேரு மடியில் வைத்து தான் மொட்டை போடணும்னு நினைச்சுட்டு இருக்கேன். பாப்பாவுக்கு ஆக்சிடென்ட்ல காது கட்டாகி இருந்தது அதனால் இப்போதைக்கு அவளுக்கு காது குத்த முடியாது. இன்னும் கொஞ்சம் வயசு வந்த பிறகு அவளுக்கு அதில் ஸ்கேன் எல்லாம் பார்த்து தான் காது குத்த வேண்டும்.
அப்படி காது குத்தும்போது அந்த நான்கு பேர் எங்க இருந்தாலும் நான் அவர்களை கண்டுபிடித்து கூட்டிக்கொண்டு வந்து விடுவேன். என் பிள்ளைகளுக்கு அவங்க தான் தாய் மாமா என்று கண் கலங்க அந்த பேட்டியில் அறந்தாங்கி நிஷா பேசியிருந்தார். அதோடு எனக்கு ஆக்சிடென்ட் ஆகிவிட்டது என்பது தெரிந்ததும் விஜய் டிவியில் மிஸ்டர் அண்ட் மிஸஸ் நிகழ்ச்சியில் இருந்த பிரபலங்கள் எல்லோரும் அங்கே வந்து விட்டார்கள்.
ப்ரொடியூசர் முதல் போட்டியாளர்கள் வரை எல்லோருமே ஹாஸ்பிடலில் தான் இருந்தார்கள். அதையும் என்னால் மறக்க முடியாது. அதுபோல அன்று நள்ளிரவு நேரத்தில் சூட்டிங் முடிந்ததும் கோபிநாத் அண்ணனும் ஹாஸ்பிடலுக்கு வந்து விட்டார். இரவு நேரம் என்பதால் கோபிநாத் அண்ணனை உள்ளே விடமாட்டேன் என்று சொல்லிவிட்டார்களாம்.
ஆனாலும் கோபிநாத் அண்ணன் யார் யாரிடமோ பேசி உள்ளே வந்து விட்டார். வந்ததும் பிள்ளையை போய் பார்த்துவிட்டு என்னிடம் வந்து நீ இப்படி அழுது கொண்டு இருக்காதே பிள்ளைக்கு ஒண்ணுமே இல்லை. அவள் நல்லா இருக்கிறா.. நீ அழுது அம்மாவ பயங்காட்டாத என்று என்னை திட்டி விட்டுப் போனார் என்று அறந்தாங்கி நிஷா கண் கலங்கி பேசியிருக்கிறார்.
-
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா












Click it and Unblock the Notifications