தூத்துக்குடியில் ஓடி ஓடி உதவி செய்த அறந்தாங்கி நிஷா.. பெண்கள் கேட்ட கண்கலங்க வைத்த கேள்வி.. உருக்கமான பதிவு
சென்னை: விஜய் டிவி நிகழ்ச்சிகளில் பிரபலமான நடிகை அறந்தாங்கி நிஷா தூத்துக்குடியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு பொருட்கள் மற்றும் அடிப்படை பொருள்களை கொடுத்து உதவி செய்திருக்கிறார்.
ஏற்கனவே சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதல் ஆளாக அறந்தாங்கி நிஷா ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு உணவு மற்றும் அடிப்படை உணவுப் பொருள்கள் வாங்கிக் கொடுத்திருந்தார்.
இந்த நிலையில் இப்போது தூத்துக்குடியில் உணவு பொருள்கள் வழங்கிக் கொண்டிருக்கும்போது அங்கிருந்த மக்கள் அறந்தாங்கி நிஷாவிடம் நடந்து கொண்டவிதம் குறித்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமாக பதிவு வெளியிட்டிருக்கிறார்.

தென் மாவட்டங்களில் கடந்த வாரம் பெய்த கனமழையின் காரணமாக பல மக்கள் பாதிக்கப்பட்டு அடிப்படை வசதிகள் இன்றி தவித்து வருகின்றனர். அவர்களுக்கு அறந்தாங்கி நிஷா தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார். குறிப்பாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கடந்த வாரத்தில் கனமழை பெய்து வந்தது.
கடந்த 16ஆம் தேதி துவங்கிய மழை தொடர்ந்து பெய்து வந்ததால் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு இருக்கிறது. இதுவரைக்கும் கனமழை அல்லது புயல் எச்சரிக்கை வந்தால் சென்னையில் உள்ள மக்கள்தான் அதிகமாக பாதிக்கப்படுவார்கள். ஆனால் முதல் முறையாக தென் மாவட்டங்களில் மழையின் தாக்கத்தால் பல ஊர்கள் ஸ்தம்பித்துப் போயிருந்தது.
சென்னையை விட பல மடங்கு வந்த மழையால் பலர் பரிதாபமாக இறந்து போயிருக்கின்றனர். பல மக்கள் வீடு வாசல்கள் ஆடு மாடு போன்ற கால்நடைகளையும் இழந்து கண்ணீரோடு தவித்து வருகின்றனர். இத்தனை நாட்களாக தங்களுடைய உழைப்பில் கஷ்டப்பட்டு வாங்கி வைத்த பொருள்கள் எல்லாமே இந்த மழையால் கண் முன்பு அழிந்து போனதை பார்த்து பல மக்கள் இன்னும் அந்த அதிர்ச்சியில் இருந்து வெளியே வராமல் இருக்கின்றனர்.

அதுபோல இன்னும் ஒரு சில கிராமங்களில் மக்களுக்கு குடிக்க தண்ணீர், உணவு பொருள்கள் இல்லாமல் தவித்து வருகின்றனர். இந்த நிலையில் நடிகை அறந்தாங்கி நிஷா ஏற்கனவே சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு மற்றும் அடிப்படை பொருட்கள் வழங்கி கொடுத்தது போல இப்போது தென் மாவட்டங்களுக்கும் உடனே சென்று தன்னால் முடிந்த அளவிற்கு உதவியை செய்து இருக்கிறார்.

அங்குள்ள மக்களுக்கு தண்ணீர் பாட்டில், உணவு, பெண்களுக்கு நாப்கின் போன்றவற்றை வாங்கிக் கொடுத்திருக்கிறார். அப்போது அங்கு இருந்த பெண்கள் பலர் கண்ணீரோடு நாங்கள் ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்த அரசியல்வாதிகள் கூட நாங்கள் இருக்கிறோமா இல்லையா என்று பார்க்க வரவில்லை. ஆனால் நீங்க வந்து இருக்கீங்க என்று பேசி இருக்கின்றனர்.

அதோடு தங்கள் வீட்டின் நிலவரத்தை அறந்தாங்கி நிஷாவை கூட்டிக்கொண்டு சென்று பலர் காட்டி இருக்கின்றனர். அதைப் பார்த்து கண்ணீரோடு அறந்தாங்கி நிஷா தன்னால் முடிந்த உதவிகளை நான் செய்கிறேன் என்று அங்கு வாக்கு கொடுத்து இருக்கிறார். அதோடு தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவையும் வெளியிட்டு இருக்கிறார்.
அதில் ஈரத்தையும் வீரத்தையும் அள்ளி கொடுக்கும் தென் மாவட்ட பகுதி.... இன்று அவர்களுடைய துன்பத்தில் தோள் கொடுக்கும் பொறுப்பு நமக்கு இருக்கிறது. இந்த நிலைமை நீங்கி மறுபடியும் அவர்கள் மீண்டு வர நாம் அனைவரும் தோள் கொடுப்போம்... என்று கூறி இருக்கிறார். அறந்தாங்கி நிஷாவின் இந்த மிகப்பெரிய செயலுக்கு மக்களும் ரசிகர்களும் மனதார தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
https://www.instagram.com/reel/C1Kc8efxe5k/சென்னையில் மழை வெள்ளம் வந்தபோது பாதிக்கப்பட்ட மக்களுக்காக பல போராட்டங்களுக்குப் பிறகு அறந்தாங்கி நிஷா சென்றிருந்த நேரத்தில் அவருடைய மகள் உடல்நிலை சரியில்லாமல் ஐசியுவில் இருந்தார். ஆனாலும் அதை பொருட்படுத்தாமல் மக்களுக்காக அறந்தாங்கி நிஷா பல நாட்கள் உதவி செய்திருந்தார். இப்போது தூத்துக்குடி பகுதியிலும் தொடர்ச்சியாக அறந்தாங்கி நிஷா உதவி செய்து வரும் நிலையில் அறந்தாங்கி நிஷாவிற்கு பலர் வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications