அர்ச்சனா மடியில் பாலாஜி.. கதறி அழுத சம்யுக்தா.. குழப்பத்தில் கேப்ரில்லா!
சென்னை: இந்த பிக்பாஸ் நாலாவது சீசன் அறிமுகமான நாளிலிருந்து அந்த வீட்டிற்குள் வந்த பாலாஜியை அனைவரும் இவர் ரொம்ப ஆட்டிட்யூட் காட்டுகிறார். சைக்கோ போல நடந்து கொண்டிருக்கிறார் என்று கூறிக் கொண்டிருந்தனர்.
ஆனால் தற்போது அங்கிருக்கும் கன்டஸ்டன்ட் அனைவரும் இவர் மீது பாசமழை பொழிந்து கொண்டிருக்கிறார்கள். அதுவும் நண்பனாகவும் மகனாகவும் மாறிமாறி தத்தெடுத்துக் கொண்டு இருக்கிறார்கள்.
ஆனால் அதையெல்லாம் கொஞ்சமும் பொருட்படுத்தாமல் பாலாஜி அசால்டாக நானெல்லாம் உங்களை அப்படி நினைக்கவில்லை என்று கூறிக் கொண்டு இருக்கிறார்.

ரமேஷுடன் பழக்கம்
இந்த வீட்டிற்குள் முதலில் இவர் யாரிடமும் பட்டும் படாமல் தான் இருந்து கொண்டிருந்தார். முதலில் ஜித்தன் ரமேஷ் உடன் மட்டும் நன்றாகப் பழகிக் கொண்டு இருந்தார் .அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக அனைவரிடமும் மிங்கிளாக ஆரம்பித்தார். ஆனால் இவர் ஒவ்வொரு சூழ்நிலையிலும் தனது கருத்திலிருந்து எப்போதுமே பின்வாங்காமல் உறுதியாக இருந்தார்.

கலாய்த்து வந்தனர்
முதலில் இவரது கேரக்டர் யாருக்கும் பிடிக்காமல் பலர் இவரை கலாய்த்து வந்தனர். அதிலும் இந்த வீட்டிற்குள் அர்ச்சனா என்ட்ரி ஆன அன்றிலிருந்து இவருக்கும் அர்ச்சனாவுக்கும் தான் முட்டிக்கொண்டு இருந்தது. நேற்றைய எபிசோடில் கூட முதலில் இவர்கள் இருவரும் காரசாரமாக வாக்குவாதம் ஏற்பட்டு அது அர்ச்சனாவுக்கு சப்போர்ட்டாக ரியோவும் தொங்கிக் கொண்டிருந்தார்.

சத்தியம் செய்த அர்ச்சனா
ஆனால் அதன்பிறகு இவர் தனியாக உட்கார்ந்து அழுது அழுவதை பார்த்ததும் ரசிகர்கள் கூட மனது உருக்கி விட்டதாம். அப்போதான் ஆரி வந்து அர்ச்சனாவிடம் பேசுமாறு மீண்டும் கூறியிருக்கிறார். மிரட்டிக் கொண்டிருந்த அர்ச்சனா திடீரென்று இவர் மீது பாச மழையை பொழிய ஆரம்பித்தார். தன் 12 வயது குழந்தை மீது சத்தியமாக சொல்கிறேன் உன் மீது எனக்கு எந்த வெறுப்பும் இல்லை பாசம் தான் இருக்கிறது .

சமாதானப்படுத்திய பாலாஜி
அந்த பாசத்தை தான் உன்னிடம் திருப்பி நானும் எதிர்பார்க்கிறேன். எனக்கு ஆண் குழந்தை இல்லை அதை உன்னிடம் எதிர் பார்க்கிறேன். நீ என் குழந்தையாக வேண்டும் என்று அழுது தீர்த்து விட்டார். இதை சற்றும் எதிர்பார்க்காத கண்டர்ஸ்டாண்ட் வாயடைத்து போய் தான் இருந்தனர். பாலாஜியும் ஒரு நிமிடம் அப்படியே ஷாக்காகி தன்னுடைய தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டார் .

அம்மாவாக மாறிய அர்ச்சனா
அதன் பிறகு அங்கு ஒரு பெரிய போராட்டங்கள் நடந்தது. உண்மையான அம்மா மகன் ஆகவே இருவரும் மாறி விட்டார்கள் போல. பாலாஜி மடியில் படுத்துக் கொண்டு இருக்க அர்ச்சனா தலை கோதி விட ஒரே ரவுசு தான். அதனைத் தொடர்ந்து கொஞ்ச நேரத்திலே சம்யுக்தாவும் எப்பவோ நடந்த விஷயத்திருக்கு இப்ப பீல் பண்ணி அழுது ஆர்ப்பாட்டம் பண்ணி கொண்டிருந்தார் .அதற்கும் பாலாஜிதான் காரணமாம்.

அடம் பிடித்த சம்யுக்தா
அது மட்டுமல்லாமல் அவரும் நீ எனக்கு நண்பனாக வேண்டும் என்று ஒரு பக்கம் பாசமழை பொழிந்து இருக்கிறார். அதற்கு பாலாஜி என் மனதில் அப்படியெல்லாம் ஒன்றுமில்லை நான் அப்படி இருக்க மாட்டேன் என்று அடாவடியாக பதிலை சொல்லிவிட்டு சென்றுவிட்டார். இவர்கள் தான் இப்படி பண்ணி இருந்தார்கள் என்று பார்த்தால் முதன் முதலில் தொடங்கிய கேப்ரில்லா என்னை பிரண்டாக ஏற்றுக்கொள்வாரா என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கிறார்.

ஒரே அழுகாச்சி காவியம்
இந்த கலவரத்தில் இன்றைய ப்ரோமோ வில் மொட்ட சுரேஷ் பாலாஜி பார்க்கும்போது என் மகன் ஞாபகம் எனக்கு வருகிறது என்று அவரும் பீல் பண்ணி கண்ணீர் வடிக்கிறார். இதனை பார்த்ததும் ரசிகர்கள் பெருமூச்சு விட்டு கலாய்த்து வருகிறார்கள். ஒருத்தர் மேல வெறுப்பு காட்டினால் அவ்வளவு பேரும் சேர்ந்து வருவீங்க. அதுவே பாசம் காட்ட ஆரம்பித்தது என்றால் எல்லாரும் சொல்லிவச்ச மாதிரி இப்படி கும்மி அடிக்கிறீர்களே என்று கலாய்த்து வருகிறார்கள்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications