அர்ச்சனாவின்.. வெறித்தனம் வெறித்தனம்.. என்னா ஆட்டம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சி எத்தனை சீசன் வந்தாலும் எல்லாமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வரும் நிலையில் இந்த சீசனில் வீட்டிற்குள் இருந்து வெளியே வந்த அர்ச்சனா வெறித்தனமான ஆட்டம் போட்டு தன் மகளோடு கொஞ்சி விளையாடிய வீடியோக்கள் தான் தற்போது வைரலாக பரவி வருகிறது.

இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு சீசனுக்கும் பல்வேறு நடிகர் நடிகைகளும் பிரபலங்களும் கலந்து கொண்டு சிலர் புகழின் உச்சிக்குச் சென்றதும் உண்டு சிலர் தரைமட்டத்திற்கு வந்ததும் உண்டு.

அந்த மாதிரி புகழின் உச்சத்தில் இருந்த விஜே அர்ச்சனா இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு பல்வேறு நெட்டிசன்களால் தினமும் வகையாகக் கலாய்க்கப்பட்டு வந்தார்.

வெளியேறிய அர்ச்சனா

வெளியேறிய அர்ச்சனா

ஒவ்வொரு வாரமும் இந்த வாரம் வெளிய வந்தா நல்லா இருக்கும் என்று நெட்டிசன்கள் கலாய்த்து வந்தனர். ஆனால் அர்ச்சனாவின் வெளியேற்றம் பலரையும் சோகத்தில் மூழ்கடித்துதள்ளது என்பது என்னவோ உண்மைதான். இந்த வீட்டை விட்டு வெளியே வந்த பின்னர் இவருக்கு பெரும் வரவேற்பு வழங்கி அவரது குடும்பம் அவருக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் குமாரு

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் குமாரு

அதுவும் இந்த வீட்டை விட்டு இவர் வெளியில் வந்த பிறகும் நெட்டிசன்கள் இவரை விட மாட்டேன் என்கிறார்கள். இதற்குத்தானே ஆசைப்பட்டாய் குமார் என்று இவர் தற்போது இன்ஸ்டாகிராமில் போட்ட போஸ்டுக்கு கமெண்டுகளை போட்டு வருகிறார்கள் .

மகளின் வரவேற்பு

மகளின் வரவேற்பு

அர்ச்சனாவின் மகள் அம்மா இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்ததும் மாலை போட்டு அவருக்கு வெகுவாக வரவேற்பு ஏற்பாடு பண்ணி கொடுத்திருந்தார். அதில் ரொம்ப நாளைக்கு அப்புறம் தனது பாசமான மகளைப் பார்த்ததும் கட்டிபிடித்துகொன்டு ஆடிய வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கிறார்.

மாறிப் போன அர்ச்சனா

மாறிப் போன அர்ச்சனா

இந்த வீட்டிற்குள் அர்ச்சனா அவராக இல்லை என்பதுதான் பல்வேறு ரசிகர்களின் கருத்தாக இருந்து வந்தது. இவர் இதற்கு முன்பு தொகுப்பாளராக இருக்கும் போது தொகுப்பாளர்களில் குறிப்பிடத்தக்கவர் என்று சொன்னதும் டக்கென்று ஞாபகத்தில் வருவது அர்ச்சனா தான். அந்த அளவிற்கு பெரும் ரசிகர்கள் பட்டாளத்தை பெற்றிருந்தார்.

இப்படி மாறிட்டாரே

இப்படி மாறிட்டாரே

ஆனால் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு அவருடைய ரசிகர்கள் கூட முகம் சுழிக்கும் அளவிற்கு இவரது கேரக்டர் மாறிவிட்டது என்று கூறி வருகிறார்கள் .அந்த வீட்டிற்குள் இவர் அடிக்கடி அன்பு குருபீஸம் பண்ணுவதை வைத்துதான் அந்த வீட்டைவிட்டு இவர் வந்தபிறகும் ரசிகர்கள் அவரை கலாய்த்து வருகிறார்கள். ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சியே ஒரு செட்டப்தான் என்பது பலரின் கருத்தாக உள்ளது.

தாக்குப் பிடிக்கலையே

தாக்குப் பிடிக்கலையே

தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இந்த அன்பு குரூப்பில் ஒவ்வொருத்தராக வெளியேறி விட்டாலும் அர்ச்சனா கொஞ்ச நாளைக்கு தாக்குப் பிடிப்பார் என்று அவருடைய ரசிகர்கள் எதிர்பார்த்து வந்தனர் .ஆனால் கடைசி நிலையில் இவர் வெளியேறியதும் அவருடைய ரசிகர்கள் அதிர்ச்சியில் தான் இருக்கிறார்கள்.

குடும்பத்துடன் இணைந்தது சந்தோஷமே

குடும்பத்துடன் இணைந்தது சந்தோஷமே

இருந்தாலும் வெளியே வந்து அவரது குடும்பத்தோடு இவர் சந்தோஷமாக இருப்பதை பார்க்கும் போது பேசாமல் வெளியிலே இருப்பதே நல்லது அந்த வீட்டிற்குள் சென்று அழுது கிட்டு இருப்பதற்கு அதுக்கு இது எவ்வளவோ பெட்டர் என்று அவருக்கு ஆறுதல் கூறி வருகிறார்கள்.

மகளின் கஷ்டம்

மகளின் கஷ்டம்

அதுமட்டுமல்லாமல் இந்த வீட்டில் இவ்வாறு இருக்கும்போது அவரது பிரிவின் கஷ்டத்தை அவரது மகள் ஸாரா அப்படியே ஒரு லெட்டர் எழுதி அதை பிரேம் போட்டு அர்ச்சனாவிற்கு கொடுத்திருக்கிறார் .இந்த போட்டோவை பார்த்ததும் கண்கலங்கி அர்ச்சனா வீடியோவையும் போட்டிருக்கிறார். அதுவும் தற்போது வைரலாக பரவி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+