Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பிக் பாஸ் வெற்றி கொண்டாட்டத்தில் புறக்கணிக்கப்பட்ட அர்ச்சனா!? காரணம் அந்த புகார் தானா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி கடந்த வாரத்தில் முடிவடைந்து இருந்த நிலையில் அந்த சீசனில் வின்னரான அர்ச்சனா பிக் பாஸ் நிகழ்ச்சியின் முடிவை தொடர்ந்து நடைபெற்ற வெற்றி கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.

அதோடு அர்ச்சனா பிக் பாஸ் வெற்றி கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளாததற்கு கடைசி நேரத்தில் பிக் பாஸ் ரசிகர்கள் செய்த பிரச்சனை தான் காரணம் என்று கூறப்படுகிறது. அது பற்றி விரிவாக பார்க்கலாம்.

அந்த வகையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இரண்டாம் தேதி முதல் தொடங்கிய பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி கடந்த வாரம் அதாவது ஜனவரி 14-ம் தேதி ஞாயிற்றுக்கிழமையோடு முடிவடைந்தது. இந்த நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராக அர்ச்சனா தேர்வாகி இருந்தார். இவர் வைல்ட் கார்ட் மூலமாக இந்த நிகழ்ச்சியில் ஒரு மாதங்களுக்கு பிறகு கலந்து கொண்டு இருந்த நிலையில் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார்.

 Archana ignored in bigg boss tamil season 7 victory celebration?

இரண்டாவது இடத்தில் மணிச்சந்திராவும் மூன்றாவது இடத்தில் மாயாவிற்கும் கிடைத்தது. ஆனால் அர்ச்சனா நிகழ்ச்சி தொடங்கி ஒரு மாதத்திற்கு பிறகு இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு டைட்டில் வாங்கியதை ரசிகர்கள் ஒரு சிலர் ஏற்றுக்கொள்ளாமல் அவருக்கு எதிராக சமூக வலைத்தளத்தில் இப்பவும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதோடு ஒரு மாதம் கழித்து பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு போன அர்ச்சனா பெரிய அளவில் உள்ளே என்ன கண்டெண்டும் தரவில்லை.

வெளியே தன்னை பற்றி புரொமோட் செய்வதற்காக ஆட்களை செட் பண்ணி வைத்துவிட்டு தான் பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் விளையாடி இருந்தார். வெளியே பி ஆர் வேலை செய்ததால் அர்ச்சனா வெற்றி பெற்றார் என்றும் உள்ளே அர்ச்சனாவிற்கு முதல் வாரத்திலேயே கலந்து கொள்வதற்கு வாய்ப்பு கிடைத்த பிறகும் அவர் அதில் கலந்து கொள்ளாமல் யார் யார் எப்படி விளையாடுகிறார்கள் என்பதை எல்லாம் பார்த்துவிட்டு ஒரு மாதம் கழித்து அர்ச்சனா நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் என்றெல்லாம் அவர் மீது ரசிகர்கள் குற்றச்சாட்டு வைத்துக் கொண்டு இருந்தனர்.

அதோடு பிக் பாஸ் பைனல் நடைபெற்ற அன்று அதாவது ரிசல்ட் அறிவித்த சில நிமிடங்களில் பிக் பாஸ் செட்டுக்குள் இருந்த ஒரு சில பார்வையாளர்கள் அர்ச்சனாவுக்கு டைட்டில் கொடுத்தது கண்டித்து கோஷம் எழுப்பி இருக்கிறார்கள். அதோடு அங்கிருந்த பலர் மாயாவுக்கு ஆதரவாகவும் குரல் கொடுத்தார்களாம்.

அதைத்தொடர்ந்து பிக் பாஸ் டைட்டில் வின்னர் அறிவித்த சில மணி நேரங்கள் கழித்து இந்த சீசனில் கலந்து கொண்ட அத்தனை போட்டியாளர்களுக்கு சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டலில் பார்ட்டி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாம்.

அந்த பார்ட்டில் டைட்டில் வென்ற அர்ச்சனாவை தவிர மீதமுள்ள எல்லா போட்டியாளர்களும் கலந்து கொண்டார்களாம்.

அதோடு இதுவரைக்கும் டைட்டில் வின்னர் இல்லாமல் இப்படி பார்ட்டி நடந்ததாக சரித்திரமே இல்லை என்றும் இதுதான் முதல் முறை என்றும் கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து இதற்கு ஆளாளுக்கு ஒரு காரணத்தை சொல்லி வருகின்றனர். ஆனாலும் இதற்கு முக்கிய காரணமாக அர்ச்சனா பார்ட்டியை தவறவிடவில்லை என்றும் அவர் புறக்கணிக்கப்பட்டார் என்று சொல்லலாம் என்றும் சிலர் கூறி வருகிறார்கள். அதனோடு அர்ச்சனா ஜெயித்ததற்கு பி ஆர் வேலை புகார் காரணம் என்றும் பலர் கூறி வருகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+