அந்த சண்டை போட்டாங்க.. இந்தா சேந்துட்டாங்கள்ள ஜோடியா!
சென்னை: பிக் பாஸ் வீட்டுக்குள் அந்த சண்டை போட்டாங்க.. இப்ப ஜோடியா சேர்ந்துட்டாங்க பாருங்க.. அதுதாங்க அர்ச்சனாவும், அறந்தாங்கி நிஷாவும். கூடவே ஜித்தன் ரமேஷும் சேர்ந்து விட்டார்.
பிக் பாஸ் 4 சீசன் இப்போது விறுவிறுப்பாகத்தான் போயிட்டிருக்குங்க. கடந்த சீசன்களை விட இந்த சீசனில்தான் சண்டை அதிகம். ஒரு சிலரைத் தவிர மற்ற எல்லோருமே செமத்தியாசண்டை போடறாங்க
அதேசமயம். ஆவேசமாக சண்டை போட்டு வந்தவர்கள் எல்லாம் கிட்டத்தட்ட வெளியில் போய் விட்டனர். அறந்தாங்கி நிஷா, அர்ச்சனா, சனம் ஷெட்டி, சுரேஷ் என பலரும் போய் விட்டனர்.

வெளியில் சமாதானம்
வெளியில் போன பிறகு தங்களுக்குள் சந்தித்து உடனே சமாதானமாகி விடுவதை பிக் பாஸ் போட்டியாளர்கள் கடைப்பிடிக்கின்றனர் .உள்ளுக்குள்தான் கத்திக்குவோம். வெளியில் வந்த பிறகு கட்டிக்குவோம் என்பதை இவர்கள் சொல்லாமல் சொல்கின்றனர்.

சமீபத்தில் கூட்டம்
இப்படித்தான் இப்போது வெளியில் போகும் ஒவ்வொருவரும் கூட்டம் போட்டு கூடிக் கொள்கின்றனர் .சமீபத்தில்தான் ரேகா, சுரேஷ் சக்கரவர்த்தி, வேல்முருகன் ஆகியோர் ஒன்று சேர்ந்து மீட்டிங் போட்டு கூடிக் குலாவினர். இப்போது அர்ச்சனா, நிஷா, ரமேஷ் ஆகியோர் கூடிப் பேசியுள்ளனர்.

அர்ச்சனா நிஷா கூட்டம்
இந்த மூவரில் முதலில் ரமேஷ் வெளியே போனார் .பின்னர் நிஷா வெளியேற்றப்பட்டார். லேட்டஸ்டாக போனவர் அர்ச்சனா. இதில் அர்ச்சனாவும், நிஷாவும் அப்படி சண்டை போட்டுக் கொண்டவர்கள் .அர்ச்சனா அப்பா பற்றி நிஷா பேசப் போக பெரிய சண்டையாகி விட்டது. கதறிக் கொட்டினார் அர்ச்சனா.

பெரிய சண்டை
ஆனால் நிஷா வெளியேற்றப்பட்டபோது அப்படி அழுதார் அர்ச்சனா .நீ போகதாடி என்று கூறிக் கூறி கேவினார். ஆனால் அவரே கடந்த வாரம் வெளியேற்றப்பட்டார். இப்போது இந்த மூன்று பேரும் வெளியில் கூடி கட்டிப் பிடித்து நட்பை வெளிப்படுத்தியுள்ளனர். இதற்காக ஒரு போஸ்ட்டையும் போட்டுள்ளார் அர்ச்சனா.

கடைசி வரை தொடரும்
நட்பின் இறுக்கமானது நமது வாழ்க்கை வரை தொடரும். நமது வாழ்க்கையின் போக்கையும் அது இட்டுச் செல்லும். கடும்த டைகளையும் தாண்டி அது தொடரும் என்று ரொம்பவே தத்துவமாக பேசியுள்ளார் அர்ச்சனா. அது சரி அந்த சண்டை போட்டு விட்டு இப்ப வந்து தத்துவமா கக்கறீங்களே என்று பலரும் கலாய்த்து வருகின்றனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications