ஆர்த்தியின் ஆசை.. மாத்தி பேசறாரா? யாரந்த 3 எழுத்து நகடிர்? ஜெயம் ரவி இதை செய்தாலே போதும் பிரபலம் நச்
சென்னை: ஜெயம் ரவி - ஆர்த்தி குடும்ப விவகாரம் இன்னும் ஓயாதநிலையில், இந்த விவகாரம் குறித்து பிரபலங்களும், மூத்த பத்திரிகையாளர்களும் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.. அந்தவகையில், பத்திரிகையாளர் சுபைர் தந்திருக்கும் பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.
ஜெயம் ரவி, சில தினங்களுக்கு முன்பு தன்னுடைய பிரச்சனையை வெளிப்படுத்தியிருந்தார். அதுநாள்வரை ஆர்த்திக்காக ஆதரவு தெரிவித்து வந்த பலரும், ஜெயம் ரவியின் பக்கம் சாய துவங்கிவிட்டார்கள்.. ஜெயம் ரவி பேசுவதிலும் நியாயம் இருக்கத்தான் செய்கிறது என்று கூறினார்கள்.

ஜெயம் ரவியின் குற்றச்சாட்டுகளுக்கு எந்த பதிலையும் சொல்லாமல் இருந்த ஆர்த்தி, கடந்த வாரம் தன்னுடைய மவுனத்தை கலைத்திருந்தார். இதுகுறித்து சுபைர் King 24X7 என்ற சேனலுக்கு அளித்த பேட்டியில், தம்பதியினர் இனி செய்ய வேண்டியது இதைதான் என்று சில விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதன் சுருக்கம்தான்:
ஆர்த்தி: "இப்போது சேர்ந்து வாழ ஆசைப்படுவதாக ஆர்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.. ஆனால், ஆர்த்தி ரவி என்ற பெயரிலேயே அந்த அறிக்கையை வெளியிடுகிறார். இவர்கள் இருவருமே மாறிமாறி பொதுவெளியில் பேச ஆரம்பித்து விட்டார்கள்.. இதனால் விரிசல்தான் அதிகமாகிறது... இது பொதுவெளியில் நாளடைவில் ஒன்றுக்கு பத்தாக மாறும்.. இறுதியில் ஜெயம் ரவியின் இமேஜை பாதிக்கும்.. ஜெயம் ரவியின் ரசிகர்களையும் பாதிக்கும்
எனவே, இந்த விஷயத்தை பொறுத்தவரை, அமைதியும், காலமும் மட்டும்தான் தேவையாக இருக்கிறது.. இப்போதைக்கு இருவருமே அமைதியாக இருக்கணும்.. காலம்தான் அனைவருக்கும் மருந்து.. காலம் ஒருவரை கரைசேர்க்கும், அல்லது கரையோடு அடித்துக் கொண்டு போய்விடும்.
டைவர்ஸ்: அதைவிட்டுவிட்டு, இருக்கிற காயத்தை ஆழமாக கிளறிவிடக்கூடாது. இந்த விவகாரம் இப்போதைக்கு முற்றுப்புள்ளி வெக்கிற மாதிரி தெரியல. கோர்ட் வரை போயிருக்கு.. 2 பேருக்கும் சம்மன் அனுப்புவாங்க.. கோர்ட்டில் கூட எடுத்ததுமே டைவர்ஸ் தந்துட மாட்டாங்க.. மியூச்சுவல் டைவர்ஸ் இருந்தாலே, 3, 4 முறை கவுன்சிலிங் நடக்கும்..
அப்படியிருக்கும்போது, இது ஒருபக்க டைவர்ஸ்தான். அதனால், எப்போதுமே தம்பதிகளை முதலில் சேர்த்து வைக்க முயற்சிப்பார்கள்.. இருவருக்குமே கவுன்சிலிங் தருவார்கள். இறுதியில் குழந்தையின் நலனை பார்த்து, கோர்ட் முடிவெடுக்கும். இந்த விஷயத்திலும் அதுவரை இருவரும் அமைதி காக்கணும்..
சொத்து விவரம்: கார், சொத்து விவகாரங்கள் போன்றவற்றில் ஆர்த்தி மாத்தி மாத்தி பேசறதா சொல்றாங்க.. ஆனால், ரவி தரப்பில் விவாகரத்து அனுப்பப்பட்டது ஆர்த்திக்கு தெரியாமல் இருந்திருக்காது.. அதிகப்படியான அன்பு, அதிகப்படியான பொசசிவ், இப்படி அதிகப்படியான சந்தேகமாக மாறிவிடுகிறது. ஆரம்பத்தில் இருவருமே ஒருவரையொருவர் அதிகமாக நம்பியிருக்கிறார்கள்.
இறுதியில், தனக்கு சுதந்திரம் இல்லை என்பதுதான் ஜெயம் ரவியின் பிரச்சனையாக வெடித்துள்ளது. ஒருகட்டத்தில் வாழ்க்கை மீதான சலிப்பும் வந்திருக்கலாம். அதேபோல, ஆர்த்தி தரப்பிலும் நியாயம் உள்ளது. இருவர் பேசுவதுமே சரியாக உள்ளதால், இவர்கள்தான் உட்கார்ந்து பேச வேண்டும்.... தமிழ் சினிமாவில் எங்கே டைவர்ஸ் என்றாலும் தனுஷ்கிட்டதான் போய் நிக்கிறாங்க..
பிரபலங்கள்: தனுஷை பொறுத்தவரை ரொம்ப பிஸியாக இருக்கிறார்.. இதுக்கெல்லாம் அவருக்கு நேரமில்லை.. பார்ட்டி, நிகழ்ச்சிகளில் பிரபலங்கள் போட்டோ எடுத்து கொள்வது வாடிக்கையாகும்.. அதைவைத்து, ஆர்த்தியுடன் பேசுவது சம்பந்தமில்லாதது" என்றார்.
தொடர்ந்து சுபைர் பேசும்போது, சினிமா பிரபலங்கள் என்பதால், அவர்களது விவாகரத்து வெளியே வருகிறது. கோர்ட்டில் போய் பாருங்க.. ஏகப்பட்ட டைவர்ஸ்.. அதிலும், காதல் திருமணங்கள் செய்பவர்கள் அதிகமாக டைவர்ஸ்க்கு வருகிறார்கள்.. காதலிக்கும்போது, ஆளுக்கு பக்கம் பொய்களை சொல்லிவிடுவதால், திருமணத்துக்கு பிறகு இதுவே விவகாரமாக வெடிக்கிறது. சிலர் புரிந்து வாழ்கிறார்கள்.. சிலர் கோரட்டுக்கு வருகிறார்கள்" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications