ஆர்த்தியின் டவுட்.. தோளுக்கு மேல 2 பசங்க.. இது நல்லாவா இருக்கு? ஜெயம் ரவி கிட்ட பேசுங்க: பிரபலம் நச்
சென்னை: ஜெயம்ரவி - ஆர்த்தி இருவருமே மீண்டும் ஒன்று சேர வேண்டும், ஜெயம்ரவி தன்னுடைய அடுத்தடுத்த சினிமா இலக்கை நோக்கி நகர்ந்து வெற்றி பெற வேண்டும் என்று மூத்த பத்திரிகையாளர் சபிதா ஜோசப் கூறியிருக்கிறார்.
Media Cavin என்ற யூடியூப் சேனலுக்கு மூத்த பத்திரிகையாளர் சபிதா ஜோசப் பேட்டி ஒன்றை தந்துள்ளார்.. அதில், ஆர்த்தி - ஜெயம்ரவி விவகாரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

குறிப்பாக, ஜெயம்ரவியை பலமுறை தொடர்பு கொண்டு பேச முயன்றும்கூட முடியவில்லை, விவாகரத்து விஷயம் தனக்கு தெரியாது என்றெல்லாம் ஆர்த்தி கூறிய நிலையில், இதுகுறித்து சபிதா ஜோசப் தன்னுடைய கருத்துக்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.
குழந்தைகள்: அதில், "தோளுக்கு மேல 2 குழந்தைங்க வளர்ந்து நிக்கிறாங்க.. 2 குழந்தைகளை பெத்துக்கிட்டு, இத்தனை வருஷம் அவருடன் ஒன்றாக வாழ்ந்துட்டு, இப்போ வந்து என்கிட்ட அவர் பேசல, என்கிட்ட ஒன்னும் சொல்லலன்னு" சொல்லிட்டு இருக்கிறதெல்லாம் நல்லாவா இருக்கு? அப்படின்னா இத்தனை வருட திருமண பந்தத்தில் கணவரை புரிந்துகொண்டது என்ன? அன்பு இருந்ததால்தானே இவ்வளவும் நடந்திருக்கிறது..
இத்தனை வருஷம் அவருடன் பழகியும், அவர் எப்படிப்பட்டவர் என்று உங்களால் ஜட்ஜ் பண்ண முடியலயா? அவருடைய மனஉணர்வு என்ன? அவருக்கு என்ன பிடிக்கும்? என்றெல்லாம் தெரியாவிட்டால், அவருடன் உண்மையாக பயணிக்கவில்லை என்றே தெரிகிறது.
சந்தேகம்: உங்களுக்கு பணத்தேவையில்லை.. அவருக்கும் பணத்தேவையில்லை. உங்க அம்மா வழியில் உங்களுக்கு ஏகப்பட்ட சொத்துக்கள் இருக்கு.. உங்ககிட்ட இதுவரை செலவு பற்றியெல்லாம் ஜெயம் ரவி கேட்டிருக்காரா? உங்களை இதுவரை திட்டியிருக்கிறாரா?
நீங்க பண்ண டார்ச்சரால்தானே அவர் போயிட்டாரு.. இது கிட்டத்தட்ட விரட்டியடித்த மாதிரிதானே? ஒருவரை சந்தேகப்படுவதே, அவரது மனதை கடுமையாக பாதிப்படைய செய்யும்.
இதுவரைக்கும் கால்ஷீட் தருவதற்கான சுதந்திரம் அவருக்கு இருக்கா? நீங்க சீரியல் தயாரிக்கறீங்க.. அவ்வளவுதான்.. மற்றபடி ஸ்டோரி அறிவு, டைரக்ஷன் அறிவு இதெல்லாம் கிடையாது. சீரியலுக்கு நீங்க ஓகே.. அந்த சீரியலை பல வருஷம் இழுத்துட்டு போகலாம்.. ஆனால் ஜெயம் ரவியின் அவங்க அப்பா சீனியர் ஆயிற்றே.. நீங்க அவரிடம் கேட்டிருக்கலாமே?
தனிஒருவன்2: சொந்த அண்ணனால் உருவானவர் ஜெயம் ரவி.. அப்பாவால் உருவாக்கப்பட்டவர். அவங்களுக்கே இன்று அவரால் எதுவுமே செய்ய முடியாத அளவுக்கு நெருக்கடியை தந்திருக்கீங்க.. தனிஒருவன் 2 உட்பட கால்ஷீட்டை முடக்கி வெச்சிருக்கிறதா சொல்றாங்க.. இதெல்லாம் ஒருவரின் மனதை பாதிக்காதா?
கர்ப்பமாக இருக்கும்போது, வாந்தியை கையில் ஏந்தியவர் என்று நீங்களே பலமுறை பேட்டிகளில் சொல்லியிருக்கீங்க.. ஆனால் அவரை போல நீங்க ஏன் அப்படியில்லை? எவ்வளவுதான் சம்பாதிச்சாலும் தங்கத்தை சாப்பிட முடியாது. உங்களிடம் அவர் குறைகளையே பார்க்கவில்லையே. "சந்தேகம்" என்பது கீறல் போல விழுந்துவிட்டது. அதை சரிசெய்வது லேசுப்பட்ட விஷயமில்லை..
பிரார்த்தனை: இத்தனை வருஷமாக இப்படித்தான் உங்களிடம் சொல்லாமல் ஜெயம்ரவி, கிளம்பி போனாரா? மனசு நோகும்படி நடந்து கொண்டிருக்கிறாரா? அதனால், இந்த வீடும் வேணாம், அந்த வீடும் வேணாம்.. இருவரும் தனியாக நிம்மதியாக வாழ வேண்டும்.. அதற்கு ஒருவருக்கொருவர் மனம் விட்டு பேசவேண்டும். ஜெயம் ரவி தன்னுடைய திரையுலகில் அடுத்தக்கட்டத்துக்கு நகர வேண்டும்.. தம்பதி இருவரும் சந்தோஷமாக வாழ வேண்டும் என்பதே எங்களுடைய ஆசை - பிரார்த்தனை" என்கிறார்.
இன்ஸ்டாகிராம்: தான் அமைதியாக இருப்பதற்கு குற்ற உணர்ச்சியோ, பலவீனமோ காரணம் இல்லை என ஆர்த்தி ஏற்கனவே விளக்கம் அளித்திருந்தார்.. நீதித் துறை மீதும் நம்பிக்கை இருப்பதாக கூறியிருந்தார்.. அந்த அறிக்கையை பார்த்த ரசிகர்கள் குழப்பம் அடைந்திருந்தனர்.. அறிக்கையில் தன்னுடைய பெயரை ஆர்த்தி ரவி என்றே வைத்திருக்கிறார். அத்துடன் இன்ஸ்டாகிராமில் ஜெயம் ரவியின் மனைவி என விளக்கம் அளித்த வரியை நீக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications