3 எழுத்து நடிகருக்கு 2வது கல்யாணமா? அப்ப விவாகரத்துக்கு இதான் காரணமா? போயஸ் கார்டனில் என்ன நடக்குது
சென்னை: தனுஷ் - ஐஸ்வர்யா இருவருமே சட்டப்பூர்வமாக பிரிந்துவிட்ட நிலையில், இந்த விவாகரத்துக்கு என்ன காரணம் என்பதை பற்றின யூகங்கள் இணையதளத்தில் வலம் வந்து கொண்டிருக்கின்றன. அந்தவகையில், மூத்த பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன் சில கருத்துக்களை முன்வைத்துள்ளார்.
தனுஷ் - ஐஸ்வர்யா தம்பதி இருவருமே கடந்த 2022ம் ஆண்டு, பிரிந்து வாழ முடிவு செய்திருப்பதாக அறிவித்தனர்.. இந்த விவாகரத்து அறிவிப்புக்கு பிறகு இருவருமே, தங்கள் விவாகரத்து பற்றின பேச்சை எங்குமே பேசவில்லை..

கடந்த வாரம், சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா ஆஜராகியிருந்தனர்.. "இப்போதும் பரஸ்பர விவாகரத்து பெறுவதில் உறுதியாக இருக்கிறீர்களா அல்லது உங்கள் முடிவில் ஏதேனும் மாற்றம் உள்ளதா" என்று, நீதிபதி கேட்டார். அதற்கு 2 பேருமே "எங்கள் முடிவில் எந்த மாற்றமும் இல்லை. பரஸ்பர விவாகரத்து பெறுவதில் உறுதியாக இருக்கிறோம்" என்றார்கள்..
இதையடுத்து, கடந்த 27ம் தேதி, தனுஷ்-ஐஸ்வர்யா இருவருமே நேரில் ஆஜராகியிருந்த நிலையில், விவாகரத்து வழங்கப்பட்டது.. இருவருமே அதிகாரப்பூர்வமாக பிரிந்து விட்டனர். இந்நிலையில், நடிகர் தனுஷுக்கும், பெண் மருத்துவருக்கும், திருமணம் செய்ய பெற்றோர் முயற்சிப்பதாக மற்றொரு தகவல் கசிந்து வருகிறது.. அந்த மருத்துவரும் ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்தானவராம்..
யூகங்கள்: அதேபோல, தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்துக்கு என்ன காரணம் என்பது பற்றின யூகங்கள் பலவாறு இணையத்தில் வலம் வந்து கொண்டிருக்கிறது. அந்தவகையில், தம்பதிக்குள் எழுந்த பொருளாதார காரணம்தான், விவாகரத்து வரை சென்றதாக சொல்கிறார்கள்..
அதாவது கஸ்தூரி ராஜா, தன் படத்துக்காக வாங்கிய கடனை திருப்பி செலுத்தாமல் இருந்தாராம்.. அந்த விவகாரத்தில் ரஜினியின் பெயரையும் கஸ்தூரி ராஜாவுக்கு கடன் கொடுத்தவர் இழுத்துவிட்டதால்தான், தனுஷ் குடும்பத்தையே மொத்தமாக ரஜினி ஒதுக்கிவைத்துவிட்டாராம்.. இந்த காரணம் உண்மையா என்று தெரியவில்லை.
என்ன காரணம்: ஆனால், Kingwoods News என்ற யூடியூப் சேனலுக்கு மூத்த பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன் தந்துள்ள பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது. அந்த பேட்டியில் தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்துக்கான காரணத்தை தமிழா தமிழா பாண்டியன் விவரித்துள்ளார்.
"தனுஷூக்கு படவாய்ப்பு இல்லையென்றால் சொந்தமாக படம் எடுக்க ஆரம்பித்துவிடுகிறார். 6 கோடி பட்ஜெட்டில், நானும் ரவுடிதான் படத்தை முடிவு செய்து வைத்திருந்தார் தனுஷ்.. ஆனால், 16 கோடி வரை செலவில் கொண்டுவந்து விட்டுவிட்டார்கள் விக்னேஷ் சிவனும் நயன்தாராவும். தனுஷ் அப்பா கஸ்தூரிராஜாவுக்கு இன்னமும் கடன் இருக்கு.
2 பிள்ளைகள்: அதனால்தான், ஐஸ்வர்யாவின் 2 பிள்ளைகளுக்கும் ரஜினியின் சொத்துக்கள் முழுமையாக போய் சேர வேண்டும் என்று லதா ரஜினி விரும்பினார். தனுஷ் படம் எடுப்பதாக சொல்லி சொத்தை அழித்துவிடுவார் என்றும், தன்னுடைய 2 பேரன்களுக்கும், மகளுக்கும் தனுஷால் பொருளாதார சிக்கல் வந்துவிடும் என்றும் பயந்தார்..
தனுஷ் கடன் வாங்கினால், அது தன்னுடைய மகளின் தலையில் தான் வந்துவிழும் என்று நினைத்து லதா ரஜினி அச்சப்பட்டார்.. இதற்கெல்லாம் ஒரே வழி, சட்டப்பூர்வமாக விடுதலை வாங்கினால் மட்டும்தான் ரஜினியின் அத்தனை சொத்துக்களும் பாதுகாக்கப்பட்டு, 2 பேரன்களுக்கு போய் சேரும் என்பதில் ரஜினியும், லதா ரஜினியும் இப்படியொரு தெளிவான முடிவினை எடுத்தார்கள்.
சரியான முடிவு: தன்னுடைய 2 பேரன்களுக்கு ரஜியின் பல்லாயிரம் கோடி ரூபாய் சொத்துக்கள் போய் சேர வேண்டுமானால், இதுதான் ஒரே வழி என்று முடிவு செய்தனர் லதா ரஜினியின் உற்றார் உறவினர் தரப்பினர்.. அதனால் அனைவரும் சேர்ந்துதான் தனுஷை கழட்டிவிட்டார்கள்.. அவர்கள் எடுத்த முடிவு சரியான முடிவுதான் என்று தெரிவித்துள்ளார்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications