Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மர்ம நபர்களோடு திவ்யா வீட்டை முற்றுகையிட்ட அர்ணவ்.. காவல்துறை முன்பு நடந்த திடீர் பிரச்சனை

Subscribe to Oneindia Tamil

சென்னை: சீரியல் நடிகை திவ்யா ஸ்ரீதர் தனியாக வீட்டில் இருக்கும் போது அர்ணவ் சில ஆட்களோடு வீட்டிற்கு வந்து தன்னை மிரட்டுவதாக கதறிய வீடியோ ஒன்று வெளியாகி இருக்கிறது.

திவ்யா மற்றும் அர்ணவ் இருவரும் குடும்பப் பிரச்சனையின் காரணமாக கோர்ட் அறிவுறுத்தலின்படி தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள்.

ஜெயிலிலிருந்து பெயிலில் வந்த அர்ணவ் நீதிபதி உத்தரவை மீறி வீட்டிற்கு வந்து பிரச்சனை செய்வதாக திவ்யா தரப்பில் கூறப்படுகிறது.

சீரியல் நடிகை திவ்யா ஸ்ரீதர் மற்றும் அர்ணவ் குடும்ப பிரச்சனை சமூக வலைத்தளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. சில மாதங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்ட இந்த தம்பதிகளின் குடும்ப சண்டை சின்னத்திரை வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது.

Arnaav besieged Divyas house with mysterious people Sudden trouble in front of the police

செவ்வந்தி சீரியல் நடிகை திவ்யா ஸ்ரீதர் தன்னை செல்லமா சீரியல் கதாநாயகனாக நடிக்கும் தன்னுடைய கணவர் கர்ப்பமாக இருக்கும் போது அடித்து துன்புறுத்துகிறார் என்று கொடுத்த போலீஸ் கம்ப்ளைன்ட் காரணமாக அர்ணவ் ஜெயிலிலிருந்து ஜாமினில் வெளியே வந்து தற்போது மீண்டும் சீரியலில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் சில மாதங்களாக இவர்களுடைய பிரச்சனை அமைதியாக இருந்த நிலையில் தற்போது ஒரு சில வாரங்களாகவே மீண்டும் விஸ்வரூபம் எடுத்துக் கொண்டிருக்கிறது. அர்ணவ் பற்றி பல அதிரடியான ஆதாரங்களையும் குற்றசாட்டுகளும் திவ்யா வெளியிட்டுக் கொண்டிருக்கும் நிலையில் அர்ணவ் திவ்யா பற்றியும் சில ஆதாரங்களை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் இன்று அர்ணவ் சில மர்ம நபர்களோடு திவ்யா வீட்டிற்கு சென்று கதவை திறக்கும் படி கூறியிருக்கின்றனர். திவ்யா வீட்டிற்குள்ளே இருந்து கதவை பூட்டிக்கொண்டு பயத்தில் அலறியபடியே போலீசுக்கு போன் போட்டு இருக்கிறார். திவ்யாவுக்கு ஆதரவாக அவருடைய வழக்கறிஞர் ஒருவரும் அந்த இடத்திற்கு வந்திருக்கின்றனர்.

அப்போது இது அர்ணவ் உடைய வீடு என்று அர்ணவுடன் வந்தவர்கள் பிரச்சனை செய்ததாகவும் அதற்கு திவ்யா ஸ்ரீதர் தரப்பில் நானும் இந்த வீடு வாங்குவதற்கு பணம் கொடுத்திருக்கிறேன் என்று கூறியிருக்கின்றனர். அதுபோல ஜெயிலில் இருந்த அர்ணவுக்கு நீதிபதி நீங்கள் வெளியே சென்று உங்கள் மனைவி இருக்கும் இடத்திற்கு சென்று அவரை தொந்தரவு செய்யக்கூடாது என்று கூறி தான் ஜாமீன் கொடுத்ததாக திவ்யாவின் வழக்கறிஞர் கூறியிருக்கிறார்.

அதைத்தொடர்ந்து காவல்துறை வந்து இரு தரப்பினரோடு பேச்சுவார்த்தை நடத்தி அர்ணவை வெளியே அனுப்பி வைத்திருக்கிறார்கள் என்றும் வீடியோவில் தெரிகிறது. அது போல அர்ணவ் இது என்னுடைய வீடு என்னுடைய வீட்டிற்கு தான் நான் வந்திருக்கிறேன் என்று விளக்கம் அளிக்கப்பட்டதாகவும் தெரிகிறது தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+