அர்னவ் வெளியேற்றம்! உள்ளே அன்ஷிதா! மல்லுக்கட்ட வரும் அந்த நடிகை! சவுண்ட் சரோஜாவும் வராராமே!
சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் 5 பேர் வைல்ட் கார்டு போட்டியாளர்களாக செல்லவிருக்கிறார்களாம். அவர்களில் 4 பேர் குறித்த விவரங்கள் வெளியான நிலையில் அந்த 5 ஆவது நபர் மட்டும் சஸ்பென்ஸ்ஸாக வைத்திருக்கிறார்கள்.
பிக்பாஸ் சீசன் நிகழ்ச்சி கடந்த 6ஆம் தேதி 18 போட்டியாளர்களுடன் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகிறார். இவர் முதல் வாரத்திலிருந்தே போட்டியாளர்களின் வயிற்றில் புளியை கரைக்க வைத்து வருகிறார்.

இந்த நிகழ்ச்சியில் இருந்து ரவீந்தர் வெளியேறிவிட்டார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் டிஆர்பிக்காக நிறைய தகிடுதத்தங்கள் செய்யப்படுவதாக சொல்லப்படுவதுண்டு. அந்த வகையில் பிக்பாஸில் தேவையற்ற கண்டென்ட்கள் உருவாக்கப்படும்.
இருவருக்குள் உப்பு சப்பில்லாத விஷயங்களுக்கெல்லாம் முட்டிக் கொள்ளும். எவிக்ஷன் பிராசஸே டிஆர்பியை வைத்துதான் முடிவு செய்யப்படுகிறதே தவிர மக்களின் வாக்குகளை வைத்து அல்ல என பலர் விமர்சிக்கிறார்கள். இதெல்லாம் கமல்ஹாசன் ஏற்று நடத்திய நிகழ்ச்சியில் நடந்தது. ஆனால் தற்போது விஜய் சேதுபதி நிகழ்ச்சியில் எவிக்ஷன் பிராசஸ் எப்படி இருக்கும் என்பது போக போகத்தான் தெரியும்.
கடந்த வாரம் முழுக்க நிகழ்ச்சி மந்தமாகவே இருந்த நிலையில் நேற்றைய தினம்தான் சாச்சனாவும் அன்ஷிதாவும் குழாய் அடி சண்டை போல் கத்தி கூப்பாடு போட்டனர். இவர்கள் கத்தும் சப்தம் இடியை விட அதிகமாகவே இருந்தது. பொதுவாக இந்த நிகழ்ச்சியில் சுவாரஸ்யம் குறைந்தால் எடுங்க அந்த வைல்ட் கார்டை என பிக்பாஸ் எடுப்பார்.
அந்த வகையில் இந்த வாரம் அர்னவ் எலிமினேட் ஆகியுள்ள நிலையில் தற்போது தீபாவளிக்கு 5 வைல்டு கார்டு போட்டியாளர்களை களமிறக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த சீசனில் களமிறக்கப்பட்ட போது 5 பேரில் ஒருவரான சீரியல் நடிகை அர்ச்சனா டைட்டிலை பெற்றார்.
அந்த வகையில் இந்த முறை யாரெல்லாம் வைல்டு கார்டில் என்டரியாக போகிறார்கள் என்பதை பார்க்கலாம். அதன்படி செவ்வந்தி சீரியல் நடிகை திவ்யா ஸ்ரீதர், இவர் அர்னவ்வின் மனைவி, ஆனால் இவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடால் பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். மிமிக்ரி ஆர்டிஸ்ட் டிஎஸ்கே, வினோத் பாபு ஆகிய விஜய் டிவி பிரபலங்கள் கலந்து கொள்கிறார்கள்.
டிஎஸ்கே, கலக்கப் போவது யார் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளார். இவர் அண்மையில் வெளியான லப்பர் பந்து படத்திலும் நடித்துள்ளார். அது போல் வினோத் பாபு, தென்றல் வந்து என்னை தொடும் சீரியலில் நாயகனாக நடித்திருந்தார். அது போல் லட்சுமியின் மகள் ஐஸ்வர்யாவும் கலந்து கொள்கிறார் என தெரிகிறது. மற்றொரு 5-ஆவது போட்டியாளர் யார் என தெரியவில்லை. ஐஸ்வர்யா அதிரடி ஆட்டக்காரர். அன்ஷிதாவுக்கும் திவ்யா ஸ்ரீதருக்கும் இடையே ஏற்கெனவே வாய்த்தகராறு ஏற்பட்ட ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications