Arundhathi Serial: பாலையும் குடிக்கலை புத்தகமும் படிக்கலை... ஏன் மாமா?
சென்னை: சன் டிவியின் அருந்ததி சீரியலில் திகில் இருக்கிறது.பதிலுக்கு தெய்வானை, சண்முகத்தின் ரொமான்ஸ் காட்சிகளை கூட்டி இருக்கிறார்கள். எப்படி இருவரும் இவ்வளவு நெருக்கமானார் என்பது கொஞ்சம் இடிக்கும் லாஜிக்தான்.
திடீரென்று தெய்வானை சண்முகத்தை மாமா மாமா என்று கூப்பிடுவதும், பதிலுக்கு அவன் தெய்வானை என்று உருகுவதும் செயற்கைத் தனமான காதலாகத்தான் இருக்கிறது.
அமெரிக்க ரிட்டர்னான சண்முகம் தெய்வானையை பிடிக்கலை என்று ஒரு எபிஸோடில் சொன்னவன், அடுத்த எபிசோடில் தெய்வானை சொன்ன அருந்ததியின் கதையை கேட்டு ,உடனடியாக தெய்வானையை உசிருக்கு உசிராக காதலிக்கிறான்.

தெய்வானை உடல்
அருந்ததியின் ஆவிக்கு தற்போதைக்கு தெய்வானையின் உடல் தேவைப்படுகிறது என்று நம்பூதிரி சொல்ல, சண்முகம் மறுத்துவிட்டு, அவளை வீட்டுக்கு அழைச்சுட்டு வந்துடறான். ஆனால், புருஷனுக்கு தெரியாமல் அருந்ததிக்கு எப்படியும் நல்லது செய்ய வேண்டும் என்று தனது உடலை கொடுக்கிறாள்.

தெய்வானை அருந்ததி
தெய்வானையின் உடலில் இருக்கும் அருந்ததிக்கு சண்முகம் தெய்வானை என்று அவளை நெருங்கும் போது எல்லாம் அருந்ததிக்கு சண்முகத்தின் மேலாசை வந்துவிடுகிறது. இதுவும் ஆவிகள், பேய்கள் விஷயத்தில் உண்மைதானோ என்னவோ. சண்முகம் தெய்வானை என்று கொஞ்ச வரும்போது எல்லாம் அருந்ததி சண்முகத்தின் செயலை ரசிக்கிறாள்,அவன் தனக்கு மட்டும் சொந்தமாக வேண்டும் என்று ஆசைப்படுகிறாள்.

விலகியவுடன் ஆசை
தெய்வானையை விட்டு, அருந்ததி ஆவி முழு வடிவில் வெளியானவுடன், சண்முகம் தெய்வானை தெய்வானை என்று ஆசை காட்டும்போது எல்லாம், அருந்ததிக்கு தனக்கு உதவி செய்த தெய்வானைக்கே துரோகம் செய்ய எண்ணம் வந்துருது. நிரந்தரமாக சண்முகத்தை விட்டு, தெய்வானையை பிரிச்சு,சண்முகத்தை நான் அடையப்போறேன்னு கத்தறா.

பால் புத்தகம்
தெய்வானை இரவு நேரத்தில் சண்முகத்துக்கு பால் கொண்டு வர. புத்தகம் படித்துக் கொண்டு இருந்த சண்முகம் புத்தகத்தையும் படிக்கலை, பாலையும் குடிக்கலை. தெய்வானையையே பார்த்துகிட்டு இருக்கான்.என்ன மாமா..பால் வச்சு இருக்கேன்..அதையும் குடிக்கலை. புத்தகத்தையும் படிக்காம மூடி வச்சுட்டீங்கன்னு தெய்வானை கேட்கறா.
பாலை ரெண்டு பேரும் குடிக்கலாம்..புத்தகம் வேண்டாம்..இன்னிக்கு பிராக்டிகலா உன்னை படிக்கணும்னு இருக்கேன்னு சொல்றான். தெய்வானை வெட்கப் பட்டுக்கொண்டே மாமான்னு கிட்டே போகிறாள்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்












Click it and Unblock the Notifications