Arundhathi Serial: முகமூடி போட்டவன் பசுத்தோல் போர்த்திய புலி கதிர்தானா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியின் அருந்ததி திகில் சீரியலில் அருந்ததிதான் பேய். இதை ஆரம்பத்தில் பிரபலப்படுத்த நடிகை கோவை சரளா ப்ரோமோவில் வந்தார்கள். அடுத்து அருந்ததியில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்தும் இருந்தார்.

பெரியவர், சிறியவர் என்று அனைவரும் விரும்பிப் பார்க்கும் சீரியலாக இப்போது அருந்ததி சீரியல் இருக்கிறது. பெரிய ஜமீன் வீட்டில் ஒரு சிலைத் திருடன். இதை பார்த்து விட்ட, அருந்ததியை சீரழித்து கிணற்றில் தள்ளி கொன்னுடறான்.

அந்த கயவன் யாரென்று கண்டுபிடித்து,அவனை பழி வாங்க வந்திருக்கும் பேய்தான் அருந்ததி.இதை தீய சக்தி என்று அனைவரும் நினைக்க தெய்வானையிடம் மட்டும் நம்பி உதவி கேட்கிறாள் அருந்ததி.

சண்முகம் தெய்வானை

சண்முகம் தெய்வானை

வீட்டில் தீய சக்தி இருக்கும் நிலையில்குடும்பத்தை கவசமாக இருந்து காக்க தெய்வாம்சம் பொருந்திய பெண்தான் சண்முகத்துக்கு மனைவியாக வர வேண்டும் என்று விரும்பிய ஜமீன் ஈஸ்வரி அமமா தெய்வானையை சண்முகத்துக்கு கல்யாணம் செய்து வைக்கறாங்க. ஆரம்பத்தில் அமெரிக்க ரிட்டர்ன் சண்முகத்துக்கு தெய்வானையை பிடிக்கவில்லை. கடைசியில் தெய்வானை உண்மையை சொல்ல அவனுக்கும் அருந்ததிக்கு உதவி செய்ய எண்ணம் வந்துருது.

ஈஸ்வரி கதிர்வேலன்

ஈஸ்வரி கதிர்வேலன்

ஈஸ்வரி அம்மாவை பெரிம்மா பெரிம்மா என்று ஆசையுடன் கூப்பிடும் கதிர்வேலன், தனது அம்மா அப்பாவை விட, ஈஸ்வரி அம்மா சொல் பேச்சை கேட்பவன். அவங்க பேச்சுக்கு மறு பேச்சு பேசாதவன். அனால், இவனின் அப்பா அம்மா, ஈஸ்வரி இடத்தை காலி செய்து, எப்போது அந்த இடத்தை தாங்கள் பிடிப்பது என்கிற கற்பனைக் கோட்டையில் இருப்பவர்கள்.

அம்மா கதிர்

அம்மா கதிர்

அப்பா தனது மகன் கதிரிடம், ஏய் இப்படி கெடுதல் செய், அப்படி கெடுதல் செய் என்று சொன்னால் கூட, அது உங்க புத்தி.பெரியம்மாவுக்கு எதிரா நான் ஒரு கெடுதல் கூட செய்ய மாட்டேன் என்று அடம் பிடிப்பவன். பெரியம்மாவின் நம்பிக்கைக்கு பாத்திரமானவன்.என்னடா இப்படியும் ஒரு பையன் இருக்கானே என்று ஆச்சரியத்தில் இருக்கும்போது தூக்கிப் போட்டான் பாருங்க ஒரு பெரிய குண்டு.

சிலைத் திருடனா?

சிலைத் திருடனா?

கடைசியில் அந்த சிலைத் திருடன் கதிர்வேலன் தானா? முக மூடி அணிந்த அவனை அடையாளம் காண முடியவில்லை என்றாலும், இதோ தெய்வானை வெளியில் போயிருக்கும் சமயம் கதிரும் வெளியில் போயிட்டு வர்றான். அருந்ததியை பாட்டிலில் அடைச்சாச்சுன்னும் சொல்லிக்கிட்டு சிரிக்கிறான்.

இங்கு சண்முகம், அந்த முக மூடியின் படத்தை போனில் பார்த்துவிட்டு, இந்த லொகேஷன் நம்ம வீட்டிலிருப்பதுதான் தெய்வானை..எனக்கு ஷாக்கிங்கா இருக்குன்னு சொல்றான்.

அட..கதிர்வேலன் பசுத் தோல் போர்த்திய புலி!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+