Arundhathi Serial: மெதுவா புடவை கொசுவத்தை சேர்த்து... இடுப்பில் செருகி!
சென்னை: சன் டிவியின் அருந்ததி சீரியலில் அருந்ததியின் ஆவியும், சண்முகத்தின் மனைவி தெய்வானையும் ஃபிரண்ஸாகிடறாங்க அருந்ததியை கெடுத்து, கிணற்றில் தள்ளியது யார் என்பதை கண்டு பிடிக்காமல் அதுவரை திணறி கொண்டு இருந்தாள் அருந்ததி.
தெய்வானை புருஷன் சண்முகத்தின் உடலில் அருந்ததி ஆவி இருந்தபோது, என் புருஷனை விட்டு போயிடுன்னு தெய்வானை சொல்ல, அப்போ எனக்கு ஒரு உதவி செய்னு அருந்ததியும் கேட்குது.
சரி செய்யறேன் சொல்லுன்னு கேட்ட போதுதான், தனக்கு இந்த ஜாமீன் வீட்டில் நடந்த கொடுமைகளை அருந்ததியின் ஆவி தெய்வானையிடம் சொல்கிறது. என்னால் ன்னை கெடுத்தவன் யாருன்னு கண்டு பிடிக்க முடியலை. நீ உதவி செய்யறேன்னு சொன்னால் உன் புருஷனை விட்டு போகறேன்னு சொல்றா. தெய்வானை சம்மதிக்க, சண்முகத்தை விட்டுப் போயிடறா அருந்ததி.

கிணற்றில் தெய்வானை
புருஷனுக்கு பேய் பிடிக்கலை, எனக்குத்தான் பேய் பிடிச்சு இருக்குன்னு சும்மா தெய்வானை சொல்ல, இதுதான் சாக்கு என்று, வீட்டில் யாரும் இல்லாத போது, சண்முத்தின் சித்தியும், சித்தப்பாவும் சேர்ந்து, பூசாரியை கூட்டிக்கிட்டு வந்தும் வெளியில தூக்கிட்டு போயி,பேயை ஓட்டுங்கன்னு சொல்றாங்க.தெய்வானை இல்லை இல்லைன்னு சொல்லியும் பூசாரி கேட்கலை, காலில் கல்லைக் கட்டிவிட்டு, தெய்வானையை கதற கதற கிணற்றில் தூக்கி போட்டுடறாங்க.

மிளகாய் முட்டை
தெய்வானையுடன் இருந்த இஞ்சி,மிளகாய்,முட்டை எல்லாரும் விளையாடிகிட்டு இருக்கும் போது, பந்தில் மாயம் செய்து, இவர்களை கிணற்று பக்கம் வரவழைச்சு, தெய்வானையை காப்பாத்த வச்சுருது அருந்ததி பேய். தெய்வானை சந்தோஷமாக வீட்டுக்கு வந்துடறா. அப்போதும், சித்தி, சித்தப்பா வீட்டுக்குள் விட மறுக்க, அவங்க பையன் சரவணன் அப்பா அம்மாவைத் திட்டி,கெஸ்ட் ஹவுஸுக்கு போங்கன்னு சொல்லி அனுப்பி வச்சுடறான்.

தெய்வானை சண்முகம்
தெய்வானையை பூசாரி கஷ்டப்படுத்தியதை அறிந்த சண்முகம், சித்தி, சித்தப்பாவை திட்டுவதற்கு அழைக்க, அண்ணன் சரவணன் வந்து, நீ கவலைப்படாதே சண்முகம். நான் அவங்களை கெஸ்ட் ஹவுஸுக்கு அனுப்பி வச்சுட்டேன்..கொஞ்ச நாளைக்கு அங்க இருந்தாதான் அவங்களுக்கு புத்தி வரும்னு சொல்லிட்டு போறான்.

கையை பிடிக்க
தெய்வானை கையை சண்முகம் பிடிக்க ஸ்ஸ் வலிக்குதுன்னு சொல்றா அவள். சாரி தெய்வானை உன்கையில் காயம் இருக்குது இல்லை மறந்துட்டேன்னு சொல்லி அவளை அழைச்சுக்கிட்டு போயி படுக்க வைக்கிறான். எனக்கு நினைவு இல்லாமல் இருக்கலாம், ஆனால், உனக்கு நான் தாலி கட்டி இருக்கேன். அதனால் நீதான் எனக்கு பொண்டாட்டி..உன்னை இந்த வீட்டில் நான் பாதுகாப்பா வச்சு இருக்கணும் இல்லையான்னு கேட்கறான்

கட்டிவிடவா புடவை?
அதே சந்தோஷத்தில் குளிக்கப் போகிறாள் தெய்வானை. அப்போது புடவை கட்டிக்க முடியாமல் தவிக்க. அங்கு வந்த சண்முகம்... எதுக்கு வீனா ரிஸ்க் எடுக்கறே.. நான் கட்டி விடவவான்னு கேட்கறான். உங்களுக்கு கட்டத தெரியுமான்னு கேட்க, தெரியும்னு சொல்லி,அவளையே பார்த்துக் கொண்டு புடவையை கொசுவம் வைக்கிறான்.
மெதுவாக கொசுவம் வைத்து, பின்னர் அவளது தொப்புளுக்கு கீழே வயிற்றில் கொசுவத்தை செருகறான்.. இருவரும் கொஞ்சம் நெளிந்து, பார்த்து, ரசித்து, விலகுகிறார்கள்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்












Click it and Unblock the Notifications