Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Arundhathi serial: அருந்ததி மாதிரி தெய்வானையையும் கிணத்துல... என்னடா பண்றீங்க?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியின் அருந்ததி சீரியலில் அருந்ததியை கிணற்றில் தள்ளி சாகடித்தார்கள். இப்போது தெய்வானையையும் கிணற்றில் போட்டு விடுங்கள் என்று பூசாரியே சொல்கிறார்.

சண்முகத்துக்கு பேய் புடிச்சு இருக்குன்னு சொல்லி, அவனை பூசாரி வந்து இழுத்துகிட்டு போயி, பேய் ஓட்டப் போறேன்னு மரத்துல கட்டி வச்சார். இல்லை இல்லைன்னு தெய்வானை கத்தியும் பூசாரி கேட்கலை. அடிக்கவும் ஆரம்பிச்சுட, சண்முகத்தின் அம்மா ஈஸ்வரி என்னை அடிங்கன்னு குறுக்கே நிக்கறாங்க.

என்ன செய்வதுன்னு புரியாத தெய்வானை, சண்முகத்தையும், அத்தையையும் காப்பாத்த தனக்குத்தான் பேய் புடிச்சு இருக்குன்னு பொய் சொல்றா. உடனே பூசாரி கும்பல் தெய்வானையை கட்டி வச்சு அடிக்க ஆரம்பிக்குது.

சண்முகம் தெய்வானை

சண்முகம் தெய்வானை

சண்முகத்தை கட்டு அவிழ்த்துவிட்டு, தெய்வானைக்கு பேய் புடிச்சு இருக்குன்னு,அவளை மரத்தில் கட்டி வச்சு அடிக்க ஆரம்பிச்சுடறாங்க., கண் முன்னாடி தன்னை காப்பாத்தின தெய்வானை அடி வாங்குவதை பொறுக்காத சண்முகம், பூசாரியிடம் சண்டை போட்டு, தெய்வானையை தூக்கிட்டு வந்துடறான். அவளை படுக்கையில் படுக்க வச்சு, பார்த்துக்கறான்.

ஆவி அருந்ததி

ஆவி அருந்ததி

அருந்ததியின் ஆவிதான் தெய்வானை இந்த வீட்டை விட்டு போகக் கூடாதுன்னு, சண்முகத்துக்கு பேய் புடிச்சு இருக்குன்னு சொல்லுது. ஆனா, அது இப்படி மாறிப் போகும்னு அருந்ததி ஆவி கூட நினைச்சு பார்க்கலை. இந்த வீட்டில் தெய்வானை இருந்தால்தான் தன்னை கெடுத்தது யார்னு கண்டு பிடிக்க முடியும்னு அருந்ததி ஆவி இந்த வேலையை பார்க்குது. இதை தெரிஞ்சுக்கிட்ட தெய்வானை அருந்ததிகிட்ட சண்டை போடறா.

இல்லாத சமயம்

இல்லாத சமயம்

வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தெய்வானையின் சின்ன மாமியார், மாமனார் இருவரும் சேர்ந்து பூசாரியையும், அந்த கும்பலையும் வீட்டுக்கு அழைச்சுட்டு வந்து தெய்வானையை பழி வாங்க நினைக்கறாங்க. அதாவது தெய்வானைக்கு பேய் புடிச்சு எங்க குடும்பத்தை ஆட்டுவிக்குது. இவளை அழைச்சுக்கிட்டு போயி பேயை ஒட்டுங்கன்னு சொல்லி.

பேய் என்னை

பேய் என்னை

எனக்கு பேய் புடிக்கலை, நான் அன்னிக்கு சும்மா சொன்னேன்.என் புருஷனை காப்பாத்தத்தான் அப்படி சொன்னேன். இது உங்களுக்கு தெரியும்தானே அத்தை. என்னை காப்பாத்துங்கன்னு தெய்வானை கதற, அவளை நம்பாதீங்க... இழுத்துகிட்டு போயி, கட்டி வச்சு அடிங்க. அப்போதுதான் தான் யாருன்னு இந்த பேய் சொல்லும்னு அத்தை பூசாரியைத் தூண்டி விடறாங்க.

அருந்ததி ஆவேசம்

அருந்ததி ஆவேசம்

தெய்வானையை காப்பாத்த அருந்ததி பேய் ஆவேசத்துடன் ஏதோ செய்யப் போக, அதுக்கு காரணமும் தெய்வானைதான்னு சின்ன அத்தை சொல்ல, நீ போ..என்னைக் காப்பாத்திக்க எனக்குத் தெரியும்னு அருந்ததியை தெய்வானை திட்டறா. கடைசியில் பூசாரி, இவளை கல்லைக் கட்டி கிணத்துல தூக்கி போடுங்கடான்னு சொல்ல, தெய்வானை காலில் கயிற்றால் கல்லைக் கட்டிவிட்டு, அவளை குண்டுக்கட்டாகத் தூக்கி கிணத்துல போடப்போறாங்க.

பூசாரி... பேய் புடிச்சதை விரட்டறதுக்கும் கிணத்துல கல்லைக் கட்டி பெண்ணைத் தூக்கி போடுவதற்கும் என்னடா சம்பந்தம்?

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+