மனைவி ஜாக்கெட்டில் அம்பானி வீட்டு பெயர் ஏன்? அட்லீ கொடுத்த விளக்கம்.. பாயிண்டை பிடித்த நெட்டிசன்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அட்லீ இப்போது தமிழ் சினிமாவைத் தாண்டி பாலிவுட்டிலும் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கிவிட்டார். விஜய்யை வைத்து தொடர்ந்து படங்கள் கொடுத்தவர், ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தை இயக்கிய பிறகு இந்திய அளவில் கவனிக்கப்படும் இயக்குநராக மாறிவிட்டார். அடுத்து அல்லு அர்ஜுனை வைத்து ராக்கா படத்தை இயக்கி வருகிறார். ஆனாலும் அம்பானி வீட்டு கல்யாணத்தில் அட்லி மனைவியின் பிளவுஸில் அம்பானி குடும்பப் பெயர் எழுதி இருந்ததை சுட்டிக்காட்டி ஒரு புகைப்படம் வெளியிட்டிருந்தார். இது விமர்சனத்தை சந்தித்து வரும் நிலையில் இதுகுறித்து விளக்கம் கொடுத்திருக்கிறார்.

ஒரு காலத்தில் "விஜய்யின் இயக்குநர்" என்று பேசப்பட்ட அட்லீ, இப்போது பாலிவுட் நட்சத்திரங்கள், பெரிய தயாரிப்பாளர்கள், தொழிலதிபர்கள் என்று வேறு ஒரு வட்டத்திலும் தொடர்ந்து தென்படுகிறார். குறிப்பாக அம்பானி குடும்பம் நடத்தும் நிகழ்ச்சிகளில் அட்லீயும் அவரது மனைவி பிரியாவும் கலந்து கொள்வது அடிக்கடி கவனிக்கப்படுகிறது. இதுதான் சில வருடங்களுக்கு முன்பே சமூக வலைதளங்களில் ஒரு விதமான விமர்சனத்தையும் கிளப்பியது. அதற்கு முக்கிய காரணமாக அமைந்தது ஆனந்த் அம்பானியின் திருமண நிகழ்ச்சியில் நடந்த ஒரு சம்பவம்.

Vijay Atlee

அட்லீ குடும்ப புகைப்படங்கள்

அந்த பிரமாண்ட திருமணத்தில் அட்லீயும் அவரது மனைவி பிரியாவும் கலந்து கொண்டிருந்தனர். அப்போது பிரியா அணிந்திருந்த உடையில் ஆனந்த் அம்பானியை பெருமைப்படுத்தும் வகையிலான வாசகம் இடம்பெற்றிருந்தது. அந்த வாசகத்தை கேமராவுக்கு காட்டியபடி இருவரும் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அவ்வளவுதான் சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் தொடங்கிவிட்டன.

"அட்லீ பாலிவுட்டில் வளர்ந்த பிறகு அம்பானி குடும்பத்துடன் இவ்வளவு நெருக்கமாக இருப்பது ஏன்?" என்ற கேள்வி ஒருபக்கம். இன்னொரு பக்கம், பெரிய பணக்காரர்களுடன் நெருக்கமாக இருந்தால் சினிமாவில் பல விஷயங்களை சாதித்துவிடலாம் என்பதற்காகத்தான் இப்படிச் செய்கிறார் என்ற விமர்சனங்களும் வந்தன. ஆனால் அந்த விஷயத்தைப் பற்றி அட்லீ இத்தனை நாட்களாக பெரிதாக விளக்கம் கொடுக்காமல் இருந்த நிலையில், இப்போது பத்தா படத்தின் வெற்றி விழா நிகழ்ச்சியில் அதற்கு பதில் சொல்லியிருக்கிறார்.

அட்லீ கொடுத்த விளக்கம்

அட்லீ சொன்ன விஷயம் என்னவென்றால், ஆனந்த் அம்பானி தனக்கு மிகவும் நெருக்கமான நண்பர் என்பதுதான். நான் கருப்புதான், சுமாராகத்தான் இருக்கிறேன் என்று என்னை கேலி செய்கிறவர்கள் சொல்வார்கள். ஆனால் ஆனந்த் எனக்கு நெருக்கமான நண்பன். மும்பையில் நான் கஷ்டப்பட்ட நேரத்தில் என்னை கைப்பிடித்து என்னுடன் இருந்தவன் அவன். அதனால்தான் அந்த அன்பில் அந்த விஷயம் நடந்தது. யார் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும். அவர்களுக்கு எல்லாம் நான் என் படங்களின் மூலமாகத்தான் பதில் சொல்லிக்கொண்டிருக்கிறேன்" என்று அட்லீ பேசியிருக்கிறார்.

அம்பானி குடும்பத்துடன் உள்ள உறவு

அதாவது, "அம்பானி குடும்பத்துடன் நெருக்கமாக இருந்தால் ஏதாவது சினிமா லாபம் கிடைக்கும் என்பதற்காக நான் அப்படி பழகவில்லை; எனக்கு கஷ்டமான காலத்தில் இருந்த நண்பன் என்பதால்தான் அந்த நெருக்கம்" என்பதுதான் அட்லீயின் விளக்கம். இந்த விளக்கம் இப்போது சமூக வலைதளங்களில் மீண்டும் பேசப்படுகிறது. அதற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது.

விமர்சனங்களுக்கு பதில்

சமீபத்தில் பத்தா படத்தின் நிகழ்ச்சியில் அட்லீ பேசிய பேச்சு ஏற்கனவே பெரிய அளவில் வைரலானது. அந்த மேடையில் விஜய் சேதுபதி, விஜய் குறித்து மறைமுகமாக பேசினாரா? என்ற விவாதம் சமூக வலைதளங்களில் ஓடிக்கொண்டிருந்த நேரம். ஆனால் அட்லீயோ அந்த மேடையில் விஜய்யைப் பற்றி மிகவும் வெளிப்படையாக பேசினார். "இன்று நான் அணிந்திருக்கும் டிரஸ், வாட்ச், செருப்பு எல்லாமே என் உழைப்பால் வந்தது என்று சொன்னாலும், விஜய் அண்ணன் இல்லையென்றால் இந்த இடத்துக்கு வந்திருக்க முடியாது" என்று விஜய்க்கு நன்றி சொன்னார்.

ராஜா ராணி படத்தின் மூலம் தனக்கு அடையாளம் கிடைத்தாலும், விஜய்யுடன் தொடர்ந்து பணியாற்றியதுதான் தனது பயணத்தில் மிகப்பெரிய திருப்பமாக அமைந்தது என்றும் அட்லீ கூறினார். அதோடு, ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தை செய்ய விஜய்தான் தன்னை ஊக்கப்படுத்தியதாகவும் அவர் கூறியிருந்தார்.

விஜய்யின் பஸ் ரூட்.. பல வருஷத்துக்கு முன்பே சிவகார்த்திகேயன் சொன்னது நடந்துடுச்சே!
இந்தப் பேச்சுக்குப் பிறகும் அட்லீ விமர்சனங்களை சந்தித்தார். குறிப்பாக அவர் விஜய்யை இவ்வளவு வெளிப்படையாக ஆதரித்து பேச வேண்டுமா என்று சிலர் கேள்வி எழுப்பினர். அதே நேரத்தில் விஜய்யுடன் அட்லீக்கு இருக்கும் நட்பையும், அவருடைய சினிமா பயணத்தில் விஜய்க்கு இருந்த பங்கையும் தெரிந்தவர்கள் அட்லீ சொன்னதை வேறு விதமாகப் பார்க்கிறார்கள். இப்போது அம்பானி குடும்பம் தொடர்பான பழைய விமர்சனத்துக்கும் அட்லீ விளக்கம் கொடுத்துவிட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+