Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அட்லீயை அசிங்கப்படுத்தி.. முகமே மாறிடுச்சு.. செம்மறி ஆடுகளா? வாய்விட்ட கபில் சர்மா: பிரபலம் நறுக்

Subscribe to Oneindia Tamil

சென்னை: உருவகேலி, நிறவெறியால் அவமானப்படுத்தப்பட்டவர்கள் பலர், பின்னாளில் உச்சத்தை தொட்டிருக்கிறார்கள். அதுபோல அட்லீயும் பயங்கர புத்திசாலி" என்று மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு தெரிவித்துள்ளார்.
கோடம்பாக்கத்திலிருந்து பாலிவுட் சென்று ஷாருக்கானை வைத்து "ஜவான்" படத்தை எடுத்து மிகப்பெரிய ஹிட் தந்திருந்தார் அட்லீ. அப்போது, அட்லீயின் வெளித்தோற்றத்தை வைத்து "இவர்தான் ஷாருக் கானை வைத்து இயக்கப்போகிறாரா" என்றெல்லாம் நிறைய ட்ரோல்கள் சோஷியல் மீடியாவில் வைரலாகியிருந்தன..

வசூல் சாதனை: ஆனால், அந்த படம் மெகா ஹிட் அடித்தது. ரூ.1000 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை நிகழ்த்தியது. இதற்கு பிறகு ட்ரோல் செய்த கூட்டம் வாயடைத்துபோனது.. இந்த நிலையில் நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற அட்லியை உருவக்கேலி செய்த சம்பவம் கடந்த 2 நாட்களாகவே பரபரப்பாகி வருகிறது.

india bollywood

இதுகுறித்து, Cheyyaru Balu Official யூடியூப் சேனலில் செய்யாறு பாலு பேசும்போது, "உருவகேலி இன்று எல்லா இடங்களிலும், எல்லா துறைகளிலும் இருக்கிறது.. அட்லீ உருவகேலி செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி கொண்டிருக்கின்றன.. கபில் சர்மாவின் நிகழ்ச்சி என்பது, வரக்கூடிய செலிபிரிட்டிகளை புல்லி செய்வதுதான்..

அட்லீ எங்கே: அட்லீ தன்னுடைய பேபி ஜான் படத்தை விளம்பரப்படுத்த கபில் சர்மா ஷோவிற்கு வருகை தந்தார். அட்லியிடம், "இளம் வயதில் பிரபல இயக்குனராக உயர்ந்து இருக்கிறீர்கள். ஒரு பெரிய நடிகரை நீங்கள் சந்திக்க சென்று அவர் உங்கள் தோற்றத்தை பார்த்து நீங்கள்தான் அட்லியா? என்று கேட்டு இருக்கிறாரா? உங்களைப் பார்த்து அடையாளம் தெரியாமல் உங்களிடமே 'அட்லீ எங்கே?' என்று கேட்டிருக்கிறார்களா?" என்று கபில் சர்மா கேள்வி எழுப்பினார்.

அப்போது அட்லீக்கு முகமெல்லாம் மாறுகிறது. "நீங்க எதை காரணமாக வைத்து இந்த கேள்வியை கேட்கிறீர்கள் என்று தெரிகிறது. என்னுடைய உருவத்தை வைத்துதானே? உருவத்தை வைத்து, என்னை யாராவது முதல் சந்திப்பில் அப்படி நினைத்திருந்தால், நான் இந்தளவுக்கு வந்திருக்க முடியாது. ஏஆர். முருகதாஸ், என்னுடைய ராஜா, ராணி படத்தின் கதையை கேட்டுவிட்டு வாய்ப்பு தந்தாரே தவிர, என் கருத்தையோ, நிறத்தையோ பார்க்கவில்லை" என்றதுமே, அரங்கில் பெரிய கைதட்டலை கேட்க முடிகிறது.

செம்மறி ஆடுகள்: ஆனால், அந்த கேள்வி கேட்டதுமே, அட்லீக்கு முகம் மாறியது உண்மை. இதற்கு பிறகு சோஷியல் மீடியாவில் அதற்குபிறகு அட்லீக்கு மிகப்பெரிய ஆதரவு கிடைக்க துவங்கியது. உடனே கபில் சர்மா ,"நான் அந்த அர்த்தத்திலேயே அட்லீயை கேட்கவில்லையே? நீங்களெல்லாம் செம்மறி ஆடுகளா? ஒரு கேள்வியை கேட்டால், அது என்ன கேள்வி என்று ஆராயாமல், நீங்களே உருவகேலி செய்வதாக கற்பனைக்கு பேசினால் என்ன அர்த்தம்? இது நியாயமே இல்லை" என்று கூறியிருந்தார்.

கபில் சர்மா இவ்வாறு சொன்னாலும், அட்லீயின் உருவத்தையும் , நிறத்தையும் வைத்து கிண்டலடித்துதான் அந்த கேள்வியை கேட்டிருந்தார்.. இதுபோன்ற நிறவெறி, உருவகேலி செய்தால், மட்டந்தட்டி பேசினால், அவர்களை வேறு விதமாக டைவர்ட் செய்யக்கூடிய வித்தை தெரிந்தவர் அட்லீ. அதனால்தான், தன்னுடைய அண்ணன் விஜய் பாணியிலேயே ஒரு குட்டிக்கதையை சொல்கிறார்.

பணக்காரர்: ஒரு ஏழை, குளிரில் நடந்து சென்று கொண்டிருந்தார்.. இதைப்பார்த்த ஒரு பணக்காரர், தன்னுடைய வீட்டுக்கு சென்று கம்பளியை எடுத்து வருவதாக சொல்லி செல்கிறார். ஆனால், கம்பளி தர மறந்துவிட்டார். மறுநாள்தான், இந்த சம்பவம் நினைவுக்கு வந்து, கம்பளியை எடுத்துக் கொண்டு, ஓடிவருகிறார்.. ஆனால், அந்த ஏழை இறந்துகிடந்தார். இந்த கதையின் நீதி என்னவென்றால், நாம் யாருக்கும் வாக்குறுதி தரக்கூடாது. நம் வாழ்வில் சம்பந்தப்படாத யாரையும் நம்பவும் கூடாது" என்று கதையை முடிக்கிறார் அட்லி.

இந்த கதையை சொல்லியதுமே அரங்கமே அட்லீக்கு கை தட்டுகிறது.. உருவகேலி என்பது நம்முடைய மகாத்மாவுக்கே நடந்தது.. தென்னாப்பிரிக்காவில் ரயிலில் ஏற முற்பட்டபோது, உருவகேலி செய்து கீழே இறக்கிவிட்டார்கள்.

உச்சம்: இதற்கு பிறகு, அதே தென்னாப்பிரிக்காவில் நெல்சன் மண்டேலா சிலைக்கு அருகிலேயே மகாத்மாவுக்கும் சிலை வைக்கப்பட்டுள்ளது. உருவகேலி, நிறவெறியால் அவமானப்படுத்தப்பட்டவர்கள் பலர் பின்னாளில் உச்சத்தை தொட்டிருக்கிறார்கள். அதுபோல அட்லீயும் பயங்கர புத்திசாலி" என்று தெரிவித்துள்ளார் செய்யாறு பாலு.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+