ஏவிஎம் உலக உருண்டை.. தொட்டதெல்லாம் வெற்றி! கோலிவுட்டின் ஹிட் மேன்.. ஏவிஎம் சரவணன் யார் தெரியுமா?
சென்னை: பல வெற்றி படங்களை தயாரித்த ஏவிஎம் சரவணன் வயது மூப்பு காரணமாக இன்று (டிசம்பர் 4 2025ல்) காலமானார். அவருடைய திறை பயணம் மற்றும் ஏவிஎம் சாம்ராஜ்யம் எப்படி உருவானது என்பதை பற்றி இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.
இப்போது உள்ள காலகட்டத்தில் ஒரு சில தயாரிப்பாளர்கள் தாங்கள் தயாரிக்கும் படங்கள் வெற்றி அடைந்து விட்டால் அடுத்த ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் வானத்துக்கும் பூமிக்கும் குதிப்பது போல பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் 80ஸ், 90ஸ் கட்டத்தில் பல ஹிட் படங்களை தயாரித்த ஏவிஎம் சரவணன் எப்போதுமே எளிமையான நபராகத்தான் இருந்திருக்கிறார். அதிலும் எந்த புகைப்படங்களாக இருந்தாலும் சரி பேட்டிகளாக இருந்தாலும் சரி அவர் கைகட்டி அமைதியின் உருவமாக தான் இருந்திருக்கிறார்.

தென்னிந்திய திரைப்பட வரலாற்றில் தவிர்க்க முடியாத பெயர் ஏவிஎம் தான். 90 கிட்ஸ்களின் ஃபேவரைட் படங்களின் முதலில் ஒரு உலக உருண்டையும் அதில் ஏவிஎம் என்ற பெயரும் வரும். அதை பார்க்கும்போதே இந்த படம் நல்லா இருக்கும் என்ற ஒரு மனநிலை ரசிகர்களுக்கு வந்திருக்கிறது. தமிழ் சினிமாவில் ஏவிஎம் நிறுவனம் ஒரு முக்கிய முகவரியாக இருக்கிறது.
அதாவது இந்த நிறுவனத்தின் மூலம் பல இயக்குநர்களும், புது நடிகர்களும் உருவாகி இருக்கிறார்கள். அதோடு புது டெக்னாலஜியும் இவர்களுடைய ஸ்டுடியோவில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ஏ.வி.எம் நிறுவனம் முதல் முதலில் காரைக்குடியில் உள்ள ஏவி அண்ட் சன்ஸ் என்கிற நிறுவனத்தின் மூலமாகத்தான் தன்னுடைய சாம்ராஜ்யத்தை தொடங்கி இருக்கிறது.
அப்போது மளிகை பொருட்கள் தொடங்கி வீட்டுக்கு தேவையான எல்லா பொருள்களும் அங்கு கிடைக்கும் வகையில் தொடங்கி இருக்கிறது. இன்று பல சூப்பர் மார்க்கெட் கண்ணில் படுவது போல அப்போ காரைக்குடியில் அனைத்து மல்லிகை பொருட்களும் இவர்களுடைய கடையில்தான் கிடைத்திருக்கிறது. அப்போதான் அங்கு மக்களுக்கு இசையின் மீது இருக்கும் ஆர்வத்தை உணர்ந்த ஏவி மெய்யப்ப செட்டியார் அந்த பிசினஸில் காலடி எடுத்து வைத்திருக்கிறார்.
சென்னையில் சரஸ்வதி ஸ்டோர்ஸ் என்கிற பெயரில் இசைத்தட்டு தயாரிக்கும் நிறுவனத்தை தொடங்கி அதுவே பிறகு பெரிய அளவில் பெயர் வாங்கி இருக்கிறது. அதற்கு பிறகு தான் இவர்கள் சினிமா படங்கள் தயாரிக்க தொடங்கி இருக்கிறார்கள். மெய்யப்ப செட்டியார் சரஸ்வதி சவுண்ட் ப்ரோடுக்ஷன் என்கிற நிறுவனத்தை 1934 ஆம் ஆண்டு தொடங்கி இருக்கிறார். அந்த நிறுவனத்தின் மூலம் அல்லி அர்ஜுனன் என்கிற திரைப்படத்தை தயாரித்து இருக்கிறார்கள்.
ஆனால் இப்போது இருக்கிற மாதிரி அப்போது டெக்னாலஜி கிடையாது என்பதால் முழு படத்தையும் முடித்துவிட்டு எடிட்டங்கில் பார்த்தபோது அதில் நடித்தவர்கள் சூரிய ஒளி கண்ணில் பட்டதால் கண்ணை மூடிக்கொண்டே நடித்திருக்கிறார்கள். ஆனால் இப்போ இருக்கிற மாதிரி உடனே அதை எடிட் செய்ய முடியாது என்பதால் முழு சூட்டிங் முடித்துவிட்டு தான் இந்த குறையை பார்த்திருக்கிறார்கள். இதனாலே இந்த படம் தோல்வியில் முடிந்திருக்கிறது.
அதற்கு பிறகு அலட்டான நிறுவனம் அதற்கு தகுந்த டெக்னாலஜியை பயன்படுத்த தொடங்கி இருக்கிறது. அதற்கு பிறகு இந்த நிறுவனம் தொடங்கிய படங்கள் எல்லாமே சூப்பர் சூப்பர் ஹிட் என்று தான் சொல்ல வேண்டும். எம்ஜிஆர், ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த் என பல நடிகர்களின் ஹிட் படங்கள் இவர்களுடைய நிறுவனத்தில் தயாரித்ததாக தான் இருக்கிறது. மெய்யப்ப செட்டியாருக்கு பிறகு ஏவிஎம் நிறுவனத்தை கட்டி காத்தவர்தான் ஏவிஎம் சரவணன் தான்.
இந்த நிறுவனத்திற்கு ஏவிஎம் சரவணன் தலைமை வகித்த பிறகு சம்சாரம் அது மின்சாரம், முந்தானை முடிச்சு போன்ற பல ஹிட்டான படங்கள் உருவாகி இருக்கிறது. ரஜினிகாந்தின் முரட்டுக்காளை படத்தில் இருந்து தொடங்கி சிவாஜி தி பாஸ் வரை பல வெற்றி படங்கள் ஏவிஎம் நிறுவனம் தயாரித்தது தான். ரஜினிக்கு இந்த நிறுவனத்தில் பல ஹிட் படங்கள் கிடைத்ததால் இரண்டு வருஷத்துக்கு ஒரு படம் இந்த நிறுவனத்திற்கு பண்ண வேண்டும் என்று ஷெட்யூல் போட்டு வைத்திருந்தாராம்.
இப்படி கோலிவுட்டின் முதுகெலும்பாக இருந்து வந்த ஏவிஎம் நிறுவனத்தின் உரிமையாளர் ஏ வி எம் சரவணன் வயது மூப்பு காரணமாக இன்று 85 வயதில் காலமாகி இருக்கிறார். அவருக்கு ஒரு சில மாதங்களாகவே உடல்நிலை குறைபாடு இருந்த நிலையில் அதற்கான சிகிச்சைகள் எடுத்து வந்த போது சிகிச்சை பலனின்றி அவர் காலமாகி இருக்கிறார். அவருடைய மறைவுக்கு பல திறை பிரபலங்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications