Ayudha ezhuthu serial: நெஞ்சம் மறப்பதில்லை டாக்டர்... ஆயுத எழுத்து கலெக்டர்!
சென்னை: விஜய் டிவியின் சீரியலில் வருவதை மீண்டும் தாய் வீட்டுக்கு வருகிறேன் என்று பெருமையாக சொல்லி இருக்கார் சின்னத்திரை நடிகை சரண்யா.
விஜய் டிவியின் நெஞ்சம் மறப்பதில்லை சீரியல் மூலம் சின்னத்திரை நடிகையாக அறிமுகமான செய்தி வாசிப்பாளர் சரண்யா மீண்டும் விஜய் டிவியின் சீரியலில் நடிக்க உள்ளாராம்.
ரொம்ப நாளைக்குப் பிறகு சரண்யாவுக்கு சன் டிவியின் ரன் சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இப்போது அடுத்து ஒரு தொலைக்காட்சியான விஜய் டிவியிலும் மீண்டும் நடிக்க வாய்ப்பு கிடைத்து உள்ளதாக பெருமையுடன் பேசியுள்ளார் சரண்யா.

ஆயுத எழுத்து சீரியல்
விஜய் டிவியின் ஆயுத எழுத்து சீரியலில் சப் கலெக்டர் இந்திராவாக வேறு ஒரு நடிகை நடித்து வருகிறார். இனி கலெக்டர் இந்திராவாக நான் நடிக்க உள்ளேன் என்றும், நெஞ்சம் மறப்பதில்லை சீரியலில் டாக்டராக நடிச்சு உங்களின் வரவேற்பைப் பெற்றேன். இப்போது ஆயுத எழுத்து சீரியலில் சப் கலெக்டர் இந்திராவாக நடிக்க இருக்கிறேன் என்று கூறியுள்ளார். அதற்கும் உங்கள் ஆதரவு வேண்டும் என்று கேட்டும் இருக்கார் சரண்யா.

நடிகை மவுனிகா கெட்டப்
ஆயுத எழுத்து சீரியலில் நடிகை மவுனிகா கதாபாத்திரத்தின் கெட்டப் பலரையும் ரசிக்க வைத்து இருக்கிறது. கணுக் காலுக்கு மேல்கட்டின புடவை, பெரிய பொட்டு, தலை நிறைய கொண்டை, முந்தானையை சுருட்டி இன்னொரு தோளில் போட்டுக் கொள்வது என்று ரவுடி பெண்மணி காளி அம்மாவாக நடித்து அசத்துகிறார்.

மக்களை முட்டாளாக்குவது
கதை மட்டும் கொஞ்சம் மக்களை முட்டாளாக்குவது போல அமைந்து இருப்பதை இனியாவது இயக்குநர், கதாசிரியர் திருத்திக் கொள்ளலாம். சப் கலெக்டர் இந்திராவுக்கு காளி அம்மாவின் மகன்தான் சக்தி என்று இன்னமும் தெரியாதது போலவும், அவன் படிக்காதவன் என்று கூட அறியாதது போலவும் கதையை கொண்டு செல்வது நம்பும்படி இல்லை..

இந்திராவுக்கும் சக்திக்கும்
இந்திராவுக்கும் சக்திக்கும் காளி அம்மாளுக்கு தெரியாமல் கல்யாணம் நடக்க இருக்கிறது. அத்தனை பெரிய ரவுடி காளி அம்மாவுக்கு தனது மகன் சக்தியுடன்தான் சப் கலெக்டர் இந்திராவுக்கு கல்யாணம் நடக்க உள்ளது என்று தெரியவில்லை. அது மட்டுமா கூடவே சுற்றும் இரு மகன்களுக்கும் கூட தெரியவில்லை. இதெல்லாம் சீரியலின் மைனஸ். இதை முக்கிய கதையாக நகர்த்துவது மக்களை முட்டாளாக்குவது போல இருக்கிறது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications