அய்யனார் துணை அப்டேட்: வீட்டை விட்டு போறேன், அதிர்ச்சி கொடுத்த நிலா.. ஒரு வார்த்தையால் உடைந்த சோழன் குடும்பம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் (Ayyanar Thunai serial today episode) அய்யனார் துணை சீரியலில் 2026 பிப்ரவரி 26 ஆம் தேதிக்கான எபிசோடில், ராகவ் அனுப்பிய மெசேஜ்க்கு தன்னிடம் கேட்காமலேயே சோழன் அசிங்கமாக ரிப்ளை பண்ணியது குறித்து நிலா சண்டை போடுகிறார். கடைசியில் யாரும் எதிர்பார்க்காத முடிவை எடுத்திருக்கிறார். என்ன நடந்தது என்று பார்க்கலாம்.

அய்யனார் துணை சீரியலில் நேற்றைய எபிசோடில், பொங்கல் கொண்டாட்டத்துக்கு பிறகு வானதி பாண்டியனிடம் நேராக கல்யாணம் பற்றி பேசுகிறார். "நம்ம இருவரும் கல்யாணம் பண்ணிக்கலாம்... இன்றே எங்க வீட்டுக்கு வந்து பெண் கேளுங்க" என்று சொல்கிறார். ஆனால் பாண்டியன் தயக்கமாக இருக்கிறார். "கல்யாணம் பண்ணிக்கிட்டா தங்க தனி ரூம் கூட இல்ல, அதான் யோசிக்கிறேன்" என்று சொல்கிறார். உடனே வானதி, "உங்க நிலா அண்ணியை வெளியே அனுப்பிட்டு அந்த ரூமை நம்ம எடுத்துக்கலாம்" என்று சொல்லி விடுகிறார். இதனால் பாண்டியன் அதிர்ச்சி அடைகிறார்.

Ayyanar Thunai serial Vijay TV Serial Tamil Serial

அய்யனார் துணை சீரியல் இன்றைய எபிசோட்

இந்த நிலையில் இன்றைய எபிசோடில், சேரனிடம் வந்த வானதி வீட்டில் கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லிட்டாங்க என்றும் இன்னைக்கி சாயங்காலம் வீட்டுக்கு பேச வாங்க என்றும் சொல்கிறார். பிறகு கடையில் சோகமாக உட்கார்ந்திருக்கும் பாண்டியனை பார்க்க வந்து, "இன்னைக்கு ஈவினிங் நான் உன்ன சர்ப்ரைஸ் பண்ணப்போறேன், நீயும் என்ன சர்ப்ரைஸ் பண்ணு" என்று சொல்லி கிளம்பும் போது அவருக்கு கிஸ் கொடுத்து செல்கிறார்.

ஒளிந்து கொண்ட பல்லவன்

மறுபக்கம் பல்லவன் கல்லூரியை கட் அடிச்சிட்டு தனது காதலி காயத்ரியுடன் சினிமாவுக்கு போகிறார். அந்த நேரம் சோழன் அந்த வழியாக வருகிறார். காயத்ரி பார்த்து சொல்ல, பல்லவன் அவளை ஒரு இடத்தில் ஒளிக்கிறார். "உங்க அண்ணனை பார்த்து பயமா?" என்று அவள் கேட்க, "பயம் இல்ல... இப்போவே போய் இதுதான் என் லவ்வர் என்று சொல்லிடுவேன். ஆனா உனக்கும் என் அண்ணனுக்கும் ஆகாது, அதான் உன்னை தனியா அழைச்சிட்டு வந்தேன்" என்று சொல்லுகிறார்.

நிலா சோழன் வாக்குவாதம்

அடுத்த சீனில் நிலா வீட்டுக்கு வருகிறார். அப்போது சோழன் பாண்டியனுக்கு பெண் பார்க்க போக ரெடி ஆகிக்கொண்டிருக்கிறார். நிலா அவரை ரூமுக்குள் இழுத்து கொண்டு போய் கடுமையாக திட்டுகிறார். நிலாவின் போனில் இருந்து ராகவ்வை திட்டி மெசேஜ் அனுப்பியது சோழன் தான் என்று தெரிந்துவிட்டது. அதனால் எதற்காக இப்படி பண்ணுனீங்க என்று திட்டிக் கொண்டிருக்கிறார். அதற்கு சோழன் ராகவ் அனுப்பிய மெசேஜ் பற்றி சொன்னாலும் நிலா அவன் என்ன வேணாலும் அனுப்பட்டும் நீங்க எப்படி என் ஃபோனில் இருந்து மெசேஜ் பண்ணுவீங்க என்று திட்டிக் கொண்டே இருக்கிறார்.

டைவர்ஸ் முடிவில் நிலா

நிலா கத்தி பேசுவதை கேட்டு பதறிப்போன சேரன் என்னாச்சு என்று கேட்க, நடந்ததை முழுக்க சொல்லிவிடுகிறார். அதோடு, "முதல்ல பாண்டியனுக்கு கல்யாணம் நடக்கட்டும்... அடுத்தது உங்களுக்கும் சந்தாவுக்கும் கல்யாணம் நடக்கட்டும்... அது முடிந்ததும் நான் இந்த வீட்டுக்கு ஒரு கும்பிடு போட்டுட்டு, சோழனுக்கு டைவர்ஸ் கொடுத்து போயிடுறேன்" என்று நேராக சொல்லிவிடுகிறார். இதைக் கேட்ட சோழன் மனமுடைந்து நிற்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+