சன் டிவியில் ரீ என்ட்ரி கொடுக்கும் அஸீம்.. ஆனால் இந்த சீரியலிலா.. ரசிகர்கள் கோரிக்கை!
சென்னை: சன் டிவி சீரியலில் புதியதாக களமிறங்கியிருக்கிறார் அஸீம். ஆனால் அந்தக் கேரக்டர் மட்டும் உங்களுக்கு செட் ஆகாது வேற ட்ரை பண்ணலாமே என்று ரசிகர்கள் கெஞ்ச ஆரம்பித்துள்ளனர்.
சீரியல் வாய்ப்பு இல்லை என்பதற்காக மீண்டும் இப்படி ஒரு என்ட்ரியா என்றும் ரசிகர்கள் கேட்டு வருகிறார்கள்.
சன் டிவியில் சீரியல் பொதுவாகவே நெடும் தொடராகத்தான் ஒளிபரப்பப்பட்டு வரும். அதுவும் இரவு நேர சீரியல்கள் என்றாலே அது பல வருடங்களையும் தாண்டி சென்று கொண்டிருக்கும் .

ஜவ்வு இழு இழுப்பாங்களே
எடுத்துக்காட்டாக நாதஸ்வரம் தெய்வமகள் அப்படி பல சீரியல்களை சொல்லலாம் .ஆனால் தற்போது ஒளிபரப்பப்பட்டு வரும் பூவே உனக்காக சீரியல் புது கதையாக ஒளிபரப்பப்படுகிறது என அறிமுகமாகி என்னடா இப்படி ஒரு கதையா என ரசிகர்கள் புலம்பும் வகையில் இரண்டு நடிகைக்கு ஒரு காதலன் என சவ்வு போல இழுத்துக் கொண்டிருக்கிறது.

அருண் இடத்தில் அஸீம்
பொதுவாக சன்டிவியில் அதிகமான சீரியல்களில் கதாநாயகனுக்கு இரண்டு மனைவிகள் வைத்துதான் கதை எடுக்கின்றனர் அதைப் போலத்தான் இந்த சீரியலும் இருக்கிறது. இந்த சீரியலில் இதுவரைக்கும் நடித்துக்கொண்டிருந்த அருண் இந்த சீரியலில் இருந்து விலகியதும் அந்த கேரக்டரில் அஸீம் களமிறங்கியிருக்கிறார் .

அது ஓகே
இதற்கு முன்பு இவர் பகல் நிலவு, கடைக்குட்டி சிங்கம் உள்ளிட்ட விஜய் டிவி சீரியல்களில் நடித்துக் கொண்டிருந்தார். விஜய் டிவியில் நடித்துக் கொண்டிருந்தவர் சன் டிவியில் தற்போது களமிறங்கும் போது அவருடைய ரசிகர்கள் சந்தோஷமடைந்து இவரை வரவேற்றாலும் இவர் இந்த பூவே உனக்காக சீரியலில் அருண் கேரக்டரில் நடிக்கிறார் என்று சொன்னதும் இந்த கேரக்டர் உங்களுக்கு கொஞ்சம் கூட செட்டாகாது என இவருக்காக கமெண்ட் போட்டு வருகின்றனர் .

2 ஹீரோயின் ஒரு ஹீரோ
அப்படி என்னதான் அந்த கேரக்டரில் இருக்கிறது என பார்த்தால் இரண்டு கதாநாயகி இவர்தான் கதாநாயகன் கதாநாயகிகள் இரண்டு பேரும் நண்பர்கள். இவர்கள் ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுக்காமல் ஒருவர் மேல் ஒருவர் பாசத்தைப் பொழிந்து உயிரையே வைத்திருக்கின்றனர் .ஆனால் இருவரும் இவரை காதலிக்கின்றனர் .ஒருவருக்கு ஒருவர் தெரியாமல் இருவரும் ஒருவரையே காதலிக்கின்றனர் .

கதிரும் கீர்த்தியும்
அது திருமணம் வரைக்கும் தெரியாமல் இருந்து பூவரசி கதிரை திருமணம் செய்து முதலிரவில் தான் இதற்கு முன்பு கீர்த்தியும் கதிரும் காதலித்து இருக்கிறார்கள் என்பதை அறிந்ததும் இவர்களின் வாழ்க்கையில் இருந்து பிரிந்து விட வேண்டும் என நினைத்து கீர்த்தியும் பூவரசியின் மாத்தி மாத்தி தியாகம் பண்ணிக்கிறார்கள் என இவர்கள் செய்யும் அக்கப்போரு ஒரு பக்கம்.

கதிரின் கதை
மறுபக்கம் ஹீரோவாக இருந்த கதிர் பூவரசி குடும்பத்தையே தற்போது கொலை செய்ய திட்டமிட்டு சீரியல் ஏதோ ஒரு பாதையில் போய்க் கொண்டிருக்கிறது. சீரியலின் கதை ஒரு கோணத்தில் தொடங்கி தற்போது மறு கோணத்தில் சென்று கொண்டிருக்கும் நேரத்தில் ஹீரோவாக அஸீம் என்ரி கொடுத்திருப்பது அவருடைய ரசிகர்கள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது .

பொறுத்துப் பார்ப்போம்
ஆனால் தற்போது அவர் நடித்த காட்சிகள் ஒளிபரப்ப தொடங்கியிருந்தாலும் பொறுத்திருந்து பார்த்தால்தான் தெரியும் சீரியலில் இவருடைய நடிப்பு எந்த லெவலல் இருக்கிறது என்று .இதற்கு முன்பு இவர் நடித்த பகல் நிலவு சீரியல் மூலமாக பலருடைய மனதிலும் இடத்தை பிடித்திருந்தார் தற்போது என்ன நிலைமை என்பது இனிதான் தெரியும்.
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்?












Click it and Unblock the Notifications