அழகே அழகு அப்டேட்: சுரேஷ் குடும்பத்திடம் கேள்வி மேல் கேள்வி கேட்டு அதிர வைத்த மதி! இது பலருக்கு பாடம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அழகே அழகு சீரியலில் 2026 ஏப்ரல் ஆறாம் தேதி முதல் 11ஆம் தேதி வரைக்குமான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் அழகுமதி திருமணம் செய்து வந்த சுரேஷ் குடும்பத்தினர் அதிகமான கட்டுப்பாடுகள் விதிக்க, அதனால் கடுப்பான அழகுமதி அவர்களிடம் கேள்வி மேல் கேள்வி கேட்கிறார். இதனால் எதிர்பாராத சம்பவம் நடைபெறுகிறது. அது பற்றி பார்க்கலாம்.

அழகே அழகு சீரியல் கதை
அழகே அழகு சீரியலில் பல சீரியல்களை போலவே இந்த சீரியலிலும் ஹீரோயினிக்கும் ஹீரோவுக்கும் விருப்பமே இல்லாமல் கட்டாய திருமணம் நடைபெறுகிறது. இதில் அழகுமதி காலேஜ் ப்ரொபஷனாக இருக்கும் நிலையில் அவர் எந்த பிரச்சனை நடந்தாலும் அதை தைரியமாக தட்டி கேட்கிறார். ஆனால் ஹீரோ சுரேஷ் அழகுமதி ஸ்டுடென்ட்டை அடித்து விட்டதால் அதற்காக மதி போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுத்திருந்தார்.
அதனால் சுரேஷ் உடைய வேலை போய் விடுகிறது. இதனால் சுரேஷின் கல்யாணம் நின்று போய்விட்டது. இதனால் கடுப்பான சுரேஷ் மாமா சுரேஷுக்கும் அழகு மதிக்கும் கல்யாணத்தை நடத்தி வைத்திருக்கிறார். சுரேஷின்மாமாவிடம் தான் அழகுமதியின் அப்பா வேலை பார்க்கிறார். இதனால் அவர் மிரட்டியதால் வேறு வழி இல்லாமல் அழகுமதியை சுரேஷுக்கு குடும்பத்தினர் கல்யாணம் பண்ணி வைத்திருந்தனர்.
கட்டாய திருமணம்
ஆனாலும் சுரேஷ் வீட்டிற்கு வந்த பிறகு அங்கிருக்கும் அழகு மலரை மட்டும்தான் மதிக்கு பிடித்திருக்கிறது. மாமனாரும் மாமியாரும் இது பாரம்பரியமான குடும்பம் பெண்கள் அடிமையாக இருக்க வேண்டும் என்றெல்லாம் கிளாஸ் எடுத்துக் கொண்டிருக்கிறார். இதை ஆரம்பத்தில் இருந்தே பொறுத்துக் கொள்ள முடியாமல் இருக்கும் மதி இந்த வார ப்ரோமோவில் பொங்கி எழுந்திருக்கிறார்.
அழகே அழகு சீரியல் ப்ரோமோ
அதாவது இந்த ப்ரோமோவில் மதி காலையில் ஜாக்கிங் போயிட்டு வருகிறார். அதை பார்த்து கடுப்பான மதியுடைய மாமனார் வீட்டிற்கு வந்ததும் பொம்பள புள்ள இப்படியா ரோட்டில் ஒரு பொம்பள புள்ள இப்படியா ஓடிக்கிட்டு அழைகிறது? இத பாக்குறவங்க தப்பா பேச மாட்டாங்களா? என்று கேட்க, அதற்கு மதி இதுல என்ன இருக்குது? உடம்பு ஆரோக்கியத்துக்காக நாம ஓடுறதை அடுத்தவங்க எப்படி தப்பா சொல்ல முடியும் என்று கேள்வி கேட்கிறார்.
இதனால் கடுப்பான சுரேஷ் மதியிடம் வந்து பெரியவங்க என்ன சொன்னாலும் கேள்வி கேட்காமல் கேட்கணும் என்று அதட்ட, அதற்கு மதி நாளைக்கு இவங்க நான் வேலைக்கு போக கூடாதுசொன்னான்னா சொன்னா அதையும் நான் கேட்கணுமா என்று இரண்டாவது கேள்வி கேட்கிறார். அடுத்ததாக கிச்சனில் மலர் வேலை செய்து கொண்டிருக்கும் போது மதியிடம் முட்டை அடுப்பில் வேகவத்து விடு என்று சொல்ல, மதி எத்தனை முட்டை அடுப்பில் வைக்க வேண்டும் என்று கேட்கிறார்.
அடுத்த வாரம் சீரியல் சம்பவம்
அதற்கு மலர் பத்து முட்டை வைக்க வேண்டும் என்று சொல்கிறார். அப்போ உங்களுக்கு முட்டை வேண்டாமா? என்று மதி கேட்க, அதற்கு அவருடைய மாமியார் மலர் வீட்டில் சும்மாதானே இருக்கிறா? அவ சாப்பிடலன்னா ஒன்னும் ஆகிடாது என்று சொல்ல, அதற்கு மதி இந்த வீட்ல அதிகமா வேலை பார்க்கிறது அவங்கதான் அவங்க நல்லா இருந்தா தானே இந்த குடும்பம் நல்லா இருக்கும் என்று பதிலடி கொடுக்கிறார். இதனால் அடுத்த வாரம் இந்த குடும்பத்திற்குள் மதியால் தான் அனைவருக்கும் பிரச்சனை வரப்போகிறது என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications