Azhagu Serial: குழந்தை கடத்தலை பெரிய விஷயமாக்கி காமிப்பீங்களா?
சென்னை: சன் டிவியின் அழகு சீரியலில் பூர்ணா தனது தோழியுடன் சேர்ந்து செய்யக் கூடாத பல தப்புக்களையும் செய்கிறாள்.பூர்ணாவுக்கு அழகம்மை குடும்பம் சிதறணும்., இந்த குறிக்கோளுடன் செயல்படுகிறாள்.
சுதாவுக்கு பல விதத்திலும் கஷ்டம் கொடுத்து, அவளை வீட்டை விட்டு விரட்டி அடிப்பேன். அழகம்மை குடும்பத்தை பிரிச்சு,தனித் தனியாக ஒவ்வொருத்தரையும் கதற கதற அழ வைப்பேன்.
இதுதான் பூர்ணாவின் சபதம். இதில் குழந்தையை கடத்தும் சம்பவத்திலும் பூர்ணா ஈடுபட்டு உள்ளதால். குழந்தை கடத்தல் சீரியஸை உணர்ந்து காட்சியை காண்பிப்பார்களா என்று ஆவல் எழுந்துள்ளது.

பூர்ணா ரவி அத்தான்
அழகம்மை அத்தையின் மூத்த மகன் ரவி அத்தானுக்கு தான்தான் மனைவியாக வேண்டும் என்கிற கனவில் வாழ்ந்தவள் பூர்ணா.அத்தை வசந்தாவின் பெண் பூர்ணாவிடமும் இரு குடும்பமும் இதை சொல்லியே வளர்த்திருக்கிறது. ஆனால், காலத்தின் கோலத்தால் நண்பன் விபத்தில் இறந்துவிட, அவனின் மனைவி சுதாவுக்கு வாழ்க்கை கொடுக்க நேரிடுகிறது ரவிக்கு.

பூர்ணா சுதா
தான் விரும்பிய ரவி அத்தானை சுதா கல்யாணம் செய்துகொண்டாள் என்று கோபம். அவளை இந்த வீட்டை விட்டு துரத்த வேண்டும் என்று பூர்ணா நினைக்கும்போது, சுதாவை குடும்பமே தூக்கி வைத்து கொண்டாடுவது என்று எல்லாம் பூர்ணாவுக்கு பிடிக்காத மாதிரியே நடக்க..இன்னும் இன்னுமென்று சுதாவுக்கு கெடுதல் செய்கிறாள் பூர்ணா.

ரவியை கிராமத்தில்
ரவி சுதாவிடம் இருந்து பிரிந்து இருக்க வேண்டும் என்று ஜோதிடரிடம் பொய் சொல்ல வச்சு, அவனை பிரிச்சு கிராமத்துக்கு போக வைக்கிறாள்.அங்கு அவனை மன ரீதியாக துன்புறுத்தும் விதமாக பேய் என்று பயம் காண்பிக்க ஏற்பாடு செய்கிறாள். இதில் கையும் களவுமாக மாட்டிய பின்னரும், சுதா அவளை மன்னித்துவிட பூர்ணா திருந்தியதாகத் தெரியவில்லை.

குழந்தை கடத்தல்
இப்போது சுதாவின் முதல் புருஷன் தம்பி பாஸ்கருடன் சேர்ந்து கொண்டு, சுதாவின் குழந்தை அப்புவை கடத்த சொல்கிறாள். அவனும் செய்து இப்போது போலீசில் மாட்டி, பூர்ணாவையும் போட்டுக் கொடுத்துடறான். குழந்தை கடத்தல் என்பதை ஒரு வில்லியின் கையில் கொடுத்து செய்ய சொல்லி இருக்கிறது கதைக்குழு. இது எத்தனை பெரிய தவறு என்பதை சுட்டிக் காட்டும்படி கதை நகருமா என்பதே முக்கிய கேள்வி.












Click it and Unblock the Notifications