Azhagu serial: அச்சச்சோ குழந்தை போச்சே... பூர்ணா இன்னும் திருந்தலையா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியின் அழகு சீரியல் ரொம்ப வன்மத்தோட ஒளிபரப்பாகிட்டு வருது. அழகம்மை குடும்பத்தை ஒழிச்சு கட்டிடணும்னு அழகம்மை வீட்டுக்குள் திருந்தினவள் மாதிரி மன்னிப்பு கேட்டுட்டு வருகிறாள் பூர்ணா.

இவர்களும் பூர்ணா திருந்திட்டதா நம்பிடறாங்க. முதலில் தம்பி மதனையும், அவன் காதலித்து மணந்துகொண்ட காவ்யாவையும் தனது அம்மா பாப்புலர் லாயர் சகுந்தலா தேவி வீட்டுக்கு அனுப்பி வச்சுடறா.

இந்த திட்டத்தோடுதான் பூர்ணா வந்திருக்கான்னு தெரிஞ்சுக்கிட்ட அழகம்மையின் மூத்த மருமகள் சுதா பூர்ணா அழகம்மை குடும்பத்தை சிதைக்க வந்திருக்கான்னு தெரிஞ்சுக்கிட்டு, இதை முறியடிப்பேன்னு சபதம் போடறா.

ஜோதிடத்தை நம்பி

ஜோதிடத்தை நம்பி

முதலில் ஜோதிடரை வைத்து பொய்யாக தோஷம் இருப்பதாக சொல்ல சொல்கிறாள். அதனால், ரவியும், சுதாவும் பிரிந்து இருக்க வேண்டும் என்று ஜோதிடரை வைத்து சொல்ல வைக்கிறாள். ரவியை கிராமத்து வீட்டுக்கு அப்பா பழனிச்சாமி அழைத்துப் போக, அங்கு பேய் ஓட்டுவதை ரவி பார்த்துவிட்டு, கோணாண்டியை திட்டறான். மன நிலை சரியில்லாதவங்களை ஆஸ்பத்திரியில் காண்பிக்காமல் இப்படி செய்கிறீர்களே என்று.

அடுத்து ரவிக்கு

அடுத்து ரவிக்கு

அடுத்த டார்கெட் ரவி என்று வைத்து, அங்குள்ள ஆட்களை ரவி உன் உடம்பை குடு, நான் சுரேந்தர் பேசறேன்... நீ உடம்பை கொடுத்தால்தான் நான் சுதா கூட வாழ முடியும்.என் அப்புவை கொஞ்ச முடியும்னு சுதாவின் முதல் புருஷன் போல வந்து பேசறாங்க. இதனால் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகிறான் ரவி.எப்போதும், யாரோ வந்து ரவி உன் உடம்பை குடுன்னு கேட்க, உண்மையில் மன நோய் ஆஸ்பத்திரியின் மொட்டை மாடியில் இருந்து கீழே விழும் அளவுக்கு போயிடறான்.

சங்கர் டிடெக்டிவ்

சங்கர் டிடெக்டிவ்

டிடெக்டிவ் சங்கர் உண்மையில் இந்த காரியத்தை செய்ய வைத்தது பூர்ணாதான் என்று கண்டு பிடித்து, சுதாவிடம் ஆதாரத்தை காண்பிக்க, சுதா பூர்ணாவுக்கு அதே மன உளைச்சலை கொடுக்க ஆயத்தமாகிறாள்.கிராமத்தில் இருந்து வந்த அலமேலு, ரவியை மிரட்டியதற்கு பணம் வேண்டும் என்று கேட்க,10 லட்சம் பணம் எல்லாம் தர முடியாது என்று பூர்ணா கூற கைகலப்பு நிகழ்ந்து விடுகிறது.

கொலை அலமேலு

கொலை அலமேலு

இந்த கைகலப்பில் அலமேலுவை பூர்ணா பிடித்து கீழே தள்ளிவிட, அலமேலு இறந்துடறாங்க. அவங்களை ஏரியில் கொண்டு போயி பூர்ணாவும், அவளது தோழி சுவாதியும் போட்டுடறாங்க.இந்த வீடியோவை வைத்து டிடெக்டிவ் சங்கர் மிரட்ட, பூர்ணா பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகிறாள். கடைசியில் போலீசும் அரெஸ்ட் செய்ய வந்துட, காலில் விழுந்து கதறி அழறா பூர்ணா.

போயும் பூர்ணா

போயும் பூர்ணா

அப்போது கை தட்டிக்கொண்டு வந்த சுதா, இப்படித்தான் என் புருஷன் மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பார்.இந்த ஆதாரத்தை காமிச்சு உன்னை என்ன எல்லாம் பண்ணி இருக்கலாம் .உன் வயித்துல வளரும் குழந்தைக்காகத்தான் விட்டு வச்சேன்னு சொல்றா சுதா.இருந்தாலும் மன்னிச்சு விட்டுட்டுப் போக .இன்னமும் வஞ்சம் தீராத பூர்ணா காரை வேகமாக ஓட்டிப்போக,வயித்தில் அடிபட்டு குழந்தை கலைஞ்சு போச்சு.

குழந்தை கலைஞ்சு போயும் பூர்ணா இன்னும் திருந்தலை. இப்படியும் சில பெண்கள்!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+