Azhagu Serial: பூர்ணாவுக்கு பதில் புருஷன் மாட்டிக்கிட்டானே!
சென்னை: சன் டிவியின் அழகு சீரியலில் அழகம்மையாக நடிக்கும் ரேவதி நடிப்பு செம கியூட். இவருக்காக அழகு சீரியலை பார்ப்பவர்கள் ஏராளம்.
ஒரு குருவிக்கூடு போல அழகம்மை கணவர் பழனிச்சாமி வாத்தியாருடன் சேர்ந்து, தனது குடும்பத்தை மிக ஒற்றுமையாக கட்டமைக்கிறார். பூர்ணாவுக்கு என்று வளர்ந்த இவங்க முதல் பையன் ரவி. தனது நண்பன் இறந்துவிட, அவனின் மனைவியை கல்யாணம் செய்துகொண்டு வந்தவுடன் பிரச்சனை ஆரம்பிக்கிறது.
பூர்ணாவை உடனடியாக ரவியின் தம்பி மகேஷுக்கு கல்யாணம் செய்து வச்சுடறாங்க. அப்போது பூர்ணாவுக்குள் ஏற்பட்ட ஏமாற்றம், இப்போது பூதாகரமாகி பழி வாங்கிக்கொண்டே இருக்கிறாள்.

சுதா பூர்ணா
பூர்ணாவுக்கு ரவி அத்தான் கல்யாணம் செய்துகொண்டு வந்த சுதாவை வீட்டை விட்டு வெளியில் துரத்திட வேண்டும் என்று எண்ணம். அதற்காக வேலைகள் செய்துகொண்டு இருந்தபோதுதான் பூர்ணா, வசந்தாவின் சொந்த பெண் கிடையாது. குப்பைத் தொட்டியில் எடுத்து வளர்த்த குழந்தைன்னு தெரிய வருது. அம்மாவைத் தேடினால், பிரபல வக்கீல் சகுந்தலா தேவிதான் பூர்ணாவின் அம்மான்னு தெரிஞ்சு இன்னும் திமிர் வந்துருது பூர்ணாவுக்கு.

மதன் காவ்யா
மதன் பூர்ணாவின் தம்பி, அதாவது சகுந்தலா தேவியின் மகன்.இவன் அழகம்மையின் மகள் காவ்யாவை காதலிச்சு கல்யாணம் செய்துக்கறான், சகுந்தலா தேவியை எதிர்த்து. இப்படி பூர்ணா பழிவாங்க இன்னும் கடமை கூடி போகுது. அழகம்மை குடும்பத்தை சீர்குலைத்து, குடும்பத்தில் உள்ளவர்களை தனித்தனியாக பிரித்து அவர்களை அழ வைக்க வேண்டும்.

படிப்பு காவ்யா
காவ்யா டாக்டருக்கு எக்ஸாம் எழுத அவள் கோச்சிங் கிளாசுக்கு போக கூடாது என்று சகுந்தலா தேவி பார்த்துக்கறாங்க. இப்படி நினைச்சது நடக்க, கடைசியில் சுதாவின் குழந்தை அப்புவை, சுதாவின் கொழுந்தனார் பாஸ்கருடன் சேர்ந்து கடத்தி விடுகிறாள். அவன் போலீசில் மாட்டியதும் பூர்ணாவையும் போட்டுக் கொடுத்துவிட பூர்ணா தப்பிச்சுக்கறா.

சும்மா விடமாட்டேன்
குழந்தை கடத்தல் கேஸ் என்றால் சாதாரணம் அல்ல, என்பதை உணர வைக்கும் படி,பூர்ணா இல்லை என்று அவளின் புருஷன் மகேஷை கைது செய்து அழைச்சுட்டு வந்திருக்காங்க. போலீஸ் தேடும் நிலையில் கூட, பூர்ணா சுதா உன்னை சும்மா விடமாட்டேன்டின்னு சொல்லி பல்லை கடிப்பது வேடிக்கையாக இருக்கிறது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications