வீட்டிற்கு வந்த கணேசன் சொன்ன வார்த்தை.. கடும் கோபத்தில் பாக்கியா உடையப்போகும்.. எதிர்பாராத முடிவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலின் அக்டோபர் 11ஆம் தேதிக்கான எபிசோடு வெளியாகி இருக்கிறது.

அதில் அமிர்தாவை தேடி பாக்கியாவின் வீட்டிற்கு வந்த கணேஷிடம் பாக்யா யார் என்று விசாரிக்க கணேசன் அங்கிருந்து ஓடி போகிறார்.

Baakiyalakshmi Serial 10th of October 2023 promo and episode full update

அதைத் தொடர்ந்து செழியனுக்கு மாலினியால் புது பிரச்சனை வர அந்த நேரத்தில் பாக்கியா கடும் கோபத்தில் செழியனை திட்டுகிறார். இந்த நிலையில் என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.

அந்த வகையில் இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் பாக்கியாவின் வீட்டிற்கு அமிர்தாவை தேடி வந்த கணேசன் வீட்டிற்குள் எழில், அமிர்தா மற்றும் நிலா இருக்கும் புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சி ஆகி நிற்கிறார். அதே நேரத்தில் வீட்டிற்குள் அமிர்தா குழந்தைக்கு சாப்பாடு ஊட்டி கொண்டு இருக்கிறார். ஆனால் அமிர்தா வெளியே நிற்கும் கணேசனை பார்க்காமல் வீட்டிற்குள் சென்று விடுகிறார்.

Baakiyalakshmi Serial 10th of October 2023 promo and episode full update

அந்த நேரத்தில் கடைக்கு போயிட்டு திரும்ப வந்த பாக்கியா அங்கு நின்று கொண்டிருந்த கணேசனை பார்த்து, நீ யாருப்பா எழிலோட பிரண்டா? அவனை கூப்பிடவா என்று எழில்.. எழில்.. என்று கூப்பிட்டுக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் கணேசன் அங்கிருந்து சமாளித்தபடியே வெளியே ஓடிப் போகிறார். பாக்கியா பின்னாடியே வந்து நில்லுப்பா நில்லுப்பா என்று சொல்ல, கணேசன் வேகமாக ஓடி விடுகிறார். அது தொடர்ந்து பீச்சுக்கு வந்த கணேசன் அமிர்தா எழிலோடு இருக்கும் போட்டோவை நினைத்து நினைத்து பார்த்து கண் கலங்கி அழுகிறார்.

அப்போது கணேசனின் அப்பா கணேசனுக்கு போன் செய்ய, கணேசன் கோபத்தில் அவரிடம் சண்டை இடுகிறார். என்கிட்ட எல்லாத்தையும் மறைச்சிட்டீங்கல்ல, அமிர்தாவுக்கு இன்னொருத்தரோட நீங்க தான் கல்யாணம் பண்ணி வச்சிருக்கீங்க என்று கோபமாக பேசி, நான் வீட்டிற்கு அமிர்தாவுடன் தான் வருவேன் என்று சொல்ல, அவர்கள் அமிர்தாவை டிஸ்டர்ப் பண்ண வேண்டாம் நீ அமிர்தா வீட்டுக்கு போகாத என்று சொல்லிப் பார்க்க அதற்கு முடியாது என்று கணேசன் போனை கட் பண்ணி விடுகிறார்.

Baakiyalakshmi Serial 10th of October 2023 promo and episode full update

இதனால் கணேஷனின் அம்மாவும் அப்பாவும் சென்னைக்கு கிளம்புகின்றனர். அதைத்தொடர்ந்து வீட்டில் கோபமாக இருக்கும் மாலினி அங்கிருக்கும் பொருட்களை எல்லாம் எடுத்து போட்டு உடைத்து செழியனுக்கு சில போட்டோக்களை அனுப்பி நீ இப்ப வரலைன்னா நான் உங்க வீட்டுக்கு வந்து இந்த போட்டோக்களை காட்டுவேன் என்று மிரட்ட செழியன் என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கிறார்.

பிறகு வேறு வழியில்லாமல் ஜெனி தூங்கியதும் செழியன் எழுந்து மாலினி வீட்டிற்கு போவதற்காக முயற்சி செய்து வெளியே வர, அப்போது பாக்கியா எதிரே வந்து நின்று அதிர்ச்சி கொடுக்கிறார். எங்கே போகிறாய் என்று செழியனிடம் கேட்டு செழியன் ஆபீசுக்கு என்று சொல்ல, பொய் சொல்லாத நீ ஒழுங்கா மேல போயிரு. வெளியே எங்கேயும் போகக்கூடாது என்று சொல்லி மிரட்ட செழியன் மேலே போய்விடுகிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+