எழில் சொன்ன உண்மையை கேட்டு கதறி அழுத ஈஸ்வரி..ராதிகாவிற்காக கோபி எடுத்த முடிவு.. தவிக்கும் குடும்பம்
சென்னை: ராதிகா வீட்டை விட்டு கிளம்ப போவதை தடுப்பதற்காக கோபி காலில் விழுந்து கெஞ்சுவதை பார்த்து கோபியின் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைகின்றனர்.
ஏற்கனவே குடித்துவிட்டு நடுத்தெருவில் விழுந்து கிடந்த உண்மையை எழில் ஈஸ்வரியிடம் கூறுகிறார்.
ராதிகாவிற்கு எதிராக ஈஸ்வரி புது முடிவு எடுக்கிறார்.

நடுத்தெருவில் காலில் விழுந்த கோபி: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் மார்ச் 10 ஆம் தேதிக்கான எபிசோட் ஆரம்பத்தில் ராதிகா காரில் மயூவோடு ஏறப்போகும் போது கோபி கெஞ்சி கொண்டிருக்கிறார். அதற்கு ராதிகா மனம் இறங்காத நிலையில் கடைசியில் காலில் விழுந்து கெஞ்ச, ராதிகா கையில் இருந்த பேக் கீழே விழுகிறது. அதை கோபி எடுக்க குனிந்து திரும்பி பார்க்கும் போது அங்கே கோபியின் மொத்த குடும்பமும் நிற்பதை பார்த்து விடுகிறார்.

போட்டுக் கொடுத்த எழில்: ஏற்கனவே கோபியின் செயலை பார்த்து மொத்த குடும்பமும் அதிர்ச்சியாக இருக்கும் நிலையில், தன்னுடைய குடும்பத்தை பார்த்து கோபி அதிர்ச்சி ஆகி என்னுடைய மானமே போகிறது. வீட்டிற்கு வந்து விடு என்று ராதிகாவை கெஞ்சி கூத்தாடி வீட்டிற்கு கூட்டிக்கொண்டு போகிறார்.பிறகு வீட்டிற்கு வந்த ஈஸ்வரி கோபியின் நிலைமையை பார்த்து கண்ணீர் விட்டு அழுது கொண்டிருக்க எழில் இதுக்கே இப்படி ஃபீல் பண்ணி அழுதீங்களே பாட்டி நேத்து என்ன நடந்தது தெரியுமா? என்று கேட்டு நேற்று இரவு குடித்துவிட்டு போதையில் கோபி கீழே விழுந்து கிடந்ததை சொல்ல இன்னும் அதிர்ச்சி அடைகின்றனர்.
மன்னிக்காத ராதிகா: அடுத்து கோபி ராதிகாவை வீட்டிற்கு அழைத்து சென்று, இனிமே இந்த மாதிரி தப்பு பண்ண மாட்டேன் என்று கெஞ்சி கொண்டிருக்கிறார். ராதிகா அதை நம்ப மறுக்கிறார். கோபி உன் கால்ல விழுந்து மன்னிப்பு கேட்கிறேன் என்று காலை பிடித்து கேட்கவும் மன்னிக்க மறுக்கிறார். பிறகு எவனோ ஒரு இடியட் அந்த வழியா போனவன் ஃபோனை எடுத்து அவளுக்கு போன் பண்ணி இருக்கான் என்று திட்டுகிறார்.

நம்பரை டெலிட் பண்ணியாச்சு: வீட்ல இருக்குற அப்பா, அம்மா நம்பரை மம்மி, டாடி என்று சேவ் பண்ணது மாதிரி தான் அந்த இடியட் நம்பரை எப்பவோ சேவ் பண்ணுனேன். அவளை மறந்து விட்டதுனால இதை பத்தி எனக்கு ஞாபகம் வரல. இப்ப அவன் நம்பரை டெலிட் பண்ணி உன் நம்பரை வைஃப்னு சேவ் பண்ணுறேன் என்று வீரமாக போனை எடுக்க பாக்கெட்டில் தேடுகிறார். அங்கே போன் இல்லை. பிறகு அங்கே இங்கேயுமாக வீட்டிற்குள் தேடி ஒரு வழியாக போனை எடுத்து மாற்றுகிறார்.
பக்தி பழமான கோபி: உங்களால எவ்வளவு அவமானம் என ராதிகா கோபத்தோடு திட்டி கொண்டு இருக்க, சத்தியமா குடிக்க மாட்டேன் நம்பு என்று சொல்ல, ராதிகா தொடாதீங்க என திட்டுகிறார். பிறகு கோபி குளித்து பூஜை அறையில் விளக்கேற்றி கடவுளிடம் என்னை காப்பாத்துங்க என வீட்டிற்கு வந்து சூடத்தின் மீது சத்தியம் செய்கிறார்.

ஈஸ்வரியின் முடிவு: மறுபக்கம் ஈஸ்வரி அழுது கொண்டிருக்கிறார். ராமமூர்த்தி சமாதானம் செய்ய செழியனும் அங்கு வந்துவிடுகிறார். இருவரும் சமாதானம் செய்து கொண்டிருக்கும் போது ஈஸ்வரி செழியன் இடம் உங்க அப்பாவுக்கு போன் பண்ணி ஏதாவது ஒரு இடத்துக்கு வர சொல்லு அவன்கிட்ட நான் பேசணும் என்று சொல்கிறார். அனைவரும் அதிர்ச்சி ஆகின்றனர். இத்துடன் முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications