செழியனால் வீட்டிற்கு வரும் கோபி..ஈஸ்வரி முடிவால் பரிதாபமாக ராதிகா..பாக்கியா எடுக்கும் முடிவு?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ஏப்ரல் 13ஆம் தேதியில் இருந்து 15 ஆம் தேதி வரைக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
அதில் மது போதையில் இருந்த கோபியை செழியன் வீட்டிற்கு கூட்டிக்கொண்டு வருகிறார்.
கோபியை பார்த்த பாக்கியா அதிர்ச்சியில் கோபமாக இருக்கிறார்.

பாக்கியலட்சுமி சீரியலில் பலரும் எதிர்பார்த்திருந்து இருந்த சண்டை பரபரப்பான காட்சிகள் ஒளிபரப்பாக தொடங்கி இருக்கிறது. இந்த வாரத்திற்கான ப்ரோமோவில் மீண்டும் குடித்துவிட்டு கோபி பாக்யாவின் வீட்டிற்கே வந்திருக்கிறார். இனி ராதிகா என்ன செய்யப் போகிறார் என்பது பலருடைய எதிர்பார்ப்பாக இருக்கிறது. ஏற்கனவே சாமி முன்னாடி சத்தியம் செய்த கோபி இன்றைய எபிசோட்டில் மீண்டும் குடித்து இருக்கிறார்.
குடித்துவிட்டு தள்ளாடி நடக்க முடியாமல் இருந்த கோபியை அங்கே பிசினஸ் மீட்டிங்க்காக சென்றிருந்த செழியன் கூட்டிக்கொண்டு காரில் வந்து கொண்டிருக்க, கோபி என்னை ராதிகா வீட்டுக்கு கூட்டிட்டு போயிடாத அவ நல்லவ இல்லை. என்னை திட்டுவா என்று கூறி நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு போயிரு என்று செழியன் இடம் என்னிடம் கூறுகிறார்.

இதனால் செழியன் கோபியை வீட்டிலிருந்து கூட்டிக்கொண்டு வர, கோபி குடித்துவிட்டு தள்ளாடிய படி வருவதே பார்த்த ஈஸ்வரி கோபியை ரூமுக்கு கூட்டிட்டு போ என்று சொல்ல, எழில் இவரை எதுக்கு இங்க கூட்டிட்டு வந்தா, அந்த வீட்ல கொண்டு விடு, அவர் இந்த வீட்டை விட்டு போன பிறகு அவருக்கும் இந்த வீட்டுக்கும் எந்த சம்பந்தமும் என்று சரி என்னை திட்டுகிறார்.

அதற்கு ஈஸ்வரி டேய் அவன் இந்த வீட்டை விட்டு போயிட்டானா இந்த வீட்டில சம்பந்தம் இல்லைன்னு ஆகிடாது அவன் இனி இந்த வீட்டில் தான் இருப்பான் என்று கராராக பேசிக்கொண்டு கோபியை ரூமுக்கு கூட்டிக்கொண்டு போகிறார். இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கும் பாக்கியா அதிர்ச்சியில் அப்படியே உறைந்து இருக்கிறார்.

இந்த நிலையில் ராதிகாவின் வீட்டிற்கு ஏற்கனவே ராதிகாவின் அம்மா வந்து, கோபி அவங்க அம்மாவை பார்க்க வீட்டுக்கு போனால் நீயும் போ என்று சொல்லிக் கொடுத்திருப்பதால் இனி ராதிகாவும் இதே வீட்டில் வந்து இருந்து பிரச்சனை செய்ய போகிறாரா? அதற்கு பாக்கியா என்ன மாதிரி முடிவெடுக்கப் போகிறார். பாக்கியா இதே வீட்டில் இருப்பாரா? அல்லது பாக்கியா வீட்டை விட்டு கிளம்பப் போகிறாரா? என்பது வரும் எபிசோட்டில் பார்க்கலாம்.
-
"முத்து ஜெயித்த நேரத்தில் வந்த புதிய சிக்கல்!"... ரோகிணி போன் காலால் தலைகீழான சிறகடிக்க ஆசை கதை -
பிக் பாஸ் வீட்டுக்குள் இப்போது சாதாரண மக்கள்.. வெற்றியா? விபரீதமா? உண்மையான சவால் இதுதான்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications